தோமாவின் இந்திய வருகை! வரலாறா? கட்டுக்கதையா?

Updated : ஆக 29, 2020 | Added : ஆக 28, 2020 | |
Advertisement
சில தினங்களுக்கு முன்பு, பிரதமர் மோடி 'கேரளாவின் மார்தோமா சர்ச் புனித தோமா அவர்களின் வழிகாட்டுதலில் செயல்பட்டு வருகிறது' என்று சொன்ன போது, அது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.பிரதமரின் பேச்சு ஒரு கட்டுக்கதையை உண்மையாக்கிவிடுமோ என்று கவலைப்பட்டு வருகின்றனர்.கேரளாவில் செயல்பட்டு வரும் மார்தோமா சர்ச்சின் தலைவர் டாக்டர் ஜோஸஃப் மார்தோமா மெட்ரோபாலிட்டன். கடந்த
தோமா, இந்திய வருகை,  வரலாறா? கட்டுக்கதையா?

சில தினங்களுக்கு முன்பு, பிரதமர் மோடி 'கேரளாவின் மார்தோமா சர்ச் புனித தோமா அவர்களின் வழிகாட்டுதலில் செயல்பட்டு வருகிறது' என்று சொன்ன போது, அது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.பிரதமரின் பேச்சு ஒரு கட்டுக்கதையை உண்மையாக்கிவிடுமோ என்று கவலைப்பட்டு வருகின்றனர்.

கேரளாவில் செயல்பட்டு வரும் மார்தோமா சர்ச்சின் தலைவர் டாக்டர் ஜோஸஃப் மார்தோமா மெட்ரோபாலிட்டன். கடந்த ஜூன் 27ஆம் தேதி இவரின் 90 ஆவது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். அப்போது மார்தோமா சர்ச், இயேசுவின் சீடரான புனித தாமஸ் அவர்களின் கொள்கையோடு பிணைந்துள்ளது. இந்தியா எப்போதுமே வெவ்வேறு ஆன்மீக நம்பிக்கைகளுக்கு தனது கதவைத் திறந்தே வைத்திருக்கிறது.புனித தோமாவின் பங்களிப்புகள், அவரைப் பின்பற்றும் இந்திய கிறிஸ்தவ சமூகத்தின் கோட்பாடுகள் ஆழமானவை' என்று கூறினார்.

பிரதமர் மோடி, 'புனித தோமா இந்தியா வந்தார்' என்று சொல்லவே இல்லை. ஆனால் அவருடைய பேச்சை பயன்படுத்தி போர்ச்சுக்கீசியர் காலத்தில் பரப்பப்பட்ட 'தோமாவின் இந்திய வருகை' என்ற கட்டுக்கதைக்கு மீண்டும் உயிர் கொடுக்க பட்டு விடுமோ என்ற அச்சத்தை கிளப்பியிருக்கிறது.யார் இந்த புனித தோமா?இவர் இயேசுவின் 12 சீடர்களில் ஒருவர்.இயேசுவின் உயிர்த்தெழுதலை இவர் நம்ப வில்லை என்பதால் இவர் 'சந்தேக தாமஸ்' என்றும் விமர்சிக்க படுகிறார். இதைத்தாண்டி தோமாவின் வரலாறு சரித்திரத்தில் தெளிவாக பதியப்படவில்லை.புனித தோமா தென்னிந்தியாவிற்கு வந்ததாக சொல்லப்படுவது கட்டுக்கதையா?

மலங்கர மார்தோமா சிரியன் சர்ச் தனது வெப்சைட்டில், 'தங்களுடைய சர்ச்சை உருவாக்கியது புனித தோமா தான்' என்று கூறியுள்ளனர். ஆனால் பல வரலாற்று ஆய்வாளர்கள் இதனை ஏற்றுக் கொள்வது கிடையாது. அவ்வளவு ஏன்? போப் பெனிடிக்ட் XVI கூட தோமா தென்னிந்தியாவிற்கு வந்து கிறிஸ்துவ மதத்தை பரப்பினார் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.இதை பிரபல எழுத்தாளர் ஈஸ்வர் ஷரன் உறுதிப்படுத்துகிறார்.

கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, போப் பெனிடிக்ட் கிறிஸ்துவ மக்களிடையே பேசும்போது, 'சிரியா, பாரசீகம் தொடங்கி இந்தியாவின் மேற்கு எல்லை வரை தோமா கிறிஸ்துவ மதத்தை பரப்பியதாக' கூறினார். அதாவது தோமா தென்னிந்தியாவிற்கு வரவே இல்லை மாறாக இன்றைய பாகிஸ்தான் வரை மட்டுமே வந்திருக்கிறார் என்பதை உணர்த்தும் வகையில் அவரது பேச்சு அமைந்திருந்தது.ஆனால் மறுநாளே, வாட்டிகன் வெப்சைட் போப் 'தோமா தென் இந்தியாவிற்கு வந்தார்' என்று பேசியதாக பதிவு மாற்றப்பட்டது மக்களிடையேஅதிர்ச்சியை ஏற்படுத்தியது.தோமா இந்தியா வந்ததற்கு சரித்திர ஆதாரம் உள்ளதா?தோமா தென்னிந்தியா வந்ததற்கு எந்த சரித்திர ஆதாரமும் கிடையாது. நவம்பர் 13 1952 ஆம் ஆண்டு வாட்டிகன் அலுவலகம், கேரளா கிறிஸ்துவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பியது. அதில் தோமா நவம்பர் 21, 52 கி பியில் முசிறி என்ற கொடுங்கலூரில் வந்து இறங்கியதாக சொல்லப்படுவது உறுதிப்படுத்தப்படுதாத தகவல் என்று கூறியுள்ளனர். பிரபல எழுத்தாளர் ஈஸ்வரன் வாடிகன் கொடுத்த இந்த செய்தியை உறுதிப்படுத்த முயற்சித்தபோது வாடிகன் தெளிவான பதிலை தரவில்லை.

மேலும் 1986 மற்றும் 1999ம் ஆண்டு என்று இருமுறை தென் இந்தியாவிற்கு வந்தார் போப் இரண்டாம் ஜான் பால். அப்போது தோமாவின் கல்லறை என்று சொல்லப்படும் இடத்தில் அவர் வழிபடவும் செய்தார்.

ஆனால் அப்போதுகூட தோமா தென் இந்தியாவிற்கு குறிப்பாக மயிலாப்பூருக்கு முதலாம் நூற்றாண்டில் வந்தார் என்பதை உறுதிபடுத்தும் வகையில் அவர் எதையும் பேசவில்லை. போப் இரண்டாம் ஜான்பால் அவர்களே ஒரு தீவிரமான. அவர் மதமாற்றத்தை தீவிரமாக ஆதரிப்பவர். அப்படிப்பட்டவர் எனில் தோமாவின் இந்திய வருகை கதையை பேசவில்லை? போப்பின் இந்த செயல் கேரளாவில் சிறியன் கத்தோலிக்க திருச்சபையை சஞ்சலப்படுத்தி விட்டது.தோமாவின் இந்திய வருகை என்ற கதையை வைத்து தான் அவர்கள் இத்தனை ஆண்டுகாலம் செயல்பட்டு வருகின்றனர். சிரியன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்களை உயர் சாதி இந்துக்களிடம் இருந்து வந்தவர்கள் என்று நம்புகின்றனர். இவர்களை தோமா கிறிஸ்தவராக மாற்றியதாக கூறப்படுகிறது.

ஆனால் உண்மையில் நான்காம் நூற்றாண்டில் அகதிகளாக இந்தியாவிற்கு வந்த சிரிய கிறிஸ்தவர்களின் கதையை மறைக்கவே தோமாவின் கதை இட்டுக் கட்டப் பட்டிருக்கலாம் என்று அறிஞர்கள் நம்புகின்றனர். சிரியன் கிறிஸ்தவர்கள் அணி டோக் மற்றும் டமஸ்கஸ் ஆகிய பகுதிகளில் இருந்து இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி வந்தனர்.காரணம் சிரியன் கிறிஸ்தவர்களுக்கு அவர்களின் சொந்த நாட்டிலேயே எக்கச்சக்க எதிர்ப்புகள் கிளம்ப தொடங்கியிருந்தது.அகதிகளாக இந்தியாவிற்கு வந்த கிறிஸ்தவர்களை இந்துக்கள் வரவேற்று நல்லபடியாக பார்த்துக் கொண்டனர்.

அகதி சிறியன் கிறிஸ்தவர்களுக்கு இந்துக்களை மதம் மாற்ற வேண்டும் என்ற எண்ணம் வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வரும் வரை ஏற்படவில்லை. வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்த பிறகு வியாபாரத்தை சேர்த்து மத மாற்றத்தையும் தொடங்கினான். அப்போதிலிருந்து கட்டாய மதமாற்றம் தொடங்கியது.

ஈஸ்வர் ஷரன்

மிஷன் காளி

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://missionkaali.org/&ved=2ahUKEwj64cLd3b_ rAhVl6XMBHXAEAPEQFjABegQIARAB&usg=AOvVaw24b2hxuhhyiyoQaIzjt6I7

இக்கட்டுரையின் தலைப்பு, குறிப்பிடப்படும் சம்பவங்கள், கருத்துக்கள், புள்ளி விபரங்கள் அனைத்தும் கட்டுரை ஆசிரியருடையவை. எக்காரணம் கொண்டும் அவை தினமலர் அல்லது தினமலர் இணையதளத்தின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல. -
நிர்வாகி,
தினமலர்.காம்

Advertisement
வாசகர் கருத்து

Sai - Paris,பிரான்ஸ்
13-ஜூலை-202123:57:12 IST Report Abuse
Sai A shrine dedicated to "Our Lady of Expectation" (Mother Mary) was built in 1523 on top of the mount. The altar of this shrine was built on the spot where St. Thomas' death traditionally believed to have been occurred. At the northern foot of the mount, is a gateway of four impressive arches surmounted by a cross bearing the inscribed date 1547. வள்ளுவரை சந்தித்ததாகவும் ????? உண்மையில்லை
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
03-ஜன-202103:28:38 IST Report Abuse
Sai அப்போ சென்னையில் செயின்ட் தாமஸ் மவுண்ட் என்று ஒன்று உள்ளது ஜார்ஜ் கோட்டையிலிருந்து அந்த மவுண்டுக்கு ஆங்கிலேயர்கள் செல்லவே மவுண்ட் ரோடு வந்தது எல்லாம் பொய்யா? தமிழில் பரங்கி மலை என்று சொன்னார்கள் MGR தேர்தலில் நின்று வென்று முதல்வரானார் நிற்க மோடி எதை சொன்னாலும் பிரச்சினை ஆகிடுதே
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
30-அக்-202021:13:43 IST Report Abuse
Bhaskaran தோமஸ் கேரளத்தில் வந்திறங்கி மதப்பணி செய்து அங்கிருந்த நம்பூதிரி பிராமணர்களை கிறிஸ்தவமதத்தை ஏற்றுக்கொள்ளும்படி செய்தார்.அவர்கள்தான் இன்றிருக்கும் சிரியன் கிறிஸ்தவர்கள் பிறகு தமிழகம் வந்து சென்னை வந்து மதப்பணி செய்தார் .வள்ளுவரை சந்தித்ததாகவும் பிறகு சின்னமலையில் ஈட்டியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் பின் இப்போது சாந்தோம் தேவாலயம் இருக்கும் இடத்தில அடக்கம் செய்யப்பட்டு அங்கு ஒரு சிறிய தேவாலயம் கட்டப்பட்ட தாகவும் .பிறகு போர்துகீசியர்களால் இப்போதிருக்கும் தேவாலயம் கட்டப்பட்டதாகவும் .தோமாவின் உடல் ரோம் எடுத்துச்செல்லப்பட்டதாகவும் படித்துள்ளோம் .இதுநாள்வரையிருந்த பாப்பரசர்களைவிட இப்போதிருக்கும் பாப்பரசர் விவரமானவரா ..மக்களின் நம்பிக்கையில் இரண்டாயிரம் ஆண்டுகளாக ஊறி இருக்கும் சிலவற்றை இப்போது இல்லை என்று சொல்லி ஒருசாராரின் மனங்களை புண்படுத்தவேண்டிய தேவையில்லை என்பதே பெருவாரி தமிழர்களின் கருத்தாக இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X