கடந்த லோக்சபா தேர்தல் தோல்வி காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகினார். இதனையடுத்து, கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்று ஒராண்டு நிறைவு பெறுகிறது. இந்நிலையில், காங்கிரசுக்கு சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய, முழு நேர தலைவர் தேவை என அக்கட்சியை சேர்ந்த 23 தலைவர்கள் கடிதம் எழுதினர். அந்த கடிதத்தில் குலாம்நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த் சர்மா, மணிஷ் திவாரி, மிலிந்த் தியோரா, உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
அவர்களில் பெயர் வெளியிட விரும்பாத ஒரு தலைவர், என்டிடிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ராகுல் கட்சியை வழிநடத்தவும், 2024ல் 400 இடங்களை பெறவும் உதவ முடியும் என்று கூறும் நிலையில் நாங்கள் இல்லை. 2014 மற்றும் 2019 இரண்டு லோக்சபா தேர்தல்களில் கட்சியால், தேவையான இடங்களை பெற முடியவில்லை முடியவில்லை என்பதை நாம் உணர வேண்டும்.

நாக்பூர் முதல் சிம்லா வரை கட்சிக்கு 16 இடங்களே கிடைத்தன. அதில் 8 இடங்கள் பஞ்சாபில் இருந்து வந்தவை. நாம் இந்தியாவில் இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். களத்தில் வேறு ஒரு உண்மை இருக்கிறது. அடுத்த கூட்டம் நடந்தால், இந்த விவகாரம் குறித்து எனது கருத்துகளை முன்வைப்பேன். இந்த யுத்தம் தனிநபர்களை பற்றியது இல்லை. பிரச்னைகளை பற்றியது. சிறந்த அரசியலமைப்பு விஷயங்களின் அடிப்படையில், மாற்று கருத்துகளை உருவாக்க உதவுவது கட்சிக்கு உதவும்.
தலைமை பதவி குறித்து கடிதம் எழுதியவர்களில் பெரும்பாலானோர் நீண்ட காலம் அரசியலில் உள்ளனர். அவர்கள் கட்சிக்கு உறுதியுடன் உள்ளனர். சோனியா மீது உயர்ந்த நம்பிக்கை உள்ளதாக கூறிகிறார்கள். எழுப்பப்பட்ட பிரச்னைகள் காரணமாக, கட்சி பிழைத்து பா.ஜ.,வை வெற்றி பெற உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE