அண்ணாமலைக்கு, 'ஜே': பா.ஜ திட்டம்

Updated : ஆக 31, 2020 | Added : ஆக 31, 2020 | கருத்துகள் (40)
Share
Advertisement
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, பா.ஜ., பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலில், எப்படியாவது இரண்டு இலக்க தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதில், பா.ஜ., தலைமை உறுதியாக உள்ளது. பிரபலமானவர்களை கட்சியில் இணைத்து, வாக்காளர்களை தன் பக்கம் இழுக்க, முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றனர் கட்சி தலைவர்கள். முருகன், மாநில பா.ஜ., தலைவரான பிறகு, இந்த நடவடிக்கை

தமிழகத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, பா.ஜ., பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலில், எப்படியாவது இரண்டு இலக்க தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதில், பா.ஜ., தலைமை உறுதியாக உள்ளது.



latest tamil news



பிரபலமானவர்களை கட்சியில் இணைத்து, வாக்காளர்களை தன் பக்கம் இழுக்க, முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றனர் கட்சி தலைவர்கள். முருகன், மாநில பா.ஜ., தலைவரான பிறகு, இந்த நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை, பா.ஜ.,வில் சேர்ந்தது, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு கட்சிக்கு புத்துணர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. இவர், இனிமேல் கட்சி தொடர்பான விவாதங்களில், 'டிவி'க்களில் கலந்து கொள்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news



தேசிய தொலைக்காட்சிகளிலும், இவர் பங்கேற்பார் என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள்.தவிர, கட்சி தொண்டர்களிடையேயும் உரையாற்றி, அவர்களை ஊக்குவிக்கவும், அண்ணாமலையை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு கொடுக்கவும், கட்சி தலைமை யோசித்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, பழைய தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு, முற்றிலும்புதியவர்களை பதவிக்கு கொண்டு வர வேண்டும் என, பா.ஜ., தலைமை திட்டமிட்டு காய் நகர்த்தி வருவதாகவும், கிசுகிசுக்கப்படுகிறது.

தமிழக பா.ஜ., தலைவர் முருகன் எப்போது டில்லிக்கு வந்தாலும், ஏதாவது ஒரு வி.ஐ.பி.,யை கட்சியில் சேர்க்க வருகிறார் என, டில்லி பா.ஜ., தலைவர்கள் சந்தோஷப்படுகின்றனர். மறுபடியும் டில்லி வரவிருக்கிறாராம் முருகன். இந்த முறையும், பிரபலமான ஒருவர் பா.ஜ.,வில் இணையப்போகிறாராம்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Ravichandran - Chennai,இந்தியா
04-செப்-202019:47:13 IST Report Abuse
Indian  Ravichandran முருகன் ஜி சூப்பர் ஜி, நயீனார் நாகேந்திரன் ஜி பல மாவட்ட தென்மாவட்டங்கள் முக்கிய பொறுப்பு கொடுத்துள்ளது ப ஜா க தலைமை நாகேந்திரன் அடிச்சி தூக்கப்போறார் அனுபவம் மற்றும் மிகசிறந்த மனிதர் என்ற பெயரும் நாகேந்திரன் அவர்களுக்கு உண்டு. இங்கு கரு பழனியப்பன் கலக்கபோறார் சூப்பர் சூப்பர். அண்ணாமலை சார் போன்ற படித்த மேதாவிகள் நிச்சயம் பி ஜெ பி பெரும் பங்காற்றுவார்கள் சந்தேகம் இல்லை.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
01-செப்-202012:11:28 IST Report Abuse
Malick Raja பிஜேபிக்கு தமிழகத்தில் வாய்ப்புக்கு வழியே லில்லை ..இந்த IPS. எல்லாம் வந்து முட்டு கூட கொடுக்க முடியாது .. வீணாக பொருளாதாரத்தை பிஜேபி இழக்கும் என்பது மட்டும் உண்மை ..
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
31-ஆக-202014:47:29 IST Report Abuse
Raj அண்ணாமலைய நினைத்தாலே பாவமா இருக்கு. பிஜேபி ல சேர்ந்து வாழ்க்கை தொலைத்து விட்டார்
Rate this:
N.K - Hamburg,ஜெர்மனி
31-ஆக-202017:53:59 IST Report Abuse
N.K ஆமாம், முதல்வர் ஆகலாம், ஆளுநர் ஆகலாம் சொந்த குடுபத்திற்கு நேரம் இல்லாமல் போய்விடும். ஆகவே வாழ்க்கையை தொலைத்துவிட்டார். திமுகவில் சேர்ந்திருந்தால் பிரச்சாரத்துக்கு போனோமா, பேமண்ட் வாங்குனோமா உதயநிதிக்கு வாழ்த்து சொன்னோமானு பொழப்ப பார்க்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X