ஈரானை உலுக்கிய ஆணவக் கொலை: தந்தைக்கு 9 ஆண்டு சிறை

Updated : ஆக 29, 2020 | Added : ஆக 29, 2020 | கருத்துகள் (17) | |
Advertisement
தெஹ்ரான்: ஈரானில் 14 வயது சிறுமி ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அச்சிறுமியின் தந்தைக்கு 9 ஆண்டு சிறைத் தணடனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த மே மாதம் 14 வயதான ரோமினா அஷ்ரப்பின் மரணம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோமினா அஷ்ரப்பின் காதலை ஏற்க மறுத்த அவர் தந்தை, அவரை ஆணவ கொலை செய்ததை தொடர்ந்து இந்த விவகாரம் ஈரானில் பூதாகரமாக கிளம்பியது. ஈரான் தலைநகர்

தெஹ்ரான்: ஈரானில் 14 வயது சிறுமி ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அச்சிறுமியின் தந்தைக்கு 9 ஆண்டு சிறைத் தணடனை விதிக்கப்பட்டுள்ளது.latest tamil news
ஈரானில் கடந்த மே மாதம் 14 வயதான ரோமினா அஷ்ரப்பின் மரணம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோமினா அஷ்ரப்பின் காதலை ஏற்க மறுத்த அவர் தந்தை, அவரை ஆணவ கொலை செய்ததை தொடர்ந்து இந்த விவகாரம் ஈரானில் பூதாகரமாக கிளம்பியது. ஈரான் தலைநகர் தெஹ்ரானின் வடக்கு மேற்கு பகுதியில் இச்சம்பவம் நடந்தது. இந்த ஆணவ கொலைத் தொடர்பாக ரோமினா அஷ்ரப்பின் தந்தை ரேசா அஷ்ரப் கைது செய்யப்பட்டார்.


latest tamil newsரோமினாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியும் சமூக வலைதளங்களில் பலரும் #RominaAshrafi என்று டிரெண்ட் செய்ததால் சர்வதேச அளவில் இவ்வழக்குக்கு வெளிச்சம் கிடைத்தது. இந்த ஆணவ கொலைத் தொடர்பாக ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி வருத்தம் தெரிவிதார். மேலும் 'இந்த ஆணவ கொலைத் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படும்' என்றும் ஈரான் அரசு தெரிவித்தது.

இந்த நிலையில் ரேசா அஷ்ரப் குற்றவாளி என்று உறுதிச் செய்யப்பட்டதால் அவருக்கு 9 வருடம் சிறைத் தண்டனை விதித்து, ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'ஈரானில் நடைபெறும் மரணங்களில் 20 சதவீதம் ஆணவ கொலைகள் தான். ஆணவக் கொலைக்கு இந்தத் தண்டனை குறைவு' என, அங்குள்ள மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
I love Bharatham - chennai,இந்தியா
04-செப்-202013:12:53 IST Report Abuse
I love Bharatham அமைதி படை யை ....சாரி அமைதி மார்க்கத்தை காணும் ....ஒ..ஈரான் சவூதி எதிரி இல்லையா ...மறந்து விட்டேன் ...வாழ்க ...அமைதி.......
Rate this:
Cancel
03-செப்-202011:21:07 IST Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு ஆணவக்கொலைகளை கண்டிக்கும்.. இஸ்லாம் இந்தியாவில் இப்படித்தான் உள்ளது. சன்னி, ஷியா, அஹமெடிய, லெப்பை, பதான், உருது பேசும் துலுக்கர், ஹிந்து பேசும் துலுக்கர், தமிழ் பேசும் துலுக்கர்
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஆக-202012:40:06 IST Report Abuse
Ramesh R பல்லுக்கு பல் - உய்ருக்கு உயிர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X