கோட்டையையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும்: ஸ்டாலின்

Updated : ஆக 26, 2020 | Added : ஆக 24, 2020 | கருத்துகள் (83) | |
Advertisement
சென்னை : ''அ.தி.மு.க., வினரிடமிருந்து, கோட்டையையும், மக்களையும் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.நீலகிரி மாவட்ட, தி.மு.க., சார்பில், உதகையில் நிறுவப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவ சிலையை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று திறந்து வைத்து, ஸ்டாலின் பேசியதாவது:'மாநில முதல்வர் தாயுள்ளத்தோடு இருக்க வேண்டும்' என,
DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின்

சென்னை : ''அ.தி.மு.க., வினரிடமிருந்து, கோட்டையையும், மக்களையும் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

நீலகிரி மாவட்ட, தி.மு.க., சார்பில், உதகையில் நிறுவப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவ சிலையை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று திறந்து வைத்து, ஸ்டாலின் பேசியதாவது:'மாநில முதல்வர் தாயுள்ளத்தோடு இருக்க வேண்டும்' என, கருணாநிதி கூறினார். அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் என்பர்; அழாத பிள்ளைக்கும் பால் தரும் பொறுப்பு தாய்க்கும் உண்டு; இந்த அரசுக்கும் உண்டு.

தாய் ஆரோக்கியமாக இருந்தால், துாங்கிக் கொண்டிருக்கும் பிள்ளையையும் தட்டி எழுப்பி, பால் தருவார். அந்தளவுக்கு பரிவு மிக்க தாய் தான் இந்த அரசு என, தன் ஆட்சிக்கான இலக்கணத்தை, முதல்வராக இருந்த போது கருணாநிதி கூறினார். அப்படித்தான் அவர் ஆட்சி செய்தார். அதனால் தான் அவரை, இந்த உலகம் இன்னும் வாழ்த்திக் கொண்டிருக்கிறது.

ஆனால், இன்றைக்கு அ.தி.மு.க., அரசு, அழுத பிள்ளையை பற்றியும் கவலைப்படுவது இல்லை; அழாத பிள்ளையைப் பற்றியும் கவலைப்படவில்லை.பசியை போக்கும் உணவு தராமல், பட்டினி போட்டு, எல்லா பிள்ளைகளையும் கதறி அழ வைக்கும் அரசாக இருக்கிறது. அ.தி.மு.க., வினரிடம் இருந்து கோட்டையையும், மக்களையும் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.


'நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும்'



மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு, ஸ்டாலின் எழுதிய கடிதம்: இந்த ஆண்டுக்கான, நீட் - ஜே.இ.இ., தேர்வுகளை, 25 லட்சம் மாணவர்கள் எழுதுவர். தேர்வு எழுத வரும் யாருக்காவது வைரஸ் தொற்று இருந்தால், நாடு முழுதும், மீண்டும் ஒரு தொற்று அலை உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

மாணவர்களின் உயிரை பணயம் வைத்து, எந்தவொரு முடிவும் அவசரகதியில் எடுக்கக் கூடாது. மாணவர்களின் உடல் நலனையும், எதிர்காலத்தையும் அரசு கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும். கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் வரை, நீட் - ஜே.இ.இ., தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Radhakrishnan Subramanian - Mahé,செசேல்ஸ்
25-ஆக-202022:56:31 IST Report Abuse
Radhakrishnan Subramanian இவர்கள் சென்றமுறை ஆட்சி செய்த லட்சணத்தை யாரும் மறந்து இருக்கமாட்டார்கள். தமிழகம் இருட்டில். இவர் தோப்பனார் ஐந்தாறு படத்துக்கு கதை வசனம் எழுதி பண் கொழித்துக்கொண்டிருந்தார். இவர் மகனும் தும்பிகளும் எல்லாருடைய நிலத்தை ஆட்டைய போடுவதில் பிசியாக இருந்தனர். இவரும் பெட்டியை வாங்கிக்கோண்டு, நியூட்டோரானா திட்டம், மீத்தேன் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் பற்றி ஒன்றை படித்து புரிந்து கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்திட்டுவிட்டு பிறகு அதையே எதிர்த்து இரல் கொடுத்துக்கொண்டிருந்தார். இவர்கள் ஆட்சி இருண்ட காலம் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்
Rate this:
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
25-ஆக-202020:49:57 IST Report Abuse
thamodaran chinnasamy ஆஹா ஆஹா என்னமா கூவுதுப்பார் பாவிப்பயபுள்ள, நல்ல கூவு சுடலை . ஏதோ கூவனுமே என்று கூவரது மக்களுக்கு நன்றாகத்தெரிகிறது / புரிகிறது.
Rate this:
Cancel
25-ஆக-202017:31:23 IST Report Abuse
theruvasagan 25 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத வந்தால் கொரோனா தொற்று அபாயம் உள்ளதால் நீட் தேர்வு தள்ளிவைக்கவேண்டுமாம். அப்ப பல கோடி வாக்காளர்கள் தேர்தல் சமயத்தில் வாக்குச் சாவடிக்கு சென்றால் எப்படிப்பட்ட விபரீதம் நடக்கும் என்பதை கருத்தில் கொண்டு தேர்தலையே ரத்து செய்துவிடலாமா தமிழனக் காவலரே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X