பொது செய்தி

இந்தியா

உலகின் அதிவேக மனித கால்குலேட்டர்; 20 வயது இந்திய இளைஞர் சாதனை

Updated : ஆக 27, 2020 | Added : ஆக 27, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement

புதுடில்லி: லண்டனில் நடந்த மனக் கணக்கீட்டுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில், கணித மேதை சகுந்தலா தேவியின் சாதனையை முறியடித்து, தங்கம் வென்ற 20 வயது இந்திய இளைஞர், 'உலகின் அதிவேக மனித கால்குலேட்டர்' என்ற பட்டத்தை பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.



latest tamil news



லண்டனில் கடந்த ஆக., 15ம் தேதி, 'மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட்'டில் மனக் கணக்கீட்டுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இப்போட்டியில், இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெர்மனி, கிரீஸ், பிரான்ஸ் மற்றும் லெபனான் உள்ளிட்ட 13 நாடுகளை சேர்ந்த 30 பேர் கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து, ஐதராபாத்தை சேர்ந்த நீலகண்ட பானு பிரகாஷ்(20) கலந்து கொண்டார். போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட அவர், சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். தங்கப்பதக்கத்தை வென்றதன் மூலம், 'உலகின் அதிவேக மனித கால்குலேட்டர்' என்ற பட்டத்தை வசப்படுத்தினார்.


latest tamil news



டில்லி பல்கலையின் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில், கணிதம் (ஹானர்ஸ்) பயின்று வருகிறார். தனது விரைவான கணித கணக்கீடுகளுக்காக, 50 லிம்கா உலக சாதனைகளையும் படைத்துள்ளார். பானு பிரகாஷ் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறுகையில், 'அவரது மூளை ஒரு கால்குலேட்டரின் வேகத்தை விட, விரைவாக கணக்கிடும் திறன் கொண்டது' என தெரிவித்துள்ளது. இந்த சாதனைகளை ஸ்காட் பிளான்ஸ்பர்க் மற்றும் சகுந்தலா தேவி போன்ற கணித மேதைகள் மட்டுமே வைத்திருந்தனர். தற்போது பானு பிரகாஷ் இச்சாதனையை படைத்துள்ளார்.


latest tamil news



இப்போட்டியில் 2வது மற்றும் 3வது இடங்களை பெற்ற போட்டியாளர்களை விட, பானு பிரகாஷ் 65 புள்ளிகள் முன்னிலையில் இருந்துள்ளார். போட்டியில், நீதிபதிகளிடம் தனது துல்லியத்தை வெளிப்படுத்த, மேலும் சில கணக்கீடுகளையும் செய்து அசத்தியுள்ளார். கணக்கில் ஆர்வமுள்ள லட்சக்கணக்கான குழந்தைகள் பயன்பெறும் வகையில், 'விஷவ் மேத்' லேப் (Vision Math lab) உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vasudevan Jayaraman - Chennai,இந்தியா
28-ஆக-202019:30:03 IST Report Abuse
Vasudevan Jayaraman greate
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
27-ஆக-202013:58:17 IST Report Abuse
Milirvan நீலகண்ட பானு பிரகாஷ்... சபாஷ்..
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
27-ஆக-202012:52:33 IST Report Abuse
Natarajan Ramanathan ஒரு காலத்தில் எனக்கு ஆங்கிலம் சரியாக தெரியாத போதும் ரேடியோவில் நடக்கும் Cadbury's quiz competition போன்றவற்றை மிகவும் ஆர்வமாக கேட்பதுண்டு. இப்போது அந்த மாதிரி QUIZ நிகழ்ச்சிகள் ஏன் டிவிக்களில் நடத்தக்கூடாது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X