ஜொலிக்கும் 'சொப்பன சுந்தரி' மயக்கும் மணிஷா யாதவ்

Added : ஆக 30, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
தமிழில், 'வழக்கு எண் 18/9'ல் அறிமுகமாகி 'ஆதலால் காதல் செய்வீர்',' ஜன்னல் ஓரம்', 'பட்டைய கிளப்பணும் பாண்டியா', ' திரிஷா இல்லைனா நயன்தாரா', 'ஒரு குப்பை கதை', 'சண்டிமுனி'... எனு அடுத்தடுத்த படங்களில் நடித்துதனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகை மணிஷா யாதவ். இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் சுறுசுறுப்பாக இருப்பவர் . ரசிகர்களில் கேள்விகளை தைரியமக
ஜொலிக்கும் 'சொப்பன சுந்தரி' மயக்கும் மணிஷா யாதவ்

தமிழில், 'வழக்கு எண் 18/9'ல் அறிமுகமாகி 'ஆதலால் காதல் செய்வீர்',' ஜன்னல் ஓரம்', 'பட்டைய கிளப்பணும் பாண்டியா', ' திரிஷா இல்லைனா நயன்தாரா', 'ஒரு குப்பை கதை', 'சண்டிமுனி'... எனு அடுத்தடுத்த படங்களில் நடித்துதனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகை மணிஷா யாதவ். இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் சுறுசுறுப்பாக இருப்பவர் . ரசிகர்களில் கேள்விகளை தைரியமக எதிர்கொண்டு ஜாலியாக பதில் அளித்து மனசை கொள்ளையடிப்பவர், அவர் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக....


* சினிமா வாய்ப்புகள்



'லாக்டவுன்'னால் புதுப்படங்களில் நடிப்பது தொடர்பான கதைகள் மட்டும் கேட்கிறேன். நாயகியை மையமாக வைத்து நல்ல கதைகள் இரண்டு கிடைத்துள்ளன. 'நார்மல்' ஆனவுடன் நடிக்க 'சூட்டிங்' கிளம்பிடுவேன்.


* நடிப்பு பற்றி



நடிப்பு என் கனவு. அது கடவுள் கொடுத்த 'கிப்ட்'. நான் உண்மையில 'லக்கி' தான். அடுத்தடுத்த படம் வாய்ப்புகள் வருகின்றன. உண்மையான உழைப்பை தருவேன்.


* நடிக்க விரும்பும் கேரக்டர்


'வழக்கு எண்' படத்தில் இருந்து எதார்த்த வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் அடிப்படையில் நடக்கும் சம்பவங்கள் அடிப்படையில் தான் என் கேரக்டர்கள் இதுவரை அமைக்கப்பட்டுள்ளது. ஜோதிகா போல் வித்தியாச கேரக்டர்களில் நடிக்க ஆசை.


* உங்கள் ரியல் கேரக்டர்


என் மனது என்ன சொல்லுகிறதோ அதன்படி தான் முடிவு எடுப்பது என் இயல்பு


* உங்களை கவர்ந்த நடிகைகள்


ஜோதிகா, டாப்ஸி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா எனு சொல்லிக்கொண்டே போகலாம்.


* நீங்க 'போல்டா'ன பெண்ணாமே


பெண்கள் பெரும்பாலும் 'போல்டா' தான் இருக்கனும். குறிப்பா சினிமா துறையில் அப்படி இருந்தால் தான் அவர்களுக்கு பாதுகாப்பு


*சினிமாவில் சவால்கள்


சவால்களை சந்தித்து தான் சினிமாவிற்குள் நுழைய முடியும். இது கதாநாயகிகளுக்கு கொஞ்சம் அதிகம் இருக்கு. சமத்தா இருந்தா எந்த சவால்களையும் சந்திக்கலாம்.


* லாக்டவுன் நாட்களில்


ஜாலியா குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகிறேன். சமையல் கத்துக்கிட்டேன். புதுப்படங்களுக்கான கதைதான் கேட்க அதுிகக நேரம் கிடைக்குது. குட்டி குதைகள் கவிதை எழுதுகிறேன்.


*அந்த... சொப்பன சுந்தரி....


ஹலோ, அதை இன்னும் மறக்கலையா, ' சென்னை 28' படத்தில் 'சொப்பன சுந்தரியை இப்போ யாரு வச்சிருக்கா...' என்ற பாட்டு எதார்த்தமாக அமைந்து செம 'ஹிட்' ஆகிடுச்சு. ரசிகர்கள் கொண்டாடினர். அவர்களுக்கு நன்றி. இப்பவும் என்னை ' சொப்பன சுந்தரி'னு பலர் ஜாலியாக கூப்பிடுறாங்க.


*உங்கள் ரசிகர்களுக்கு


உலகமே எதிர்கொள்ளும் இந்த கொரோனா நேரத்தில் ரசிகர்கள் ஜாக்கிரதையாக இருக்கணும். எப்போதும் 'பாசிட்டிவ்' ஆக நம்பிக்கையாக இருந்தால் சந்தோஷம் பக்கத்திலேயே இருக்கும்.

-வியாஸ்

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - CHENNAI,இந்தியா
05-செப்-202018:25:41 IST Report Abuse
R S BALA பேட்டி சூப்பர் ...
Rate this:
Ramesh - Thirunagar,இந்தியா
29-செப்-202016:57:08 IST Report Abuse
Rameshsuper...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X