புதுடில்லி: திறமையாக செயல்படாத மற்றும் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள ஊழியர்களை, முன்னதாகவே ஓய்வு பெற்றவர்களாக அறிவிக்க, கணக்கெடுப்பு நடத்தும்படி அனைத்து துறைகளுக்கும், மத்திய பணியாளர் நலத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான பணி விதிகளின்படி, 50 -55 வயதைக் கடந்தவர்கள் அல்லது, 30 ஆண்டுகள் பணியாற்றிய நபர்களை, பொது நலன் கருதி, ஓய்வில் செல்லும்படி, மத்தியஅரசு உத்தரவிட முடியும்.இவ்வாறு ஓய்வில் செல்ல உத்தரவிடுவது, ஒரு தண்டனையாக கருத முடியாது. கட்டாய ஓய்வில் இருந்து இது வேறுபட்டது.

இந்த நிலையில், 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியுள்ள, திறமையாக செயல்படாத ஊழியர்கள் மற்றும் ஊழல் வழக்குகளில் சிக்கியவர்கள் குறித்த பட்டியலை தயாரிக்கும்படி, அனைத்து துறைகளுக்கும், மத்திய பணியாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.இவர்களை ஓய்வில் செல்லும்படி உத்தரவிட திட்டமிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE