காங்கிரசின் எதிர்காலம்: ராகுல் திட்டம் என்ன?| Dinamalar

காங்கிரசின் எதிர்காலம்: ராகுல் திட்டம் என்ன?

Updated : ஆக 31, 2020 | Added : ஆக 31, 2020 | கருத்துகள் (39)
Share
டில்லி அரசியல் வட்டாரங்களில் இப்போது அலசப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயம்-, காங்கிரசின் எதிர்காலம் என்ன என்பதுதான். சமீபத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் நடந்த தகராறு, கட்சி தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 'காங்கிரசில் மாற்றம் தேவை' என சோனியாவுக்கு கடிதம் எழுதிய, 23 காங்., தலைவர்களை, இந்த கூட்டத்தில் திட்டித் தீர்த்துவிட்டார், ராகுல்.

டில்லி அரசியல் வட்டாரங்களில் இப்போது அலசப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயம்-, காங்கிரசின் எதிர்காலம் என்ன என்பதுதான். சமீபத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் நடந்த தகராறு, கட்சி தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.



latest tamil news



'காங்கிரசில் மாற்றம் தேவை' என சோனியாவுக்கு கடிதம் எழுதிய, 23 காங்., தலைவர்களை, இந்த கூட்டத்தில் திட்டித் தீர்த்துவிட்டார், ராகுல். 'நீங்கள் எல்லாம், பா.ஜ., ஏஜன்ட்' என, கடுமையாக சாடிவிட்டார். இந்த விஷயம் மீடியாவிற்கு கசிந்ததும், 'நான் அப்படி சொல்லவில்லை' என, 'பல்டி' அடித்தார் ராகுல்.
இந்த, 23 தலைவர்களும், 'ராகுல் மீண்டும் காங்கிரஸ் தலைவரானால், கட்சி ஒழிந்து போய்விடும்; எனவே, சீக்கிரம் ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்' என எழுதியதில், ராகுலுக்கு கடும் கோபம். 'இப்படி கடிதம் எழுதினாலும், கட்சி நன்மைக்கு தான் சொல்லியுள்ளனர்' என, செயற்குழு கூட்டத்தில், சோனியா சொன்னாலும், அடுத்த நாளே இந்த தலைவர்களை ஓரங்கட்டிவிட்டார்.அத்துடன், ராகுல் பேச்சைக் கேட்கக் கூடிய இளம் தலைவர்களை, முக்கிய பதவிகளில் நியமித்துவிட்டார், சோனியா. ராகுலின் ஆலோசனைப்படியே இதை சோனியா மேற்கொண்டுள்ளாராம்.



latest tamil news




அடுத்த ஆண்டு துவக்கத்தில், காங்., மாநாடு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதுவரை, தனக்கு பதவி வேண்டாம் என சொல்லும் ராகுல், அம்மாவிற்கு கட்சி விவகாரங்களில் தொடர்ந்து ஆலோசனை சொல்லிக் கொண்டிருப்பார் என்கின்றனர், காங்கிரசார்.'எந்த ஒரு விஷயத்தையும் அலசி ஆராய்வதில்லை; கோபத்தில் உளறிக்கொட்டி விடுகிறார். சீனியர் தலைவர்களை மரியாதை இல்லாமல் கண்டபடி பேசுகிறார்' என்பது தான், மூத்த தலைவர்களின் ஆதங்கம். ஜோதிர் ஆதித்ய சிந்தியா, சச்சின் பைலட், ஜிதேந்திர பிரசாத் ஆகியோர், ராகுல் அணியில் இருந்த இளைஞர்கள். 'ராகுல் வேலைக்கு ஆக மாட்டார்' என்பதை இவர்கள் புரிந்து கொண்டனர். பா.ஜ.,வில், சிந்தியா ஐக்கியமாகிவிட்டார்.

போர்க்கொடி உயர்த்திய பைலட், கட்சியில் வெளியேறி, மறுபடியும் திரும்பிவிட்டார். அடுத்ததாக, 'ராகுலுக்கு எதிராக, ஜிதேந்திர பிரசாத் செயல்பட்டு வருகிறார். இதனால், இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்கின்றனர், உத்தர பிரதேச காங்கிரசார்.எனவே,- 'தனக்கு எதிராக செயல்பட்டு வரும் சீனியர் தலைவர்களை ராகுல் ஒழித்துக் கட்டுவாரா அல்லது அந்த தலைவர்களே அதிரடியாக ராகுலை முடக்கி விடுவரா' என்பது தான், காங்கிரசார் மத்தியில் எழுந்துள்ள கேள்வி. இதை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பா.ஜ.,வோ, ஒரு படி மேலே போய், 'கடைசியில் அனைவரும் சேர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கே சமாதி கட்டிவிடப் போகின்றனர்' என, கிண்டல் செய்கின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X