பொது செய்தி

தமிழ்நாடு

21 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

Updated : செப் 02, 2020 | Added : ஆக 31, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில் உள்ள, 21 சுங்கச் சாவடிகளில், நள்ளிரவு முதல் சுங்க கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது.தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக, 48 இடங்களில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றது. இந்த சுங்கச் சாவடிகளில், ஆண்டுதோறும், 5 முதல், 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்திக் கொள்ள, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கி
Toll Gate, Tamil Nadu, Toll Plaza, சுங்கச்சாவடி, கட்டண உயர்வு

சென்னை : தமிழகத்தில் உள்ள, 21 சுங்கச் சாவடிகளில், நள்ளிரவு முதல் சுங்க கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது.

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக, 48 இடங்களில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றது. இந்த சுங்கச் சாவடிகளில், ஆண்டுதோறும், 5 முதல், 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்திக் கொள்ள, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

அதன்படி, புதுார் பாண்டியபுரம் - விருது நகர் ; எலியார்பதி - மதுரை; ராசம்பாளையம் - நாமக்கல்; நத்தக்கரை, வைகுந்தம், மேட்டுப்பட்டி, ஓமலுார் - சேலம்; வீரசோழபுரம், சமயபுரம், பொன்னம்பலபட்டி, திருப்பராய்த்துறை - திருச்சி; வாழவந்தான்கோட்டை - தஞ்சாவூர்.

கொடை ரோடு - திண்டுக்கல்; வேலஞ்செட்டியூர், மணவாசி - கரூர்; பாளையம் - தர்மபுரி; விஜயமங்கலம், திருமாந்துரை, மொரட்டாண்டி, விக்கிரவாண்டி - விழுப்புரம். செங்குறிச்சி - உளுந்துார்பேட்டை ஆகிய, 21 சுங்கச்சாவடிகளில், நள்ளிரவு முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது.

ஒரு முறை பயணிக்க, 5 முதல், 10 ரூபாய் வரை, கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. எரிபொருள் விலை ஏற்கனவே அதிகரித்துள்ளது. இதோடு சுங்க கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதால், போக்குவரத்து செலவு அதிகரிக்கும் என்பதால், சரக்கு வாகனங்களின் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
03-செப்-202012:06:59 IST Report Abuse
K.n. Dhasarathan இது மக்கள் அரசு, எப்படியும் (தம்) மக்களை காப்பாற்றியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறது, இதைப்போய் குற்றம் சொல்ராங்க
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
01-செப்-202022:28:42 IST Report Abuse
J.Isaac ஆட்சி நடத்துராங்களா? இல்லை கந்து வட்டி வசூல் பண்ணுகிறார்களா ? என்று புரியவில்லை. வெளிப்படைத்தன்மை இல்லை மனிதாபிமானம், மனசாட்சி இல்லாத ஆட்சியாளர்கள்.
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
01-செப்-202021:43:05 IST Report Abuse
m.viswanathan இன்னுமா இந்த பாஜாகாவை ஊரு நம்புது . ஏற்கனவே ஆண்டவன் அயோக்கிய தனம் செஞ்சான் என்று சொல்லிகிட்டே , மக்களை கசக்கி பிழியும் வித்தைக்காரனுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X