துறைமுகங்களில் சரக்கு தேக்கம் தீர முத்தான மூன்று யோசனைகள்| Dinamalar

துறைமுகங்களில் சரக்கு தேக்கம் தீர முத்தான மூன்று யோசனைகள்

Updated : ஆக 28, 2020 | Added : ஆக 28, 2020 | கருத்துகள் (4) | |
சென்னை: லெபனான் பெய்ரூட் நகரில் அமோனியம் நைட்ரேட் கிடங்கு தீப்பற்றி வெடித்து சிதறியதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் விளைவாக சென்னை துறைமுகத்தில் தேங்கிக் கிடந்த 697 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் ரசாயனத்தை ஏலத்தில் எடுத்த ஐதராபாத் நிறுவனம், சுங்கத்துறை அனுமதியுடன் எடுத்துச் சென்றது.இந்த தேக்க முறைக்கு காரணம் இதற்கான எக்ஸ் சர்டிபிகேட்
துறைமுகங்கள், சரக்கு தேக்கம், யோசனை

சென்னை: லெபனான் பெய்ரூட் நகரில் அமோனியம் நைட்ரேட் கிடங்கு தீப்பற்றி வெடித்து சிதறியதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் விளைவாக சென்னை துறைமுகத்தில் தேங்கிக் கிடந்த 697 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் ரசாயனத்தை ஏலத்தில் எடுத்த ஐதராபாத் நிறுவனம், சுங்கத்துறை அனுமதியுடன் எடுத்துச் சென்றது.இந்த தேக்க முறைக்கு காரணம் இதற்கான எக்ஸ் சர்டிபிகேட் பெறப்படாததே.இதை தொடர்ந்து, துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் இதர சரக்கு வளாகங்களில் உள்ள தடை செய்யப்பட்ட மற்றும் முறையற்ற வகையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள பொருட்களை அப்புறப்படுத்த துரிதமாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.இனியும் நாம் மெத்தனமாக இருந்தால் உயிர் சேதம் மற்றும் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய முடியாது.
இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்


கப்பல் மற்றும் விமானம் மூலமாக கொண்டு வரப்படும் பொருட்கள், சுங்கத் துறை மூலம் விரைவான முறையில் அதன் உரிமையாளரை சென்றடைய பல புதிய அணுகுமுறைகள் கையாளப் படுகின்றன. 1996லிருந்து மின்னணு பரிமாற்ற முறையில் இடர் மேலாண்மை அமைப்பு அறிமுகப்படுத்த பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக ஒற்றைச் சாளர முறையில் 2016லிருந்து சரக்குகளை கையாளும் விதத்தில் நவீன உத்திகளை பயன்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட இந்திய நிறுவனங்கள் சென்னை துறைமுகத்தில் உள்ள சரக்கு பெட்டகங்களை தாங்களே நேரடியாகச் சென்று தொழிற்சாலைகளுக்கு எடுத்துச் செல்லும் முறை பின்பற்றப்படுகிறது.latest tamil news


சரியான முறையில் இறக்குமதி செய்யும் சரக்குகள் வெளியேற்றப்படுகின்றன.ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படுவது அந்த நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வாணிபம் ஆகும். அந்த நுழைவு வாயிலின் தோரணமாக கருதப்படுபவை அந்த நாட்டின் வாணிபக் கொள்கைகள் மற்றும் அதை செய்வதற்கான சட்டங்களுமே.நேர்மறையாக பெறப்படும் பொருட்கள் அனைத்தும் சிறந்த வழிகாட்டுதலின் படி துறைமுகம் மற்றும் விமான நிலையத்திலிருந்து விரைவில் வெளியேற்றப்படுகின்றன. ஆனால் தவறுதலாக எடுத்துவரப்பட்ட பொருளை சுங்கத்துறை வெளியில் அனுப்ப மிகவும் கடினமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டி உள்ளது.
காலதாமதம் ஏன்


இறக்குமதி சரக்கு, அதுவும் தடைசெய்யப்பட்ட அல்லது நிபந்தனைகளுக்கு உட்பட்ட பொருட்கள் தகுந்த வழிகாட்டுதலுடன் இந்தியாவிற்குள் வந்தாலும் சுங்கத்துறை அல்லாத ஏனைய மத்திய துறைகளின் ஒப்புதல்களை பெறுவது கட்டாயம்.இப்படி 54க்கும் மேலான முகமை நிறுவனங்களின் ஆய்வு அறிக்கைகளின் காலதாமதம் மற்றும் தஸ்தாவேஜுகள் சரிபார்த்து அனுமதி கொடுக்க எடுக்கும் நேரத்தினால் சரக்குகள் துறைமுகங்களில் முடக்கப்படுகின்றன. அரசு அமைப்புகளின் அனுமதி இல்லாமல், ஆய்வு செய்யப்பட வேண்டிய பொருட்களை வெளியேற்ற சுங்கத்துறைக்கு அதிகாரம் இல்லை.
தேக்கத்திற்கான காரணங்கள்


