சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கொரோனாவுக்கு பிடித்த குளிர்காலம் வருகிறது!

Added : ஆக 28, 2020
Share
Advertisement
மற்ற எந்த வைரசையும் போலவே கோவிட்-19 வைரசும், குளிர்காலத்தில் தான் வேகமாக பரவும் என்கின்றனர் தொற்று நோயியல் வல்லுனர்கள். அதன்படி, இந்தியாவில், குளிர்காலமான டிசம்பர் -பிப்ரவரி காலகட்டத்தில் மீண்டும் கொரோனாவின் பரவல் மிக வேகமாக இருக்கக்கூடும் என்றே வல்லுனர்கள் கணிக்கின்றனர்.குளிர் காலத்தில், பொது இடங்களின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் அதிக நேரம் தொற்றும் தன்மையுடனும்,
 கொரோனாவுக்கு பிடித்த குளிர்காலம் வருகிறது!

மற்ற எந்த வைரசையும் போலவே கோவிட்-19 வைரசும், குளிர்காலத்தில் தான் வேகமாக பரவும் என்கின்றனர் தொற்று நோயியல் வல்லுனர்கள். அதன்படி, இந்தியாவில், குளிர்காலமான டிசம்பர் -பிப்ரவரி காலகட்டத்தில் மீண்டும் கொரோனாவின் பரவல் மிக வேகமாக இருக்கக்கூடும் என்றே வல்லுனர்கள் கணிக்கின்றனர்.

குளிர் காலத்தில், பொது இடங்களின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் அதிக நேரம் தொற்றும் தன்மையுடனும், பல்கிப் பெருகும் திறனுடனும் இருக்கும் என்பது மருத்துவர் ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.சீனாவில், வுஹான் பகுதியில் கொரோனா பரவத் துவங்கியது, 2019 டிசம்பரில் தான் என்பதை வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அடுத்து, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது.எனவே, கைகளை சோப்பு போட்டு அடிக்கடி கழுவுவது, முக கவசம் அணிவது, பொது இடங்களில் சமூக இடைவெளி விட்டு புழங்குவது என்ற அறிவுறைகளை இன்னும் அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. குளிர்காலமும் நெருங்கி வருகிறது. அதற்குள் நம்பகமான தடுப்பூசிகள் நம்மை நெருங்கிவிட்டால், தெம்பாக வெளியே வரலாம் என மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X