7 மாநில முதல்வர்கள் கேட்டால் மத்திய அரசு வாபஸ் பெற்று விடுமா?

Updated : ஆக 28, 2020 | Added : ஆக 28, 2020 | கருத்துகள் (23) | |
Advertisement
ஜே.இ.இ., - நீட் தேர்வுகளை தள்ளி வைக்க கோரி, ஏழு மாநில முதல்வர்கள், உச்ச நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன். அதற்கான முயற்சியை எடுத்த, காங்., தலைவர் சோனியாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.'ஏழு மாநில முதல்வர்கள் கேட்டுக் கொண்டால், உடனே, மத்திய அரசு வாபஸ் பெற்று விடுமா...' என, எதிர்க்கேள்வி கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின்
7 மாநில முதல்வர்கள் கேட்டால் மத்திய அரசு வாபஸ் பெற்று விடுமா?

ஜே.இ.இ., - நீட் தேர்வுகளை தள்ளி வைக்க கோரி, ஏழு மாநில முதல்வர்கள், உச்ச நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன். அதற்கான முயற்சியை எடுத்த, காங்., தலைவர் சோனியாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


'ஏழு மாநில முதல்வர்கள் கேட்டுக் கொண்டால், உடனே, மத்திய அரசு வாபஸ் பெற்று விடுமா...' என, எதிர்க்கேள்வி கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கை.



திராவிடத்தால் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதர அனைத்து மாநிலங்களை விடவும், அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது தமிழகம், என்பது புள்ளி விபரங்களில் தெளிவாகிறது. பா.ஜ., ஆளும் மாநிலங்கள், தமிழகத்தை விட ஏன் பின்தங்கியுள்ளன என்பதை, பா.ஜ., தலைவர்கள் விளக்க வேண்டும்.


'திராவிடத்தால், தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது என, புள்ளி விபரத்தில் கூறப்பட்டுள்ளதா; சும்மா, அடிச்சு விடாதீங்க. இ.பி.எஸ்., அரசின் திட்டங்களால், செயல்பாடுகளால் தான் வளர்ச்சி கிடைத்துள்ளது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., மகளிரணிச் செயலர் கனிமொழி அறிக்கை.



உதயநிதி ஸ்டாலின் போலித்தனத்தின் உச்சம். இதுவரை விநாயகர் சதுர்த்திக்கு யாரும், தி.மு.க.,வில் வாழ்த்து சொல்லவில்லை. ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லக் கூடாது; தேசியக் கொடியை ஏற்றக்கூடாது என்பதே, தி.மு.க.,வின் நிலைப்பாடு.


'நீங்க அந்தக் கட்சியில் இருந்ததில்லையே; அவர்களின் கொள்கை, கோட்பாடுகளை கரைச்சு குடித்துள்ளது போல பேசுகிறீர்களே...' என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி.



இந்த ஆண்டு கொரோனா காரணமாக, அரசு ஒதுக்கீட்டில் உள்ள இன்ஜினியரிங் இடங்களுக்கு, கல்விக் கட்டணம் உயர்த்தப்படாது. அரியர் தேர்வுக்காக விண்ணப்பித்த அனைவரும் தேர்ச்சி பெறுவர்.


latest tamil news





'இன்ஜினியரிங் படிக்க மாணவர்கள் வருவரா என முதலில் பாருங்கள்...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் பேட்டி.



தி.மு.க., தலைவராக, மூன்றாண்டுகளாக இருக்கும் ஸ்டாலினுக்கு சவாலாகத் தான் இருக்கிறது. வரும் சட்டசபை தேர்தலிலும் இந்த சவாலை எதிர்கொள்ள ஸ்டாலின் தயாராக இருக்கிறார்.


'மூன்றாண்டுகளாக ஏராளமான முக்கிய தலைவர்கள், ஸ்டாலின் தலைமைக்கு எதிராக பேசி, வெளியேறியதை வைத்து சொல்கிறீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.



மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணிகளில், ஓ.பி.சி., இட ஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்படுகிறது. எளியோரை வலியோர் வீழ்த்தும் கொடுமை, காலம் காலமாக தொடர்கிறது. இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டப்பட்டு, சமூக நீதி நிலைநிறுத்தப்படும் நாள் எந்நாளோ?


'அந்நாள் வந்து விட்டால், தமிழக அரசியல் தலைவர்களுக்கு, வேலை இருக்காதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) இந்துமத விரோதி சுடலை கான் எந்த மாநிலத்தின் முதலைவர் தினமும் அறிக்கை உட்டுட்டு இருக்கா
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
28-ஆக-202015:46:55 IST Report Abuse
siriyaar தமிழகம் சிறப்பாக இருக்க சேர சோழ பாண்டியமன்னர்கள் சேர்த்த செல்வமும் கட்டமைப்புமே காரணம். பல்லாயிரம் கோவில்களில் திருடியே திராவிடர்கள் திருநாடு வாழ்கிறது.அதனாலயே தமிழகம் முன்னிலையில் இருக்கு.
Rate this:
Cancel
28-ஆக-202014:54:58 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் நீட் தேர்வு முறையைக் கொண்டு வந்தது காங்கிரஸ் தலைமையிலான யூ.பி.ஏ. அரசு. அதே சமயத்தில், அதே கூட்டணியில் இருந்தது இதே திமுக. இதைப்பத்தி யாரும் பேசுறதில்ல. திமுக எப்பொழுதும் இரட்டை வேடம்; நயவஞ்சகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X