ஊரடங்கில் கிடைத்தது லீவு : உருவானது கவிதை

Updated : ஆக 30, 2020 | Added : ஆக 30, 2020
Share
Advertisement
ஊரடங்கு உத்தரவால், வெளியில் செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி இருந்த மக்கள் பலர், மொபைல் போனிலும், 'டிவி' பார்ப்பதிலும் மூழ்கியுள்ளனர்.ஆனால் கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் நல்ல புத்தகங்களை படிப்பதிலும், எழுதுவதிலும் கவனம் செலுத்தி, சிறந்த படைப்புகளை உருவாக்கி உள்ளனர்.கோவை இருகூரை சேர்ந்தவர் கவிஞர் பொன் இளவேனில். இவர் கோவை நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு,
 ஊரடங்கில் கிடைத்தது லீவு : உருவானது கவிதை

ஊரடங்கு உத்தரவால், வெளியில் செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி இருந்த மக்கள் பலர், மொபைல் போனிலும், 'டிவி' பார்ப்பதிலும் மூழ்கியுள்ளனர்.ஆனால் கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் நல்ல புத்தகங்களை படிப்பதிலும், எழுதுவதிலும் கவனம் செலுத்தி, சிறந்த படைப்புகளை உருவாக்கி உள்ளனர்.கோவை இருகூரை சேர்ந்தவர் கவிஞர் பொன் இளவேனில். இவர் கோவை நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு, வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் ஊரடங்கின் போது வீட்டில் இந்த, 40 நாட்களில், 160 கவிதைகளை எழுதி, 'மெய்யுறுதல்' எனும் தனி நுாலாக வெளியிட்டு இருக்கிறார்.
கொரோனா பாதிப்பு காலத்தில், வெளி வந்த முதல் கவிதை நுால் இது!''எனக்கு புத்தகங்கள் படிப்பதிலும், கவிதை எழுதுவதிலும் அதிகம் ஆர்வம் உண்டு. விடுமுறை நாட்களில் மட்டும்தான் படிப்பேன்; எழுதுவேன். இந்த ஊரடங்கால் மொத்தமாக, 40 நாட்கள் விடுமுறை கிடைத்தது. வீட்டில் தனியாகதான் இருந்தேன். உறங்கும் நேரம் போக, மற்ற எல்லா நேரங்களிலும், கவிதைகள் தான் எழுதினேன்.ஒட்டு மொத்த உலகத்தையும், மரண பயத்தில் உறைய வைத்து விட்ட கொரோனா வைரஸ் பரவல் காலத்தை, கவிதையில் உறைய வைக்க வேண்டும் என, நினைத்தேன். எழுதி முடித்து விட்டேன். வாசித்து பாருங்கள்!'' என்கிறார் இளவேனில்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X