பொது செய்தி

இந்தியா

கர்நாடகாவில் ஒரே நாளில் 7,101 பேர் கொரோனாவிலிருந்து குணம் அடைந்தனர்

Updated : ஆக 31, 2020 | Added : ஆக 31, 2020
Share
Advertisement
பெங்களூரு: கர்நாடகாவில் ஒரே நாளில் 7,110 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,42,229 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் மாநில அளவில் 72.1 சதவீதமாக உள்ளது.அதே நேரம் அங்கு ஒரே நாளில் மேலும் 8,852 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த தொற்று எண்ணிக்கை 3,35,928 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் மேலும 106

பெங்களூரு: கர்நாடகாவில் ஒரே நாளில் 7,110 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,42,229 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் மாநில அளவில் 72.1 சதவீதமாக உள்ளது.



latest tamil news



அதே நேரம் அங்கு ஒரே நாளில் மேலும் 8,852 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த தொற்று எண்ணிக்கை 3,35,928 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் மேலும 106 உயிரிழந்ததையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 5,589 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 730 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூருவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 2,821 பேருக்கு தொற்று உறுதியானது. புதிதாக 27 நகரில் பலியானதால் அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 1,938 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக பெல்லாரி மாவட்டத்தில் 428 பேருக்கும், பெலகெவி மாவட்டத்தில் 357 பேருக்கும், தேவன்கெரே மாவட்டத்தில் 373 பேருக்கும், தர்வாடா மாவட்டத்தில் 300 பேருக்கும், ஹஸ்ஸானா மாவட்டத்தில் 268 பேருக்கும், பிடார் மாவட்டத்தில் 73 பேருக்கும், தக்ஷிண கன்னட மாவட்டத்தில் 334 பேருக்கும், ஹவேரி மாவட்டத்தில் 105 பேருக்கும், மண்டியா மாவட்டத்தில் 179 பேருக்கும் நேற்று ஒரே நாளில் தொற்று உறுதியாகி உள்ளது.


latest tamil news



மாநில அளவில் இதுவரை 3,25,886 பேர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். அவர்களில் 2,67,590 பேர் வீடுகளிலும் தனிமை வார்டுகளில் இருந்து வருகின்றனர். மொத்தம் 28,52,675 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 66,957 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இவ்வாறு மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X