அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் ஓணம் வாழ்த்து: விமர்சகர்கள் வறுத்தெடுப்பு

Updated : ஆக 31, 2020 | Added : ஆக 31, 2020 | கருத்துகள் (149)
Share
Advertisement
DMK, Stalin, Onam, Wishes, திமுக, ஸ்டாலின், ஓணம், பண்டிகை, வாழ்த்துகள், விமர்சனம்

இந்த செய்தியை கேட்க

சென்னை: 'கேரள மக்கள் கொண்டாடும் ஒணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கிருஷ்ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லையே... இது என்ன கொள்கையோ?' என, சமூக வலைதளங்களில், பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர்.

மலையாள மக்கள் இன்று ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இது தொடர்பாக, ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தி:கேரள பெருமக்களின் பண்பாடு, உணர்வுகளோடு ஒன்றியிருக்கும் திருவிழாக்களில் ஒன்றானது ஓணம் பண்டிகை.இந்த பண்டிகையை எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும், தமிழகத்தில் வாழும் மலையாள மக்கள் அனைவருக்கும், தி.மு.க., சார்பில் என் இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துக்கள். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.வாழ்த்து தெரிவித்த ஸ்டாலினை, சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.


latest tamil newsஅவர்களின் பதிவுகள்:


* 'தி.மு.க.,வில், 90 சதவீதம் ஹிந்துக்கள் உள்ளனர்' என, ஸ்டாலின் கூறுகிறார். ஹிந்துக்களின் பண்டிகையான கிருஷ்ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆனால், கேரள ஹிந்துக்கள் கொண்டாடும் பண்டிக்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். இது என்ன கொள்கையோ?
* தி.மு.க.,வில் உள்ள, 90 சதவீதம் ஹிந்துக்களில், எத்தனை சதவீதம் பேர் ஓணத்தை கொண்டாடுகின்றனர்?
* ஓணம் வாழ்த்து, தி.மு.க.,வின் ஓட்டு அரசியல்; நாடகத்தின் ஒருபகுதி தான்
* உதயநிதி, மண் பிள்ளையார் உருவப்படத்தை, 'டுவிட்டர்' தளத்தில் வெளியிட்ட பின், அவர் கொடுத்த விளக்கத்தை கேட்டு நாடே சிரித்தது
* கந்த கஷ்டி கவசம் போன்ற பிரச்னை வரும் போது, ஸ்டாலின் வாய்மூடி மவுனம் காப்பார்
* 'நரகாசுரன், பொய்யன்' என்பார். 'நாங்கள் ராவணின் வாரிசுகள்' என்பார். ஆனால், வாமனன் வந்தது உண்மை; அதுபோல, மகாபலி இருந்தது உண்மை. இதற்கு பெயர் தான் திராவிட பகுத்தறிவு. தமிழகத்தில் வாழும் கேரள மக்களின் ஓட்டுக்களை வாங்க உதித்த திடீர் ஓட்டு அறிவு. இவ்வாறு, பலரும் விமர்சித்துள்ளர்.

Advertisement
வாசகர் கருத்து (149)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
04-செப்-202005:16:17 IST Report Abuse
meenakshisundaram கடவுளின் தேசம் என்று கேரளம் அழைக்கப்படுகிறது ஸ்டாலினுக்கு தெரியாது மேலும் பெருமாள் வாமன் ரூபத்தில் பூமிக்கு வந்ததையே மலையாளிகள் ஓணம் என்று வேறுபாடு இன்றி கொண்டாடுகின்றனர் -பிரசாந்த் கிஷோர் இதை ஸ்டாலினுக்கு சொல்லலீயா? >
Rate this:
Cancel
grg - chennai,இந்தியா
02-செப்-202018:01:50 IST Report Abuse
grg who in our state now is a capable person for CM post?
Rate this:
Chidam - 325,இந்தியா
05-செப்-202014:48:08 IST Report Abuse
Chidamவைகைப்புயல் வடிவேலு தான் ஒரே தகுதியானவர்...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01-செப்-202017:17:52 IST Report Abuse
J.V. Iyer தவறேதுமில்லை. சுடலை ஒரு தமிழர் அல்லர். எனவே அவர் செய்வததுதான் சரி. தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் பின்னே சென்றவர் அல்லவா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X