பொது செய்தி

இந்தியா

பணியாளர்களின் திறமை பரிசோதிக்க அரசு உத்தரவு

Updated : ஆக 30, 2020 | Added : ஆக 30, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: அரசு துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர்களின் திறமை குறித்து மறு ஆய்வு நடத்தும் படி அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது: ஊழல் பணியாளர்கள் மற்றும் திறமையைற்ற பணியாளர்களை கண்டறியவும், பொது நலனுக்காகமுன் கூட்டியே ஓய்வு பெறவும் 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஊழியர்களின் சேவை பதிவுகளை மறு

புதுடில்லி: அரசு துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர்களின் திறமை குறித்து மறு ஆய்வு நடத்தும் படி அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.



latest tamil news



இதுகுறித்து கூறப்படுவதாவது: ஊழல் பணியாளர்கள் மற்றும் திறமையைற்ற பணியாளர்களை கண்டறியவும், பொது நலனுக்காகமுன் கூட்டியே ஓய்வு பெறவும் 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஊழியர்களின் சேவை பதிவுகளை மறு ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. பணியாளர்அடிப்படை விதி 56(ஜே) மற்றும் 56 (ஐ) மற்றும் 1972 ம் ஆண்டின் மத்திய அரசின் சிவில் சர்வீஸ் (ஓய்வூதியம்) விதி 48(1- b) ன் கீழ் பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



இது குறித்து அதிகாரிகள் கூறி இருப்பதாவது: அரசு ஊழியர்களின் சேவையை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமா அல்லது முன்கூட்டியே ஓய்வு பெற வேண்டுமா என்பதைக் கண்டறியும் நோக்கில் அவ்வப்போது அரசு ஊழியர்களின் செயல்திறனை மதிப்பாய்வு செய்வதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன எனவும்,இது கட்டாய ஓய்வு திட்டத்தில்இருந்து வேறுபட்டது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramanathan Muthiah - Madras,இந்தியா
31-ஆக-202001:03:31 IST Report Abuse
Ramanathan Muthiah முதலில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தான் துவங்க வேண்டும் எல்லாம், லஞ்சம் கொடுத்து வேளையில் சேர்ந்த கூட்டம் அத்துடன் எல்லாம் திருட்டு தி ம் க வின் தொழிற்சங்கள் ஊழியர்கள். அரசு மிக கவனமாக கையாளனும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மட்டும். மாதம் மாதம் இந்த பல்கலைக்கழகத்தில் மட்டும் அரசின் கால்வாசி மக்களின் வரி பணம், சம்பளம் வீணாக கொடுக்கப்படுகிறது. 6000. முதல் 9000, ஊழியர்கள் சம்பளம் கணக்கிட்டால் ? ஆசிரியர்கள் தவிர்த்து ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களே அதிகம் இந்த பல்கலைக்கழகத்தில். அரசு கவனத்தில் கொள்ளுமா ?
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
30-ஆக-202022:49:02 IST Report Abuse
rajan மதிப்பாய்வு செய்யும் அதிகாரிக்கே திறமை இருக்காது அவரை யார் மதிப்பாய்வு செய்வார்? சில அலுவலகங்களில் மேலதிகாரியை விட ஊழியர்கள் சிலர் மிகவும்திறமைசாலிகளாக இருப்பர் அவர்களைக் கண்டால் மேலதிகாரிக்கு பிடிக்காது. ஏன் எனவே வேண்டுமென்றே குறைத்து மதிப்பாய்வு செய்ய வாய்ப்பு உண்டு.
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
30-ஆக-202022:20:11 IST Report Abuse
m.viswanathan என்னோடு ஒரு இளைஞன் சிறிது மாதங்களுக்கு முன் பேருந்தில் பயணம் செய்தான் , என்ன படித்திருக்கிறாய் என கேட்டேன் , பி.டெக் பிடித்திருப்பதாக சொன்னான் , எங்கு வேலை செய்கிறாய் என கேட்டேன் , படிப்பு முடித்து மூன்று ஆண்டு ஆகிவிட்டது , அரசு பணியில் மட்டுமே சேர்வது என்ற முடிவோடு சர்விஸ் கமிஷன் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றான். உன் தகுதிக்கு தனியார் துறையில் சேரலாமே , என கேட்டதற்கு , அங்கு வேலை செய்ய சொல்வார்கள், வேலை பளு கடினமாக இருக்கும், அரசு பணியில் எனக்கு கிடைக்க வேண்டிய அநைத்து வசதிகளும், கிடைக்கும் என்றான், , இந்த மநோ நிலை தற்போதைய எதார்த்தம். . தற்போது உள்ளவர்கள் லஞ்சம் வாங்குவதில் மட்டுமே திறமை சாலிகள் . பரிசோதித்தால் ஒரு பயலும் தேர மாட்டான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X