சர்வம் கடத்தல் மயம்...; ஆளும்கட்சியினருக்கு ஏது பயம்?

Added : ஆக 25, 2020 | |
Advertisement
தோழியின் திருமணத்தை 'ஆன்லைனில்' பார்த்து வாழ்த்து தெரிவித்து கொண்டிருந்தாள் மித்ரா. ''என்ன, மித்து. ஆன்லைன் கிளாஸா?'' கேட்டபடி வீட்டுக்குள் வந்தாள் சித்ரா.''இல்லக்கா, பிரண்ட் மேரேஜ்க்கு 'விஷ்' பண்ணிட்டு இருந்தேன்,''''ஓகே.,'' என்ற சித்ரா, ''கவர்மென்ட்டுக்கு கெட்ட பேர் தானே'ன்னு, சொல்லியே, சொைஸட்டி தலைவரை வழிக்கு கொண்டு வந்திடறாங்க,''
சர்வம் கடத்தல் மயம்...; ஆளும்கட்சியினருக்கு ஏது பயம்?

தோழியின் திருமணத்தை 'ஆன்லைனில்' பார்த்து வாழ்த்து தெரிவித்து கொண்டிருந்தாள் மித்ரா. ''என்ன, மித்து. ஆன்லைன் கிளாஸா?'' கேட்டபடி வீட்டுக்குள் வந்தாள் சித்ரா.
''இல்லக்கா, பிரண்ட் மேரேஜ்க்கு 'விஷ்' பண்ணிட்டு இருந்தேன்,''
''ஓகே.,'' என்ற சித்ரா, ''கவர்மென்ட்டுக்கு கெட்ட பேர் தானே'ன்னு, சொல்லியே, சொைஸட்டி தலைவரை வழிக்கு கொண்டு வந்திடறாங்க,'' ஆரம்பித்தாள் சித்ரா.
''பஞ்சாயத்து மேட்டருங்களா,''
''இல்லடி. குப்பாண்டம்பாளையம் சொசைட்டி கடையில, அரிசி 'ஸ்டாக்' அதிகமா இருந்தது தொடர்பா, ஒருவரை சஸ்பெண்ட் செஞ்சிட்டாங்க. அதை 'கேன்சல் செய்ய சொல்லி, ஜெ.ஆர்., ஆபீசுல இருந்து, 'இப்படி செஞ்சா நம்ம கவர்மென்ட்டுக்குத்தானே கெட்ட பேரு,'னு, சொசைட்டி தலைவருக்கு நெருக்கடி கொடுக்கறாங்களாம்''
''மாவட்டத்துல பல கடைகளிலும் ரேஷன் முறைகேடு நடக்குதாம். இதனால, 'முக்கிய அதிகாரிகளை மாத்துங்க'னு, ஆளும்கட்சி வி.ஐ.பி.,கள், சி.எம்.,-க்கு புகார் மனு அனுப்பிட்டாங்களாம்,''
-''அதுதான் சரி. அக்கா, ரேஷன் கடை வேலைக்கு 2 லகரமாம். செம வசூல் நடக்குது,''
''அடக்கொடுமையே''
''அதில, ஆளும்கட்சி நிர்வாகிகள் மூலமாக, 'மூவ்' பண்ணிய ஒருத்தரிடம், ரெண்டு 'எல்' தள்ளினா, வேலை ஓ.கே.,னு பகிரங்கமாக 'பேரம்' பேசுனாங்களாம்,''
''ஆட்சி முடியுதுல்ல. அதுக்குள்ள, வர்ற வரைக்கும் பார்த்திடலாமுனு, வசூல் வேட்டை நடத்தறாங்க போல,'' என்ற மித்ரா,
''பா.ஜ., தலைவர், எம்.எல்.ஏ., தொகுதி ஜெயிச்சா 'இன்னோவா' கார் தர்றோம்'னு அறிவிச்ச பிறகு, திருப்பூரே மாறிப்போச்சு'' என, கட்சி மேட்டருக்கு தாவினாள், மித்ரா.
''அப்படியா?''
''ஆமாங்க்கா, இதுக்காக, 'சவுத்' தொகுதி மேல, தாமரைக்காரங்க ஒரு கண்ணு வச்சுருக்காங்க. கூட்டணியில எப்படியும் பேசி வாங்கிடலாம்னு, வேலய கூட ஆரம்பிச்சிட்டாங்க...''
