கொரோனா தடுப்பூசி தயாரிப்பு: ரூ.3,000 கோடியில் புதிய திட்டம்

Updated : ஆக 26, 2020 | Added : ஆக 24, 2020 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு, தயாரிப்பு, வினியோகம் ஆகியவற்றுக்காக, 3,௦௦௦ கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 'மிஷன் கோவிட் சுரக் ஷா' என்ற திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்து, மத்திய சுகாதார துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேசிய உயிரிதொழில்நுட்பத் துறை, மத்திய அரசிடம், கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு தொடர்பான
COVID19, Corona Virus, vaccine, Corona Vaccine, Corona, தடுப்பூசி, கொரோனா தடுப்பூசி

புதுடில்லி: கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு, தயாரிப்பு, வினியோகம் ஆகியவற்றுக்காக, 3,௦௦௦ கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 'மிஷன் கோவிட் சுரக் ஷா' என்ற திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இது குறித்து, மத்திய சுகாதார துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேசிய உயிரிதொழில்நுட்பத் துறை, மத்திய அரசிடம், கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு தொடர்பான திட்டத்தை அளித்துள்ளது. அதில், கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கவும், பரிசோதனை செய்யவும், தயாரித்து சந்தைப்படுத்தவும், 3,௦௦௦ கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், ஒரு நிதியம் ஏற்படுத்த வேண்டும் என, பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மத்திய அரசு, 'மிஷன் கோவிட் சுரக் ஷா' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது. அடுத்த ஓராண்டிற்குள்ளாக, குறைந்தபட்சம், ஆறு தடுப்பூசி மருந்துகள் உருவாக்கி, பரிசோதனை மேற்கொண்டு, உரிய உரிமங்களுடன், தயாரித்து, நாடு முழுதும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசி மருந்தை, மனிதர்களுக்கு செலுத்துவது தொடர்பான, இரண்டாம் கட்ட ஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல, புனே நகரைச் சேர்ந்த, சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி மருந்திற்கு, இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனை மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, எச்.டி.டி., பயோடெக் நிறுவனம், அமெரிக்காவின், ஜெனோவா பயோபார்மா சூட்டிக்கல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, எம்.ஆர்.என்.ஏ., தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இதன் பரிசோதனை, இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
25-ஆக-202017:53:34 IST Report Abuse
Tamilnesan கொரநா தடுப்பூசி விஷயத்தில் சரியான ஒருங்கிணைப்பு அரசாங்கத்தில் இல்லை. மக்களின் இன்னுயிர் முதலில் காக்கப்பட வேண்டும். பிறகு தான், ராக்கெட் தயாரிப்பு போன்ற விஷயங்கள். தடுப்பூசி உடனே கிடைக்க ஏற்பாடு செய்ய வக்கில்லாத அரசு எப்படி மக்கள் நலனுக்கான அரசாக இருக்க முடியும். மக்கள் உயிர் போனால் திரும்ப உயிர்ப்பிக்க முடியாது என்பதை எந்த அரசும் உணர்ந்ததாக தெரியவில்லை. உலகிலேயே இந்தியாவில் தான் மனித உயிர்கள் மலிவாக போயி விட்டது என்பது வருந்தத்தக்க விஷயம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X