சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.1.15 கோடி தங்கம் கடத்திய தம்பதி கைது

Added : ஆக 27, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 ரூ.1.15 கோடி தங்கம் கடத்திய தம்பதி கைது

கோவை; துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட, 1.15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

'வந்தே பாரத்' திட்டத்தில், இரண்டு வாரங்களுக்கு முன், துபாயில் இருந்து கோவை வந்த, 'ஏர் இந்தியா' விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. கோவை வந்த பயணியரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்த, 46 - 33 வயது தம்பதியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.எதுவும் கிடைக்காத தால், இருவரையும் தனியறையில் வைத்து சோதனை செய்தனர். அப்போது, உள்ளாடைகளில் ஆறு பாக்கெட்டுகள் இருந்ததும், தங்கத்தை பொடியாக்கி, ரசாயனங்களுடன் கலந்து, பசையாக்கி எடுத்து வந்ததும் தெரிந்தது.தம்பதியிடம் இருந்து, 1.15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.16 கிலோ தங்கத்தை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னணி என்ன?

கடந்த மார்ச் மாதம், தம்பதி, அரபு நாடுகளுக்கு சுற்றுலா சென்ற நிலையில், கொரோனாவால், ஊருக்கு திரும்ப முடியாமல்தவித்துள்ளனர்.கையில் இருந்த பணத்தை இழந்த நிலையில், ஒரு கும்பல், தம்பதிக்கு உதவி செய்ததோடு, தங்கம் கடத்தி வரச் செய்த தும், விசாரணையில் தெரிந்தது.

இதற்கிடையில், தம்பதிக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், 14 நாட்கள் தனிமைப்படுத்திய பின், இருவரையும் நேற்று, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார் என, விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
COW URINE SANGI - tamilnadu,இந்தியா
31-ஆக-202021:21:33 IST Report Abuse
COW  URINE  SANGI தம்பதியர்களின் பெயர் வெளியிடாமல் இருப்பதில் இருந்தே தெரியவில்லை அது பெரும்பான்மை அப்பாவி சமுகம் என்று , சிறுபான்மையாக இருந்தால் அவர்களின் தாத்தனுக்கு தாத்தன் பெயர் வரை வந்திருக்கும் , கூடவே , தீவிரவாதி பயங்கரவாதி , பாகிஸ்தான் பயற்சி என்றும் வந்திருக்கும் , இது சகஜம் தானே
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29-ஆக-202005:01:53 IST Report Abuse
J.V. Iyer இது ஒரு சிறு அளவு. இப்படித்தான் காலம் காலமாக....
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
27-ஆக-202012:38:28 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan தம்பதிகளின் பெயரை வெளியிடலாம். கடத்தல் கூட்டத்தின் அடையாளம் தெரியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X