பொது செய்தி

தமிழ்நாடு

அரசியலுக்கு வந்தா இப்படித்தான்: மாஜி ஐபிஎஸ் அண்ணாமலை மீது போலீஸ் வழக்கு

Updated : ஆக 28, 2020 | Added : ஆக 28, 2020 | கருத்துகள் (60)
Share
Advertisement
கோவை: சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை உள்ளிட்ட 5 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்த தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்து சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்தார். கோவை வந்த அவருக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
அண்ணாமலை, ஊரடங்குவிதி,  போலீசார், வழக்குப்பதிவு,  பாஜ, பா.ஜ.,

கோவை: சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை உள்ளிட்ட 5 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்த தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்து சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்தார். கோவை வந்த அவருக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் மலர் மகுடம் சூட்டி, வேல் அளித்தனர். கூட்டமும் கூட்டப்பட்டது. பிரசார வாகனத்தில் ஏறி, அங்கு இருந்தோர் மத்தியில் அண்ணாமலை பேசினார்.


latest tamil news


இந்நிலையில், ஊரடங்கு விதிகளை மீறியதாக, அண்ணாமலை, செல்வக்குமார், எஸ்.ஆர். சேகர், மாவட்ட தலைவர் நந்தகுமார், மாவட்ட துணை தலைவர் கனகசபாபதி ஆகியோர் மீது 5 பிரிவுகளில் கோவை, காந்திபுரம் அருகேயுள்ள காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sesh - Dubai,பகாமஸ்
31-ஆக-202009:26:17 IST Report Abuse
Sesh last 3 days more than 100000 people attended the Mr.Vasantha Kumar last ritual at chennai and funeral ceremony at his own village. is the same law will be applicable to them also.
Rate this:
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
31-ஆக-202006:01:12 IST Report Abuse
Ramasami Venkatesan பணத்தினால் ஓட்டுகளை வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் பல கட்சிகள் தமிழ்நாட்டில் கணக்கு போட்டு ஜெயிப்பது நிச்சயம் என்ற இறுமாப்பில் இருக்கின்றன. இதை முறியடிக்க மக்களால் மட்டுமே முடியும். பணம் வாங்கமாட்டோம் என்று தீவிரமாக இருந்தால், அவர்களுக்கும் உங்களிடம் ஒரு பயமிருக்கும். காசு வாங்குவதால் அவர்களுக்கு அடிமையாகிவிடுகிறீர்கள் 5 வருடங்களுக்கு அவர்களும் கோடிகளில் பார்த்துவிடுகிறார்கள். இந்த கோடிகள் உங்கள் வியர்வை சிந்திய உழைப்புகளின் விரயம். அப்படி ஓட்டுக்கு பணம் வாங்கும் ஒரு சிலரும் ஒரு ஓட்டுக்கு 1 லட்சம் என்று விலை நிர்ணயம் செய்யுங்கள், யார் வருகிறார்கள் பார்ப்போம். யாருமே ஓட்டுக்கு பணமோ, விலையில்லா பொருட்களோ பெற்றுக் கொள்ளாமல் நல்ல ஆட்சிக்கு ஓட்டளித்தால் நாட்டுக்கும் சுபிட்சம், மக்களின் வாழ்வாதாரமும் உயரும் சாசுவத நிலையில். நாட்டின் நலம் உங்கள் கையில்தான் - யோசியுங்கள் தேர்தல் வரை பின் வாக்களியுங்கள். உங்கள் ஓட்டு நாடு நலம் பெற, அரசியல்வாதிகளோ அவர்கள் குடும்பமோ செழிக்க அல்ல.
Rate this:
Thyagavel - Pondicherry,இந்தியா
04-செப்-202016:17:30 IST Report Abuse
Thyagavelதாங்கள் தற்போது நன்றாக இருப்பிர்கள் என்று நினைக்கிறன். இன்னும் 25 ஆண்டுகள் ஆகும் நிலைமை சீராக. மரியாதைக்குரிய அப்துல்கலாம் அவர்கள் கண்ட ஒரே கனவு பலிக்காமல் போனது என்றால் அது 2020 இல் இந்தியா வல்லரசு ஆகும் என்பது தான். முந்தைய ஜென்மத்தில் பாவம் செய்திருப்பின் இந்தியநாயக பிறக்க காட்டுவாயாக என்பர் கடவுள் திட்டம் என்று நினைக்கிறன்....
Rate this:
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
30-ஆக-202015:05:33 IST Report Abuse
Ramasami Venkatesan ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து, பாமரனாகி, அரசியலில் வந்து, சிறைக்கு செல்லாவிட்டால், அவரை அரசியல்வாதி என்று எதிர்கட்சியில் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். கேள்வி கேட்பார்கள் இவர் என்ன எங்களைப்போல் சிறைக்கு சென்றவரா என கேட்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X