''ஏற்கனவே, 'மாஜி'க்கும், 'சவுத்'துக்கும் 'டக் ஆப் வார்' நடக்குது. இதனால, தொகுதியை, கூட்டணிக்கு மாத்திட்டால், தொகுதியில்லாம பண்ணிடலாம்னு இப்பவே காய் நகர்த்தறார்,''
''அத, அப்ப பார்க்கலாம் மித்து. திருப்பூர் மண்டலத்தை சேர்ந்த ஒரு அரசு டிரைவர், பழநி கிளையில் பணியாற்றுகிறார். அதிகாரிகள் தவறுகளை தட்டி கேட்டதால் பழி வாங்கும் நடவடிக்கையில், 'டிரான்ஸ்பர்' செய்யப்பட்டவர். கடந்த, ஏழு மாதங்களாக, இவருக்கு மட்டும் சம்பளம் கொடுக்கலையாம்,''
''வருமானமின்றி தவித்த டிரைவர், கலெக்டர் அலுவலகத்தில் பெட்டிஷன் கொடுத்தார். இதனால், கோபமடைந்த அதிகாரி, விசாரணை என்ற பெயரில் மிரட்டியதில், அதிகாரியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் டிரைவர். அதுக்கப்பறம் கூட, சம்பளம் போடலை. இதை தெரிஞ்சதால், காலில் விழுந்தும் கூட கருணை காட்டாத அவரை, மற்ற அலுவலர்கள் திட்டறாங்களாம்,''
அப்போது, டிவியில், 'தீயாக வேலை செய்யணும் குமாரு' படம் ஒளிபரப்பானது. அதைப்பார்த்த சித்ரா, ''அத கொஞ்சம் நிறுத்துடி,'' என்றாள்.
டிவியை அணைத்த மித்ரா, ''சூரியக்கட்சி நிர்வாகிக்கு 'செம' டோஸ் விழுந்தது தெரியுங்களா?'' என்றாள்.
''என்ன விஷயம்?''
''அக்கா, அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருத்தர், கட்சி நிலவரம் குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தினர். ஆய்வு நடப்பது குறித்து தகவல் அறிந்து, நிர்வாகியின் மொபைல் போன் நம்பரை, கேட்க முயற்சித்தனர்,''
''அப்போது, மாவட்ட நிர்வாகியின் 'அடிவிழுது' ஒருவர் ஆர்வக்கோளாறில் தனது மொபைல் போனிலிருந்து, மேலிட ஆபீசுக்கு, அழைத்து 'இருங்க, எங்க அண்ணன் பேசறார்,' எனக்கூறி போனை கொடுத்துள்ளார். மறுமுனையில் அந்த நிர்வாகி, 'லைன் போட்டு கொடுத்து பேசற அளவு, அவரென்ன பெரிய 'அப்பாடக்கரா' என கேட்டு, விளாசி தள்ளி விட்டார். இதை கேட்ட, 'செல்வ'மான நிர்வாகி அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்று விட்டாராம்,''
மித்ரா சொன்னதை கேட்டு சிரித்த சித்ரா, ''இந்த வேண்டாத வேலை எதுக்கு?'' என்றவாறு, ''உடுமலை சப்-டிவிஷனில் கேரள லாட்டரி சேல்ஸ் அள்ளுதாமே,'' என்றாள்.
''ஆமாங்க்கா, கேரள ஸ்டேட் மாதிரி, எங்கே போனாலும் கெடைக்குதாம். இதுபோக, ஒரு நம்பர் லாட்டரியும் துாள் பறக்குதாம். இதுக்காக, தனியை கடையும் உள்ளதாம். வழக்கம்போல, அந்தந்த போலீசார், 'வரி' வசூல் பண்ணிட்டு, 'கப்சிப்'னு இருக்காங்க,''
''மித்து, இதே மாதிரி, மருள்பட்டி குளத்தில் இருந்து லாரி, லாரியாக மண் கடத்தல் ஜாஸ்தியாயிடுச்சு. எந்த இடைஞ்சலும் வரக்கூடாதுன்னு, உள்ளூர் கட்சிக்காரர், போலீசாருக்கு, 'லகரங்களில்' கவனிப்பாம். ஒட்டுமொத்த ஊர் வாயை அடைச்சிட்டதால, இஷ்டத்துக்கு மண் கடத்தல் அமோகமாக நடக்குதாம்டி,''
''இந்த மண் மாபியா ஆட்கள் மீது, மாவட்ட அதிகாரி நடவடிக்கை எடுத்தா, தேவலையே அக்கா,'' ஆதங்கப்பட்ட மித்ரா, ''மாஜி மினிஸ்டர் மீது அடுக்கடுக்கான புகார், தலைமைக்கு செல்லவிடாமல் தடுக்க முயற்சி நடக்குதாம்,'' என்றாள்.
''ஏன், என்னாச்சு?''
''போன வாரம், சூரிய கட்சியின் மூத்த நிர்வாகிகள், ஆய்வு கூட்டம் போட்டாங்க. அதுல, 'மாஜி' அமைச்சர் மீது, காங்கயம் நிர்வாகிகள் அடுக்கடுக்கான புகார் வாசிச்சாங்க,''
''அதுமட்டுமில்லக்கா. 'ஐ-பேக்' நிறுவனம், அவரை பற்றி கொடுத்த ரிப்போர்ட்டும் வீக்கா இருக்காம். இதுக்காக, திருச்சிக்காரரை சரிக்கட்ட, 'மாஜி', பயணம் வெச்சுட்டாராம்,''
''எலக் ஷன் வர்றதால, எல்லாத்துக்கும் பயம்தான்,'' சொன்ன சித்ரா, ''ஓகே., மித்து, நான் கெளம்பறேன்,'' என்றவாறே புறப்பட்டாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X