சட்டசபை தேர்தல்: கூட்டணி கட்சிகள் 'குஷி'

Updated : ஆக 31, 2020 | Added : ஆக 31, 2020 | கருத்துகள் (7)
Advertisement
அடுத்தடுத்து நடக்கவிருக்கும் தேர்தல்களில், காங்கிரசின் உட்கட்சி மோதல், பெரும் பிரச்னையை ஏற்படுத்த உள்ளது. அக்டோபர் மாத இறுதியில், பீஹார் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இங்கு, பா.ஜ.,வும், ஐக்கிய ஜனதா தளத்தின் -முதல்வர் நிதிஷ் குமாரும், கூட்டணி அமைத்துள்ளனர். இவர்களோடு ராம்விலாஸ் பஸ்வானின், லோக் ஜனசக்தி கட்சியும் சேர்ந்துள்ளது.எதிரணியில் லாலுவின், ராஷ்ட்ரீய ஜனதா

அடுத்தடுத்து நடக்கவிருக்கும் தேர்தல்களில், காங்கிரசின் உட்கட்சி மோதல், பெரும் பிரச்னையை ஏற்படுத்த உள்ளது. அக்டோபர் மாத இறுதியில், பீஹார் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இங்கு, பா.ஜ.,வும், ஐக்கிய ஜனதா தளத்தின் -முதல்வர் நிதிஷ் குமாரும், கூட்டணி அமைத்துள்ளனர்.




latest tamil news



இவர்களோடு ராம்விலாஸ் பஸ்வானின், லோக் ஜனசக்தி கட்சியும் சேர்ந்துள்ளது.எதிரணியில் லாலுவின், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் உதிரி கட்சிகள் உள்ளன. இவர்களுக்கு தொகுதி பங்கீட்டில் பிரச்னை வரும் என சொல்லப்படுகிறது. அதிலும், இப்போதுள்ள உட்கட்சி பூசலால், காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் கிடைக்காது. சென்ற முறை, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்., கூட்டணி அமைத்து போட்டியிட்டு, நிதிஷ் முதல்வரானார். பிறகு தகராறு ஏற்பட்டு லாலுவும், காங்கிரசும் கூட்டணியில் விலகிக் கொள்ள, நிதிஷுக்கு பா.ஜ., ஆதரவு அளித்தது.சென்ற முறை, 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்., 27ல் வெற்றி பெற்றது. இப்போது, காங்., நிலைமை படு மோசம். கட்சி நிர்வாகம் சரியில்லை.


latest tamil news



அதோடு உட்கட்சி பூசல் வேறு. இதனால், காங்கிரசுக்கு குறைந்த தொகுதிகளையே கொடுக்க, லாலு கட்சி முடிவெடுத்துள்ளதாம்.ராகுலுக்கு எதிராக கடிதம் எழுதியவர்களில் ஒருவர், தமிழக காங்., பொறுப்பாளரான முகுல் வாஸ்னிக். தி.மு.க.,விடம் இருந்து அதிக தொகுதிகளைப் பெறுவதோடு, 'ஆட்சியிலும் பங்கு வேண்டும்' என கேட்க நினைத்தவர்களில், வாஸ்னிக்கும் ஒருவர். இப்போது, வாஸ்னிக் மீது, கட்சிக்கு எதிரானவர் என முத்திரை குத்தப்பட்டுவிட்டதால், தமிழகத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்கிறார். இவருடைய பதவியும் விரைவில் பறிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.இதனால், பேரம் அதிகம் இருக்காது என்ற மகிழ்ச்சியில், தி.மு.க., இருப்பதாக செல்லப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
31-ஆக-202015:55:54 IST Report Abuse
INDIAN Kumar திறமை அற்றவர்கள் தலைமை தங்கினால் கட்சி அதிக நாட்கள் நீடிக்க முடியாது.
Rate this:
Cancel
Abdul Aleem - chennai,இந்தியா
31-ஆக-202010:36:51 IST Report Abuse
Abdul Aleem இந்த முறை காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதே நல்லதாக இருக்கும்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
31-ஆக-202009:29:28 IST Report Abuse
duruvasar அண்ணன் அழகிரிதான் பாவம். கூட்டணி பேச்சு வார்த்தை கூட்டத்திற்கு ஒரு துண்டுக்கு 4 துண்டாக எடுத்து செல்லவேண்டும். ஏனென்றால் ரொம்பா வழியல் இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X