சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

ஆராய்ச்சிப் பந்தயத்தில் முந்தும் 3 ஊசிகள்!

Added : ஆக 27, 2020
Share
Advertisement
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மனிதர்கள் மீதான சோதனை ஆகியவற்றில், மூன்று தடுப்பு மருந்துகள் முன்னணியில் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுசிலின் இயக்குனர், ஜெனரல் டாக்டர்.பல்ராம் பார்கவா, ஊடகங்களிடம் அண்மையில் தெரிவித்தார்.இந்த மூன்று கொரோனா தடுப்பு மருந்துகளில், இரண்டு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை என்று பார்கவா கூறினார். பாரத்
 ஆராய்ச்சிப் பந்தயத்தில் முந்தும் 3 ஊசிகள்!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மனிதர்கள் மீதான சோதனை ஆகியவற்றில், மூன்று தடுப்பு மருந்துகள் முன்னணியில் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுசிலின் இயக்குனர், ஜெனரல் டாக்டர்.பல்ராம் பார்கவா, ஊடகங்களிடம் அண்மையில் தெரிவித்தார்.இந்த மூன்று கொரோனா தடுப்பு மருந்துகளில், இரண்டு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை என்று பார்கவா கூறினார்.

பாரத் பயோடெக்கின் கோவாக்சின் (Covaxin) மற்றும் ஜைடஸ் காடிலாவின் ஜைகோவ்-டி (ZyCoV-D) ஆகியவை இந்திய தடுப்பு மருந்துகள் எனவும், ஆக்ஸ்போர்டு -அஸ்ட்ராஜெனகா நிறுவனம் உருவாக்கி, புனேயிலுள்ள சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்து வரும் தடுப்பூசி மட்டும் வெளிநாட்டு உதவியுடன் உருவாக்கப்படுவதாக பார்கவா விளக்கினார்.

சீரம் இன்டிடியூட்டின் மருந்துகளுக்கான மனித சோதனைகள், 2-பி மற்றும் 3ஆம் கட்ட சோதனைகளில் இருப்பதாக பார்கவா உறுதிப்படுத்தினார். மேலும், இந்த சோதனைகளில் 1,700 பேர் பங்கெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.ஜைடஸ் காடிலாவின் தடுப்பு மருந்துகள் 50 பேர் மீது சோதிக்கப்பட்டு, இரண்டாம் கட்டத்தை நிறைவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பாரத் பயோடெக், தன் தடுப்பு மருந்துகளை இரண்டாம் கட்ட சோதனைகள் செய்து வருகிறது எனவும் பார்கவா தெரிவித்தார்.

இந்த ஆராய்ச்சிப் பின்னணியை வைத்துத்தான், அண்மையில், மத்திய சுகாதார அமைச்சர், ஹர்ஷ் வர்த்தன், ''இந்த ஆண்டு இறுதிக்குள், இந்தியாவில் தடுப்பூசிகள் வினியோகம் துவங்கிவிடும்'' என, நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X