சென்னை:தமிழக வளர்ச்சிக்கு தி.மு.க. தடையாக இருப்பதாக பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.தமிழக பா.ஜனதாவின் மாநில செயற்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காணொலி காட்சி மூலம் பேசியதாவது:தமிழகம் மிக நீண்ட பாரம்பரியம், கலாசாரத்தை பெற்றிருக்கும் மாநிலம். தமிழகம் ஒரு ஆன்மிக பூமி. கோவில்கள் அதிகம் நிறைந்திருக்கும் பகுதி. பண்பாடு, கலாசாரம் போல தனித்துவம் பெற்றது தமிழ் மொழி.

தேசியத்துக்கு எதிரான ஒரு கட்சி தமிழகத்தில் இருக்கிறது என்றால் அது தி.மு.க. தான். தேசிய வளர்ச்சிக்கும், தமிழக வளர்ச்சிக்கும் அக்கட்சி தடையாக இருந்து கொண்டிருக்கிறது. நாட்டை பற்றிய அக்கறை இல்லை. உதாரணத்துக்கு கருப்பர் கூட்டம் சம்பவத்தை சொல்லலாம். அதனை அவர்கள் கண்டிக்கவே இல்லை. ஆனால் இந்த விவகாரத்தில் தமிழக பா.ஜனதா அழுத்தமான முத்திரையை பதித்து இருக்கிறது.
நாட்டின் வளர்ச்சி குறித்து கவலைப்படாத தி.மு.க. உள்பட தீயசக்திகள் இனி தமிழகத்தில் இருக்கவே கூடாது. வரும் காலகட்டத்தில் தமிழகத்தில் பா.ஜனதா முக்கியமான பங்கு வகிக்க இருக்கிறது. உள்ளாட்சி மன்ற, சட்டமன்ற மற்றும் பார்லிமென்ட் தேர்தல்களில் தமிழக பா.ஜனதா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE