கோட்டையையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும்: ஸ்டாலின்| Dinamalar

கோட்டையையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும்: ஸ்டாலின்

Updated : ஆக 26, 2020 | Added : ஆக 24, 2020 | கருத்துகள் (83) | |
சென்னை : ''அ.தி.மு.க., வினரிடமிருந்து, கோட்டையையும், மக்களையும் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.நீலகிரி மாவட்ட, தி.மு.க., சார்பில், உதகையில் நிறுவப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவ சிலையை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று திறந்து வைத்து, ஸ்டாலின் பேசியதாவது:'மாநில முதல்வர் தாயுள்ளத்தோடு இருக்க வேண்டும்' என,
DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின்

சென்னை : ''அ.தி.மு.க., வினரிடமிருந்து, கோட்டையையும், மக்களையும் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

நீலகிரி மாவட்ட, தி.மு.க., சார்பில், உதகையில் நிறுவப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவ சிலையை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று திறந்து வைத்து, ஸ்டாலின் பேசியதாவது:'மாநில முதல்வர் தாயுள்ளத்தோடு இருக்க வேண்டும்' என, கருணாநிதி கூறினார். அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் என்பர்; அழாத பிள்ளைக்கும் பால் தரும் பொறுப்பு தாய்க்கும் உண்டு; இந்த அரசுக்கும் உண்டு.

தாய் ஆரோக்கியமாக இருந்தால், துாங்கிக் கொண்டிருக்கும் பிள்ளையையும் தட்டி எழுப்பி, பால் தருவார். அந்தளவுக்கு பரிவு மிக்க தாய் தான் இந்த அரசு என, தன் ஆட்சிக்கான இலக்கணத்தை, முதல்வராக இருந்த போது கருணாநிதி கூறினார். அப்படித்தான் அவர் ஆட்சி செய்தார். அதனால் தான் அவரை, இந்த உலகம் இன்னும் வாழ்த்திக் கொண்டிருக்கிறது.

ஆனால், இன்றைக்கு அ.தி.மு.க., அரசு, அழுத பிள்ளையை பற்றியும் கவலைப்படுவது இல்லை; அழாத பிள்ளையைப் பற்றியும் கவலைப்படவில்லை.பசியை போக்கும் உணவு தராமல், பட்டினி போட்டு, எல்லா பிள்ளைகளையும் கதறி அழ வைக்கும் அரசாக இருக்கிறது. அ.தி.மு.க., வினரிடம் இருந்து கோட்டையையும், மக்களையும் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.


'நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும்'



மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு, ஸ்டாலின் எழுதிய கடிதம்: இந்த ஆண்டுக்கான, நீட் - ஜே.இ.இ., தேர்வுகளை, 25 லட்சம் மாணவர்கள் எழுதுவர். தேர்வு எழுத வரும் யாருக்காவது வைரஸ் தொற்று இருந்தால், நாடு முழுதும், மீண்டும் ஒரு தொற்று அலை உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

மாணவர்களின் உயிரை பணயம் வைத்து, எந்தவொரு முடிவும் அவசரகதியில் எடுக்கக் கூடாது. மாணவர்களின் உடல் நலனையும், எதிர்காலத்தையும் அரசு கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும். கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் வரை, நீட் - ஜே.இ.இ., தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X