சீனா மீது நடவடிக்கை: பிபின் ராவத் எச்சரிக்கை

Updated : ஆக 26, 2020 | Added : ஆக 24, 2020 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரின் லடாக் பகுதியில் சீனாவின் அத்துமீறல் தொடர்பான பேச்சு தோல்வி அடைந்தால், ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்வதும் பரிசீலனையில் உள்ளது என, முப்படைகளின் தலைமை தளபதி, பிபின் ராவத் கூறினார்.ஜம்மு - காஷ்மீரின் லடாக்கில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், சீன ராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்பாக, இரு நாடுகளின் ராணுவம் மற்றும் துாதரக அதிகாரிகள், பேச்சு
China, Military option, Bipin Rawat, LAC, India

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரின் லடாக் பகுதியில் சீனாவின் அத்துமீறல் தொடர்பான பேச்சு தோல்வி அடைந்தால், ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்வதும் பரிசீலனையில் உள்ளது என, முப்படைகளின் தலைமை தளபதி, பிபின் ராவத் கூறினார்.ஜம்மு - காஷ்மீரின் லடாக்கில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், சீன ராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்பாக, இரு நாடுகளின் ராணுவம் மற்றும் துாதரக அதிகாரிகள், பேச்சு நடத்தி வருகின்றனர். இதில் தோல்வி ஏற்பட்டால், நம் தரப்பில், ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளதாக, டில்லியில், முப்படைகளின் தலைமை தளபதி, பிபின் ராவத், நேற்று கூறினார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது: கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் கொங்ரங் நாலா உள்ளிட்ட பல பகுதிகளில், சீன ராணுவத்தினரின் அத்துமீறல்கள் தொடர்பாக, அந்நாட்டு ராணுவம் மற்றும் துாதரக அதிகாரிகளுடன், பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களாக தொடரும் பேச்சுவார்த்தையில், இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த பேச்சு தோல்வி அடைந்தால், நம் தரப்பில், ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.ஆனால், லடாக் பகுதியில், சீன ராணுவத்தின் அத்துமீறல்களை முறியடிக்க, நம் தரப்பில் எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக, விரிவான தகவல்களை வழங்க, அவர் மறுத்துவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,இந்தியா
25-ஆக-202017:20:59 IST Report Abuse
sahayadhas தாக்குதல் நடத்துங்கள் அடுத்த எலக்சன் வரை wt பண்ண வேண்டாம்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
25-ஆக-202007:02:36 IST Report Abuse
duruvasar ராவத் அவர்களே கொஞ்சம் வெயிட் செய்யுங்க. இங்கே பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களில் அறிவுறை வழங்க அண்ணன் பொன்ராஜ்,மற்றும் அவரது தம்பிகள், குட்டிகள், குஞ்சுகள் என ஒரு பெட்டாலியன் அறிவு ஜீவிகள் இருக்காங்க. அவங்க வேணுங்கற ஆலோசனை வழங்குவார்கள்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-ஆக-202004:45:11 IST Report Abuse
J.V. Iyer திபெத் தனி நாடானால் எல்லா எல்லை பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வரும்.
Rate this:
Anand - chennai,இந்தியா
25-ஆக-202011:36:31 IST Report Abuse
Anand//கொக்கு தலையில் வெண்ணையை வைத்து அது உருகியபின் பிடிக்கலாம்....// என்ன செய்வது உள்ளுக்குள்ளேயே அந்நிய சொம்பு தூக்கி கருங்காலிகள் இருக்கிறார்கள், அவர்களையும் போட்டு தள்ளி பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டியுள்ளது....
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
25-ஆக-202023:05:22 IST Report Abuse
Amal Anandanதினமலர் பிஜேபி ஆதரவு கருத்துக்களை மட்டுமே போடுமோ? அப்படி என்றால் மாற்று கருத்து உள்ளவர்கள் வரவேண்டாம் என்று நினைக்கிறீர்களா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X