அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வில் இணைந்தார் முன்னாள் ஐ.பி.எஸ்., அண்ணாமலை

Updated : ஆக 27, 2020 | Added : ஆக 25, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
ரஜினி கட்சி ஆரம்பித்தால், அதில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை, திடீரென, தன்னை, பா.ஜ.,வில் இணைத்துக் கொண்டுவிட்டார்.கர்நாடகாவில், ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றி வந்தவர், அண்ணாமலை. தமிழகத்தை சேர்ந்த இவர், தன் ஐ.பி.எஸ்., பணியை, 2019ல், ராஜினாமா செய்துவிட்டு, சொந்த ஊரான கரூர்க்கு வந்து, இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார்.ரஜினி
Annamalai, joins, BJP, Former IPS officer, Annamalai Kuppusamy

ரஜினி கட்சி ஆரம்பித்தால், அதில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை, திடீரென, தன்னை, பா.ஜ.,வில் இணைத்துக் கொண்டுவிட்டார்.

கர்நாடகாவில், ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றி வந்தவர், அண்ணாமலை. தமிழகத்தை சேர்ந்த இவர், தன் ஐ.பி.எஸ்., பணியை, 2019ல், ராஜினாமா செய்துவிட்டு, சொந்த ஊரான கரூர்க்கு வந்து, இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார்.

ரஜினி ஆரம்பிக்கப்போகும் கட்சியில் இணைவதற்காக, அண்ணாமலை, தன் பதவியை ராஜினாமா செய்ததாக, கூறப்பட்டது. ஒருகட்டத்தில், ரஜினி கட்சியின், முதல்வர் வேட்பாளரே கூட இவர் தான் என்றும் தகவல்கள் உலா வந்தன.


latest tamil newsஇந்நிலையில் தான், அதிரடி திருப்பம் நிகழ்ந்துள்ளது. நேற்று காலை முதலே, பா.ஜ.,வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில், அண்ணாமலை, பா.ஜ.,வில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாயின. ஆனால், டில்லியில் உள்ள, பா.ஜ., தலைமை அலுவலகத்தில், மதியம், 1:00 மணியளவில், தமிழக பா.ஜ., தலைவர் முருகன் மற்றும் மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் முன்னிலையில், அண்ணாமலை, பா.ஜ.,வில் இணைந்தார்.

பின், நிருபர்களிடம், அண்ணாமலை கூறியதாவது: திருக்குறளில், இறைமாட்சி என்ற தலைப்பின் கீழ் வரும், 382வது குறள், 'அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு' என்கிறது. ஆட்சி புரிகிறவரின் வீரம், கருணை, அறிவு, நிர்வாகத்திறன் எப்படியிருக்க வேண்டுமென்பதை, இந்த குறள் விளக்குகிறது.

இவை அனைத்தையுமே, பிரதமர் நரேந்திர மோடியிடம், நான் காண்கிறேன். இந்த ஈர்ப்பின் காரணமாகவே, பா.ஜ.,வில் இணைகிறேன். தேசிய உணர்வுகளை தமிழகத்தில் வளர்த்தெடுக்க வேண்டுமென, பா.ஜ.,வின் தேசிய தலைவர் நட்டா வலியுறுத்துகிறார்.


latest tamil newsஇப்பணியை, தமிழகத்தில் நிறைவேற்ற, என் நேரம், உழைப்பை வழங்கவுள்ளேன். எந்தவொரு நிபந்தனையும் இன்றியே, கட்சிக்கு வந்துள்ளேன். மற்ற கட்சிகளைப் போல பா.ஜ.,வில், பதவிகளை கேட்டு வாங்க முடியாது. கட்சிக்காக உழைத்த ஏராளமான மூத்த தலைவர்கள் ஏற்கனவே உள்ளனர். எனவே, எதையும் எதிர்பார்த்து நான் வரவில்லை.

தமிழக பா.ஜ., தலைவர் முருகனின் கீழ், தொண்டனாக பணியாற்ற, தயாராக உள்ளேன். எனக்கு, என்ன பணி வழங்கப்படுகிறதோ, அதை செய்து முடிக்கும் விசுவாசம் மிக்க தொண்டனாக, இருப்பேன்.இவ்வாறு, அண்ணாமலை கூறினார்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yuva Rajan - chennai,இந்தியா
27-ஆக-202011:07:31 IST Report Abuse
Yuva Rajan கலக்குங்க
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஆக-202000:48:04 IST Report Abuse
Ramesh R படிப்பு இருக்கு ஆனால் புத்தி இல்லை
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
01-செப்-202006:10:28 IST Report Abuse
NicoleThomsonஎல்லாத்தையும் உன்னை போல நினைத்து கொண்டால் ? எதுக்கோ மஞ்சள் காமாலையை உதாரணம் சொல்வார்கள் .......
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
26-ஆக-202019:37:42 IST Report Abuse
கொக்கி குமாரு சுடலை / உதைணா மைண்ட் வாய்ஸ்: என்னடா இது, நல்லவங்க எல்லாம் அரசியலுக்கு வர ஆரம்பிச்சுட்டாங்க...நம்ம திருட்டு பிழைப்புல மண்ணை அள்ளி வீசிடுவாங்க போல...
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
27-ஆக-202006:09:06 IST Report Abuse
Amal Anandanசேர்ந்த ஏகப்பட்ட ரௌடிகளும் உங்களுக்கு நல்லவங்கதானா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X