மருத்துவ உலகை திரும்பிப் பார்க்க வைத்த செய்தி இது. ஹாங்காங்கில், 33 வயதுள்ள ஆண் ஒருவருக்கு, கடந்த வாரம், மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை, ஹாங்காங் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம், அந்த நபருக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டது. பிறகு சிகிச்சை பெற்றதன் மூலம், அவரது உடலில் கொரோனா தாக்கம் இல்லை என, மருத்துவர்கள் அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். குணமடைந்த அவர், தொழில் நிமித்தமாக ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்டார்.ஸ்பெயின் சென்ற அவர், பிறகு இங்கிலாந்து வந்து, அடுத்து ஹாங்காங் வந்துள்ளார்.
வந்த சில நாட்களில் மீண்டும் அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்படவே, மருத்துவ பரிசோதனை செய்ய வந்தார். அப்போதுதான், ஒரு முறை வந்து குணமானவருக்கு மீண்டும் கொரோனா தொற்று வரலாம் என மருத்துவர்கள் அறிந்தனர்.இப்படி மறு தொற்று ஏற்படுவோருக்கு, தடுப்பூசியை , 'பூஸ்டர் ஷாட்' ஆக மீண்டும் போடுவது பலன் தரும் எனவும் ஹாங்காங் மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE