சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

முதல் இந்திய கொரோனா சோதனை 'கிட்'

Added : ஆக 27, 2020
Share
Advertisement
இறக்குமதி செய்த கொரோனா சோதனை 'கிட்'களையே இந்தியாவில் பயன்படுத்தி வந்த நிலையில், தில்லியை சேர்ந்த ஆஸ்கர் மெடிகேர் தயாரித்த, நோய் எதிர்பணுக்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கிட் அண்மையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.இந்த சோதனை கிட்களை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அங்கீகரித்துள்ளது. ஆஸ்கர் மெடிகேர், ஏற்கனவே, இந்தியாவிலுள்ள தன் மூன்று தொழிற்சாலைகளில், மலேரியா,
 முதல் இந்திய கொரோனா சோதனை 'கிட்'

இறக்குமதி செய்த கொரோனா சோதனை 'கிட்'களையே இந்தியாவில் பயன்படுத்தி வந்த நிலையில், தில்லியை சேர்ந்த ஆஸ்கர் மெடிகேர் தயாரித்த, நோய் எதிர்பணுக்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கிட் அண்மையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த சோதனை கிட்களை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அங்கீகரித்துள்ளது. ஆஸ்கர் மெடிகேர், ஏற்கனவே, இந்தியாவிலுள்ள தன் மூன்று தொழிற்சாலைகளில், மலேரியா, டெங்கு மற்றும் எச்.ஐ.வி., ஆகிய நோய்களைக் கண்டறியும் கிட்களையும் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.இந்த கிட் மூலம் வெறும் 20 நிமிடங்களுக்குள், கொரோனா அறிகுறியை கண்டறிய முடியும். இதன் விலை, ரூ.200 என்ற வரம்புக்குள் இருக்கும் என ஆஸ்கர் மெடிக்கேர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது, இந்தியா முழுதும் வினியோக உரிமைக்கான பேச்சு வார்த்தை நடப்பதாகவும், செப்டம்பரில், 2 லட்சம் கிட்கள் விற்பனைக்கு வரும் என்றும், அதன் பிறகு, உற்பத்தி வேகம் அதிகரிக்கப்படும் எனவும் அந் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். தினமும் அதிகபட்சமாக 5 லட்சம் கிட்களை தயாரிக்க முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X