பொது செய்தி

இந்தியா

மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி; எதிர்பார்த்தது போலவே சரிவு

Updated : செப் 02, 2020 | Added : ஆக 31, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், ஜி.டி.பி., எனும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், இதுவரை இல்லாத வகையில், மைனஸ் 23.9 சதவீதமாக சரிவடைந்துள்ளது.கணிதம்:இதுவே, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 5.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக,
GDP growth, suffers, worst ever, crash

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், ஜி.டி.பி., எனும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், இதுவரை இல்லாத வகையில், மைனஸ் 23.9 சதவீதமாக சரிவடைந்துள்ளது.


கணிதம்:

இதுவே, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 5.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக, கடந்த மார்ச் 25ம் தேதி முதல், ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. பின், ஏப்ரல் 20ம் தேதி முதல் தளர்வுகளை அறிவிக்க துவங்கியது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த காரணத்தால், பொருளாதார நடவடிக்கைகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின. இதன் காரணமாக, கடந்த, 40 ஆண்டுகளில் இல்லாத வகையில், பொருளாதார வளர்ச்சியும், மைனஸ் 23.9 சதவீதமாக சரிவுக்குள்ளானது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த, கடந்த நிதியாண்டின் இறுதிக் காலாண்டில், வளர்ச்சி, 3.1 சதவீதமாக இருந்தது. இது, அதற்கு முந்தைய, 44 காலாண்டுகளில் இல்லாத சரிவாகும். மேலும், கடந்த நிதியாண்டின் மொத்த வளர்ச்சி, 4.2 சதவீதமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த முதல் காலாண்டில், பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும் என அனைவராலும் கணிக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட, மைனஸ் 10 சதவீதத்திலிருந்து மைனஸ் 25 சதவீதம் வரை இருக்கும் என பல நிறுவனங்களால் கணித்து சொல்லப்பட்டிருந்தது.


சேவை மதிப்பு:

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், சுரங்க துறை வளர்ச்சி, மைனஸ் 23.3 சதவீதமாக சரிந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின், இதே காலாண்டில், 4.7 சதவீதமாக அதிகரித்திருந்தது.இதேபோல, தயாரிப்பு துறை வளர்ச்சி, மைனஸ் 39.3 சதவீதமாகவும்; கட்டுமான துறை வளர்ச்சி, மைனஸ் 50.2 சதவீதமாகவும் முதல் காலாண்டில் சரிவைக் கண்டுள்ளது.

இருப்பினும் விவசாயத் துறை மட்டும் வளர்ச்சியை கண்டுள்ளது. இத்துறையானது 3.4 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் விவசாய துறை வளர்ச்சி 3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். முதல் காலாண்டில், ஜி.வி.ஏ., எனும், மொத்த மதிப்பு கூட்டல் வளர்ச்சி, மைனஸ் 22.8 சதவீதமாக சரிந்துள்ளது. ஜி.வி.ஏ., என்பது, ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவையின் மதிப்பு ஆகும்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-செப்-202021:23:57 IST Report Abuse
ஆப்பு சரி... அடுத்த குவார்ட்டரில் என்ன வளர்ச்சி வீழ்ச்சி எதிர்பாக்குறீங்க....
Rate this:
Cancel
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
01-செப்-202009:06:59 IST Report Abuse
sankar ஊரடங்கு இருக்கும்போது வளர்ச்சி குறைவாகத்தான் இருக்கும் இப்பொழுது தேவை உயிர் காப்பு வளர்ச்சி அடுத்த ரெண்டு ஆண்டுகளில் வரும்
Rate this:
Cancel
01-செப்-202008:24:01 IST Report Abuse
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) லாக்டவுன் அப்ப வீழிச்சி அடைவது இயலபு தான் , இது எதிர்பார்த்த ஒன்னு தான் , உடனே நம்ம குறி சொல்லுபவன் நான் தான் சொன்னேன் என்று கிளம்பி உள்ளான் ??? கவனிக்க வேண்டிய விஷயம் இந்த காலகட்டத்தில் விவசாய துறை 3.4% வளர்ச்சி அடைந்துள்ளது , எகனாமிக் adviser பிரகிராம் eight core infrastructure sectors, core sector output declined by 38 per cent in April, அதன் பிறகு rate of contraction has come down to 22 per cent in May, 13 per cent in June and 9.6 per cent in July ஏற்கணமே unlock பண்ண ஆரம்பித்து உடன் ரெகவரி ஆகி கொண்டு இருக்கு இந்த வருடம் கடைசியில் இந்தியா மீண்டு எழும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X