மன்னிப்பு கேட்க முடியாது: பிரஷாந்த் பூஷன் மனு| Dinamalar

மன்னிப்பு கேட்க முடியாது: பிரஷாந்த் பூஷன் மனு

Updated : ஆக 26, 2020 | Added : ஆக 24, 2020 | கருத்துகள் (30) | |
புதுடில்லி : தன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மன்னிப்பு கேட்க முடியாது என, பிரபல வழக்கறிஞர், பிரஷாந்த் பூஷன் மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 'அவ்வாறு மன்னிப்பு கேட்டால், அது நேர்மையானதாக இருக்காது' என, அவர் குறிப்பிட்டுள்ளார்.பிரபல வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான, பிரஷாந்த் பூஷன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குறித்தும், நீதித் துறை செயல்பாடுகள்
Prashant Bhushan, apologise, Supreme Court, SC, மன்னிப்பு, கேட்க முடியாது, பிரசாந்த் பூஷன், திட்டவட்டம்

புதுடில்லி : தன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மன்னிப்பு கேட்க முடியாது என, பிரபல வழக்கறிஞர், பிரஷாந்த் பூஷன் மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 'அவ்வாறு மன்னிப்பு கேட்டால், அது நேர்மையானதாக இருக்காது' என, அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான, பிரஷாந்த் பூஷன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குறித்தும், நீதித் துறை செயல்பாடுகள் குறித்தும், சமூக வலைதளத்தில் விமர்சித்திருந்தார். இதை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக, உச்ச நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.இந்த வழக்கில், பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என்றும், உச்ச நீதிமன்றம் அறிவித்தது. கடைசி வாய்ப்பாக, மன்னிப்பு கேட்கும்படி, நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.இந்த நிலையில், பிரஷாந்த் பூஷன் சார்பில், துணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில் அவர் கூறியுள்ளதாவது:நான் நீதிமன்றம் மீதும், நீதித் துறை மீதும் மிகுந்த நம்பிக்கை, மரியாதை வைத்துள்ளேன். அதற்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் அல்ல. நீதித் துறை இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும், அதில் தவறு ஏற்பட்டால் அதை சுட்டிக் காட்ட வேண்டும் என்றும், நாட்டின் குடிமக்களில் ஒருவனாக கருத்தைதெரிவித்தேன்.நான் நல்ல எண்ணத்தில் தான் அதை குறிப்பிட்டுள்ளேன். இந்த நிலையில், நான் மன்னிப்பு கேட்டால், அது நேர்மையானதாக இருக்காது. என்னுடைய மனசாட்சி மற்றும் நீதித் துறையை அவமதிப்பதாக அது அமைந்துவிடும். நேர்மையான முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தான், இந்த நீதிமன்றம் கூறியுள்ளது.ஆனால், நான் மன்னிப்பு கேட்டால், அது வெறும் வார்த்தையாகவே இருக்கும். நேர்மையானதாக இருக்காது. மேலும் கருத்து கூறியதற்கான என்னுடைய நோக்கமும் முறியடிக்கப்பட்டுவிடும். அதனால், மன்னிப்பு கேட்க முடியாது. இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த வழக்கில், ஆறு மாதம் சிறை அல்லது 2,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X