அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர்கள் பேசுவது சரியல்ல: எச்.ராஜா

Added : ஆக 31, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
மதுரை: அமைச்சர்கள் செல்லூர் ராஜூ மற்றும் ஜெயக்குமார் பேசுவது சரியல்ல என பா.ஜ., தேசிய பொது செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.கொரோனா பாதிப்பு காரணமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா கூறும் போது, கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும்
ஹெச்.ராஜா,எச்.ராஜா, பா.ஜ., பாஜ, கூட்டணி, அதிமுக, அ.தி.மு.க.,

மதுரை: அமைச்சர்கள் செல்லூர் ராஜூ மற்றும் ஜெயக்குமார் பேசுவது சரியல்ல என பா.ஜ., தேசிய பொது செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா கூறும் போது, கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு''என டுவிட்டரில் பதிவிட்டிரந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவை உரசி பார்க்கக்கூடாது. எச்.ராஜா சொன்ன சொற்கள் அவருக்கு தான் பொருந்தும் என பதிலடி கொடுத்தார். அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் அளித்த பேட்டி ஒன்றில், டில்லிக்கு பா.ஜ., ராஜாவாக இருந்தாலும், தமிழகத்தில் இன்னும் வளர வேண்டும் என தெரிவித்திருந்தார்.


latest tamil news


இது தொடர்பாக பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா கூறியதாவது: எல்லை மீறி பேசுவதும் கூட்டணியில் பிரச்னை ஏற்படுத்தும். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் பேசுவது சரியல்ல. அதிமுக அரசை நான் விமர்சனம் செய்வது கிடையாது. தோழமை சுட்டுதலோடு குறைகளை சொல்கிறேன். தமிழகத்தில் பா.ஜ., ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது. எங்களுடைய தேர்தல் பணி நாடு முழுவதும் இருப்பதை போல், தமிழகத்திலும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அப்பாவி - coimbatore,இந்தியா
31-ஆக-202021:25:41 IST Report Abuse
அப்பாவி சுடும் சொரனையும் இருந்தா எங்களுக்கு கூட்டணி வேண்டாம் என்று சொல்லுங்கப்பார்ப்போம். நோட்டவோட போட்டிபோடறவங்களுக்கெல்லாம் ரோசம் ஆகாது. தூக்கி போடறதா வாங்கிட்டு சத்தமில்லாம போகணும்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
31-ஆக-202017:22:04 IST Report Abuse
J.V. Iyer திருடர்களுக்கும், கொள்ளைக்காரர்களுக்கும் பயப்படவேண்டாம். தைரியமாக பேசுங்கள். இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரப்போவது கிடையாது.
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
01-செப்-202012:25:33 IST Report Abuse
Malick Rajaநீர் மட்டும் நன்னா பேசுண்டிருப்பியாக்கும் ..நேக்கும் பேசணுமுண்டிருக்கு பேசிட்டேன் .. நம்மவாலை பற்றி பேசினீன்னா அபாண்டம் வந்துடும் ..புரின் ஜுதோ ....
Rate this:
Cancel
Prem Kumar -  ( Posted via: Dinamalar Android App )
31-ஆக-202016:47:31 IST Report Abuse
Prem Kumar அ.தி.மு.க. அமைச்சர்கள், தி.மு.கவை போல், தாங்கள் இல்லாமல் தமிழகம் இயங்காது என்ற தொனியில் திடீரென பேச தொடங்கியது மிகவும் வியப்பாக இருக்கிறது. தமிழகத்தை தவிர, அண்டை மாநிலங்கள் உள்பட, இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் தனியாகவோ- கூட்டாகவோ நின்று மக்களை சந்திக்க தைரியமற்ற கட்சிகளையே கூட்டணியில் வைத்து கொண்ட இந்த இரண்டு கட்சிகளும், இந்தியாவின் பல மாநிலங்களிலும் தனித்து நின்றும், பா.ஜ.கவோடு சேர்ந்தால் தான் வெற்றி பெறமுடியும் என மாநில கட்சிகள் நினைக்கும் அளவிற்கு பலம் படைத்த பா.ஜா.கவை ஏளனமாக பேசுவது, தங்களது சுய பலம் என்ன என்பதை அறியாமல் பேசுவதாகவே கருத முடியும். பா.ஜ.க. தனித்து நின்று தமிழகத்திலும் தனது செல்வாக்கையும் மக்கள் ஆதரவையும் நிரூபிக்க இப்போது காலம் கனிந்துள்ளது. துடிப்புடன் செயலாற்றகூடிய இளைஞர்களின் கையில் தமிழக பா.ஜ.க. இப்போது இருப்பதை தமிழகத்திலுள்ள கழகங்களும் அதன் தோழமைகளும் புரிந்து கொள்ள வேண்டும். தேசிய அளவில் பிளவுபடும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் பல திருப்புமுனைகளை எதிர் நோக்கியுள்ள நிலையிலும், தி.மு.க.- அ.தி.மு.க.இரண்டிலும் வெடிக்கவிருக்கும் உட்கட்சி பூசல்களும், தமிழகத்தில் பா.ஜ.க.வளர்ச்சிக்கு கண்டிப்பாக உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன்
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
31-ஆக-202021:16:31 IST Report Abuse
Ellammanஹி ஹி ஹி ஹி ஹி ....வேறு ஒன்றும் செய்வதற்கு இல்லை.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X