மதுரையில் 2ம் தலைநகர்: பெருகுகிறது ஆதரவு

Updated : ஆக 31, 2020 | Added : ஆக 31, 2020 | கருத்துகள் (4) | |
Advertisement
தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக, மதுரையை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து, ஆகஸ்ட், 15ல், நம் நாளிதழில், முழு பக்க கட்டுரை வெளியானது. இந்த ஆலோசனையை பல்துறை நிபுணர்கள், அறிஞர்கள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என, பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர். அவர்களின் கருத்துக்கள் இதோ:மருத்துவ தலைநகர்
madurai, second capital, growing support, மதுரை, இரண்டாம் தலைநகர், பெருகும், ஆதரவு

தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக, மதுரையை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து, ஆகஸ்ட், 15ல், நம் நாளிதழில், முழு பக்க கட்டுரை வெளியானது. இந்த ஆலோசனையை பல்துறை நிபுணர்கள், அறிஞர்கள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என, பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர். அவர்களின் கருத்துக்கள் இதோ:மருத்துவ தலைநகர் மதுரைமருத்துவத்தில் தலைசிறந்து விளங்கக்கூடிய நகரம் மதுரை. மதுரையை மையமாக வைத்து, மருத்துவ சுற்றுலாவும் அதிகரித்து வருகிறது. மலேசியா, சிங்கப்பூரில் இருந்தும்கூட, மருத்துவம் பார்க்க மதுரையை தேடி வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் இருந்து கண் சிகிச்சைக்காக வருகின்றனர். மருத்துவ தலைநகராக இருக்கும் மதுரையை, இரண்டாம் தலைநகராக்குவது காலத்தின் கட்டாயம். இதை யார் முன்னெடுத்து செல்வது என்று பலரும் யோசித்துக்கொண்டிருந்தபோது, அதை 'தினமலர்' நாளிதழ் கையில் எடுத்து வெற்றிக்கரமாக கொண்டு செல்கிறது. இதனால் விரைவில், மதுரை இரண்டாம் தலைநகர் என்பதற்கான அறிவிப்பு வரும் என, தென்மாவட்ட மக்கள் காத்திருக்கின்றனர்.
-வி.எம். பாண்டியராஜன், சமூக ஆர்வலர், மதுரை.மதுரை வரலாற்று சான்றுமதுரை மீனாட்சி கண்களை மூடாமல், மதுரையை பாதுகாப்பதால், 'துாங்கா நகரம்' என, அழைக்கப்படுகிறது. மதுரை மாவட்டம் தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியம், உணவுபழக்கம் ஆகியவற்றிற்கு வரலாற்று சான்றாக உள்ள இடம். இரண்டாம் தலைநகரமாக அறிவித்தால், நாகரிகம், பண்பாடு, கலாசாரம் மீண்டும் வர உதவும்; தமிழர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். மதுரை மட்டுமின்றி, அருகே பின்தங்கியுள்ள ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், அரசு நேரடியாக கூடுதல் கவனம் செலுத்த முடியும். இதன் வாயிலாக, தொழில் வளர்ச்சிபெறும்; இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்ற நிலை மாறி, சமநிலை ஏற்பட மதுரையை இரண்டாம் தலைநகரமாக அறிவிக்க வேண்டும்.-

-வே. சுவாமிநாதன், நேதாஜி தேசிய இயக்கம் ஒருங்கிணைப்பாளர் மதுரை.*எம்.ஜி.ஆர்., உணர்த்தினார்வரலாற்று சிறப்பு மிக்க மதுரையை, இரண்டாம் தலைநகராக தேர்வு செய்ய, எண்ணற்ற காரணங்கள் உள்ளன. பாண்டிய மன்னர்கள், திருமலை நாயக்கர் மன்னர், மதுரையை தலைநகராக கொண்டு சிறப்பான ஆட்சியை வழங்கினர். சிறந்த நிர்வாகத்தை வழங்குவதற்கு நல்ல உள்கட்டமைப்பு, விரிவாக்கத்திற்கு தேவையான தரிசு நிலங்கள் அதிகம் உள்ளன. இந்தியாவின் அனைத்து பகுதி களையும் இணைக்கும் ரயில் நிலையம், பன்னாட்டு போக்குவரத்திற்கு ஏற்ற விமான நிலையம், அருகில் துாத்துக்குடி துறைமுகம் அமைந்துள்ளது. வானிலை ஆராய்ச்சி நிலையம், வானொலி, தொலைகாட்சி நிலையம் ஆகியவை கொடைக்கானலில் அமைந்துள்ளது. உயர்நீதிமன்ற கிளை மதுரையில் அமைந்து, மக்களின் அலைச்சல் தவிர்க்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது மிக நல்ல வாய்ப்பு. இயற்கையாகவே மதுரையை சுற்றி ,முல்லை பெரியாறு, வைகை அணை போன்ற நீர் தேக்கங்கள் உள்ளன. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவுடன் இணைப்பதற்கு சாலை வசதி உள்ளன. இதையெல்லாம் கருத்திற்கொண்டு உலக தமிழ் மாநாட்டை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மதுரையில் நடத்தி, மதுரை அனைத்து வசதிகளையும் கொண்ட தலைநகர் என்பதை உணர்த்தினார்.-

வழக்கறிஞர் கே. கோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., பெரியகுளம். *


latest tamil newsமக்களின் வாழ்வாதாரம் உயரும்

பூகோள ரீதியாக தமிழகத்தின் மையப்பகுதியாக மதுரை அமைந்துள்ளது. பாதிக்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள், மூன்று மணி நேரத்தில் மதுரையை சென்றடையலாம். தொழில் ரீதியாகவும், போக்குவரத்து மற்றும் வியாபார தொடர்புக்கு, மதுரை தான் மையப்பகுதியாக உள்ளது.மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவித்தால், தென் மாவட்ட மக்களுக்கு பயண செலவு, நேரம் மிச்சமாகும்; பணிகள் விரைவாக நடக்கும். பின்தங்கிய மாவட்டங்களை கொண்ட தென் தமிழகம் வளர்ச்சி அடையும். மக்களின் பிரச்னைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும் என்பதால், அவர்களின் வாழ்வாதாரம் உயரும்.--

கே.ராமமூர்த்தி, பொதுச்செயலாளர், ஹிந்து முன்னணி, ராமநாதபுரம் மாவட்டம்.*


மத்திய அரசு உதவ வேண்டும்

மதுரையை, தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக்க வேண்டும். இது, தென்மாவட்டங்கள் வளர்ச்சிக்கு உதவும். குமரி முதல் மதுரை வரை தொழில் நன்கு வளர்ச்சி அடையும். தென்மாவட்டங்களில் மதுரை, திருச்செந்துார், பழநி, திருப்பரங்குன்றம் போன்ற கோவில் ஸ்தலங்கள் மேம்படும்.இதற்கு, மாநில அரசுக்கு, மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும்; பொதுமக்களுக்கு நிர்வாக வசதிகள் அதிகரிக்கும்.

ஹரிஹரமுத்தய்யர்,தலைவர், தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்), பழநி.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
31-ஆக-202009:08:32 IST Report Abuse
ocean குரோனவை உலகம் முழுமைக்கும் பரப்பி கோடான கோடி மனித உயிர்களை கொன்ற சீனர்களை திட்டுவதற்கு அனுமதிக்கும் ... நன்றிகள்.
Rate this:
Cancel
செல்வன், சென்னை வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை.
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
31-ஆக-202004:39:26 IST Report Abuse
Nepolian S அதே சர்வே திருச்சியில் எடுத்து பாரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X