பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.7 லட்சம் கட்டியும் இறந்த சோகம் மேலும் ரூ.4 லட்சம் கேட்ட கொடூரம்

Added : ஆக 31, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
 ரூ.7 லட்சம் கட்டியும் இறந்த சோகம் மேலும் ரூ.4 லட்சம் கேட்ட கொடூரம்

திருநெல்வேலி; 'கொரோனா சிகிச்சைக்கு, 7 லட்சம் ரூபாய் கட்டியும், இறந்த நோயாளியின் உடலை, 4 லட்சம் ரூபாய் தந்தால் தான் தருவோம்' என, தனியார் மருத்துவமனை கூறியதால், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி, மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர், 49 வயது, கேபிள் டிவி ஆப்பரேட்டர். கொரோனா பாதிப்பால், ஆக., 15ல், திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சை கட்டணமாக, 7 லட்சம் ரூபாய் செலுத்தினர். சிகிச்சை பலனின்றி, ஆக., 30ல் இறந்தார். உடலை உறவினர்களிடம் தர, மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது. 'மேலும், 4 லட்சம் ரூபாய் தந்தால் தான் உடலை தருவோம்' என தெரிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உறவினர்கள் நேற்று முன்தினம், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். '15 நாள் சிகிச்சைக்கு, 7 லட்சம் ரூபாய் செலுத்தியும், உயிர் பிழைக்கவில்லை. இறந்த பிறகும், 4 லட்சம் கேட்பது என்ன நியாயம்' என, கேள்வி எழுப்பி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.கடைசியில், 'கொரோனா நோயாளி உடலை எடுத்து செல்லும் உபகரணங்கள் வாங்க, 25 ஆயிரம் தாருங்கள்' என, மருத்துவமனை நிர்வாகம் இறங்கி வந்தது. 25 ஆயிரம் செலுத்திய பின், உடல் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
06-செப்-202016:27:35 IST Report Abuse
Yaro Oruvan ஆசுபத்திரி படத்த பாத்தா சந்துக்குள்ள எதோ கம்பவுண்டர் நடத்துற ஆசுபத்திரி மாதிரி இருக்கு.. இங்கேயா பதினஞ்சு லட்சத்துக்கு வைத்தியம் பாத்தானுவ??
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
03-செப்-202019:10:00 IST Report Abuse
Tamilnesan மருத்துவமனை பெயர், மற்றும் புகைப்படத்தை பார்த்தால் மாநாட்டில் கலந்து கொண்டவர் போல தெரிகிறது......
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
03-செப்-202019:07:37 IST Report Abuse
Tamilnesan எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே .........சொந்த நாட்டிலே .........நம் நாட்டிலே .........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X