இவ்வித சரக்குகள் தேங்கிக் கிடப்பதை மூன்றாகப் பிரிக்கலாம். சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவுகளால் புலனாய்வுக்கு நிலுவையில் இருக்கும் மற்றும் அது சார்ந்த நீதிமன்ற வழக்குகள். இரண்டாவதாக இறக்குமதியாளர்களால் கைவிடப்பட்ட, உரிமை கோரப்படாத பொருட்கள், மூன்றாவதாக அரசு முகமைகளால் ஏற்படும் கால தாமதம். இதனால் நம் நாட்டிற்கு ஆண்டுதோறும் ஏற்படும் இழப்பு பல கோடிகளைத் தாண்டும்.தேக்கநிலை சரக்குகளுக்கு உடனடியாக தீர்வு காண்பதன் மூலம் இந்திய வணிக மற்றும் வாணிப உறவுகள் மேம்படுவதோடு பொருளாதாரமும் வளர்ச்சி அடையும்.சுங்கத்துறை அல்லாத பல காரணிகள் ஏலம் விடுவதில் கடைப்பிடிக்க வேண்டி இருப்பதால் 'சுங்க சரக்கு தேக்கம்' என்ற கப்பலை துரிதமாக செயல்படுத்த சிறந்த முடிவுகள் தேவைப்படுகின்றன. சுங்கத்துறை ஏலத்தில் முன் அனுபவம் உள்ள சில தனியார் நிறுவனங்களை இந்தியாவிலுள்ள எல்லா துறைமுகங்களிலும் பணியமர்த்தி மேலும் இ-ஏலத்தின் காலத்தை சுருக்கி விரைவாக பொருட்களை அகற்றவேண்டும்.
என்ன செய்ய வேண்டும்


தேக்கமுற்ற பொருட்கள் யாருக்கும் உபயோகப்படாமல் குப்பையாக போவதை தவிர்க்க சில யோசனைகளை அமல் படுத்துவதன் மூலம் சரக்கு தேக்க நிலையிலிருந்து சுங்கத்துறை பூரணமாக விடுபடலாம்.1. பொருட்களை உடனடியாக வெளியேற்ற அதில் முன் அனுபவமுள்ள சுங்க முகவர்களை மத்திய அரசு உட்படுத்தி சுங்கத்துறை கிளியரன்ஸ் கொடுப்பதன் மூலம் தேக்க நிலையை தடுக்கலாம்.2. சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு, வருவாய் உளவுத் துறை இயக்குனரகம் மற்றும் ஏனைய சுங்கத்துறை சார் புலனாய்வு அமைப்புகள் வரையறுக்கப்பட்ட கால அளவில் ஆய்வு மேற்கொண்டு சந்தேகத்துக்குரிய சரக்குகளுக்கு தீர்வை ஏற்படுத்தி சரக்குகளை சுங்கத்துறை கட்டுப்பாட்டிலிருந்து வெளியேற்ற முன்னுரிமை கொடுக்கப்படும் வகையில் சுங்க சட்டம் 1962 திருத்தம் செய்யப்பட வேண்டும்.3. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், இறக்குமதியாளர்கள் கைவிட்ட பொருட்களை வெளியேற்ற நீதிமன்றங்களை நாடி, வழக்குகளை முடிக்க எடுத்துக் கொள்ளும் காலம் அதிகமாக உள்ளது. எனவே தொடர்புள்ள அனைத்து மத்திய துறைகளும் ஒருங்கிணைந்து, விரைவில் சரக்குகளை வெளியேற்ற தனி தீர்ப்பாயத்தை ஏற்படுத்த வேண்டும்.எந்தவிதமான சரக்குகள் இந்தியாவிற்குள் வந்தாலும் அது விரைவான முறையில் இறக்குமதியாளரை அல்லது உரிமையாளரை சென்று அடையும் வகையில் தீர்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். இதற்காக சுங்க சரக்கு வெளியேற்ற சட்டம் என்ற புதிய சட்டத்தை இயற்ற வேண்டும். இதன் மூலம் தேக்க நிலையில் உள்ள பொருட்கள் விரைவாக உரிமையாளரை சென்றடைய ஒற்றை சாளர முறையை சுங்கத்துறை பின்பற்ற வேண்டும்.-கே.வி.வி.கிரி,முன்னாள் தலைவர்சென்னை, சுங்க முகவர்கள் சங்கம்.


98410 38295

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X