ரயில் சேவையை தொடங்க வேண்டும்: மே.வங்க அரசு வலியுறுத்தல்

Updated : ஆக 29, 2020 | Added : ஆக 29, 2020 | கருத்துகள் (6) | |
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளை மத்திய அரசு மீண்டும் தொடங்க வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த 5 மாதங்களாக பஸ் மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சில மாநிலங்கள் மட்டும் பஸ் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது. ஆனால், ரயில் சேவை இன்னும் தொடங்கப்படாததால், ஆக.,31ம்
WestBengal, Government, Requests, RailwayBoard, Resume, LocalTrain, MetroServices, மேற்குவங்கம், அரசு, ரயில், மெட்ரோ, கோரிக்கை, கடிதம்

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளை மத்திய அரசு மீண்டும் தொடங்க வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த 5 மாதங்களாக பஸ் மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சில மாநிலங்கள் மட்டும் பஸ் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது. ஆனால், ரயில் சேவை இன்னும் தொடங்கப்படாததால், ஆக.,31ம் தேதியுடன் முடிவடையக்கூடிய காலக்கட்டத்தில் அடுத்தக்கட்ட தளர்வுகளில் அனைத்து மாநிலங்களிலும் பஸ் போக்குவரத்து தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குமாறு மத்திய அரசுக்கு மேற்கு வங்க அரசு கோரிக்கை விடுத்துள்ளது.


latest tamil news


இதுதொடர்பாக மாநில உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதார நடவடிக்கைகளுடன் ரயில் சேவைகளை தொடங்கலாம் என்றும், மாநிலத்தில் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ சேவைகளை தொடங்க அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், இதனால் அரசுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் டில்லி, மும்பை, புனே, நாக்பூர், சென்னை, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் இருந்து கோல்கட்டாவுக்கு விமான சேவைகள் கடந்த ஜூலை 6ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது செப்டம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் தொடங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-செப்-202011:22:57 IST Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு விஷம் விஷம் விஷம்
Rate this:
Cancel
29-ஆக-202017:52:25 IST Report Abuse
தகடூர் பாலா ரெண்டு மாசம் முன் இந்தம்மா தான் சொல்லுச்சு சிறப்பு ரயில் விட்டுத்தான் கொரோணா WB இல் பரவியது என்று
Rate this:
Cancel
சோணகிரி - குன்றியம்,இந்தியா
29-ஆக-202016:26:34 IST Report Abuse
சோணகிரி ஜேஇஇ, நீட் தேர்வு நடத்துவதற்கு மட்டும் கொரோனா அபாயம்... ரயில்சேவையை துவக்குவதற்கு கொரோனா அபாயம் இல்லையா?? என்ன அரசியல் க்கா இது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X