தங்கத்துக்கு கிஸ்தி - சங்கத்தில் குஸ்தி| Dinamalar

தங்கத்துக்கு 'கிஸ்தி' - சங்கத்தில் 'குஸ்தி'

Added : ஆக 31, 2020 | |
ஓணம் பண்டிகையை கொண்டாட, தங்களின் தோழி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அவ்வழியே அரிசி மூட்டை ஏற்றிய லாரியை பார்த்தவுடன், ''அக்கா... பல்லடத்தில, ரெண்டரை டன் ரேஷன் அரிசி புடிச்சாங்களே. அது என்னாச்சுக்கா?'' என்றாள் மித்ரா.''மித்து, அரிசியை ஸ்டாக் வச்சிருந்தவங்க, மாவட்ட கவுன்சிலருக்கு சொந்தக்காரங்களாம். அதனால, எம்.எல்.ஏ.,வை வெச்சு, பஞ்சாயத்து பண்ணி அப்படியே
 தங்கத்துக்கு 'கிஸ்தி' - சங்கத்தில் 'குஸ்தி'

ஓணம் பண்டிகையை கொண்டாட, தங்களின் தோழி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அவ்வழியே அரிசி மூட்டை ஏற்றிய லாரியை பார்த்தவுடன், ''அக்கா... பல்லடத்தில, ரெண்டரை டன் ரேஷன் அரிசி புடிச்சாங்களே. அது என்னாச்சுக்கா?'' என்றாள் மித்ரா.''மித்து, அரிசியை ஸ்டாக் வச்சிருந்தவங்க, மாவட்ட கவுன்சிலருக்கு சொந்தக்காரங்களாம். அதனால, எம்.எல்.ஏ.,வை வெச்சு, பஞ்சாயத்து பண்ணி அப்படியே அமுக்கிட்டாங்களாம்,''''இதே, சாமான்யன், ஐந்து கிலோ அரிசி வச்சிருந்தா, விலங்கு போடாத குறையா கூட்டிட்டுப்போய் விசாரிக்கறாங்க. ரெண்டரை டன் இவங்களுக்கு சாதாரணமா போயிடுச்சு. இதெல்லாம், ரொம்ப ஓவர்டி. இப்ப சங்கமெல்லாம் எங்கே போச்சு,''''அக்கா... அவங்க சங்கத்துக்குள்ளயே எப்பபாரு சண்ட நடக்குது. இதுல, மக்களை எப்டி கண்டுக்குவாங்க. இதே பல்லடம் பக்கத்தில, சுக்கம்பாளையத்தில், கோழிப்பண்ணையால், ஈக்கள், மோசமான 'ஸ்மெல்' பத்தி, மக்கள் கலெக்டருக்கு பெட்டிஷன் போட்டாங்க. இதப்பத்தி தெரிஞ்சுகிட்ட, சேர்மனும், கவுன்சிலரும், எந்த ஆபீசர்கிட்டயும் சொல்லாம, கோழிப்பண்ணைக்கு போயிருக்காங்க,''''அப்புறம் என்னாச்சுடி''''ஊர் மக்கள் ஒன்னா சேர்ந்து, ஆபீசர் இல்லாம, எதுக்கு வந்தீங்கன்னு பிரச்னை பண்ணி, திருப்பி அனுப்பிச்சிட்டாங்களாம்,'' மித்ரா விளக்கினாள்.அவ்வழியே நொய்யல் பாலத்தை கடந்த போது, துர்நாற்றம் வீசியது. உடனே, சித்ரா, ''டையிங் பேக்டரிக்காரங்க பண்ண வேலய பாத்தியா?'' என கேட்டாள்.''தெரிலீங்களே''''பெரியபாளையத்துல, 'டையிங் பேக்டரி'க்கு, ரெண்டு இன்ச் குழாயில, முறைகேடா தண்ணீர் லைன் குடுத்து, ஒண்ணும் தெரியாதமாதிரி இருந்துட்டாங்க''''ஆனா, ஊராட்சி தொட்டிக்கு, தண்ணீர் கம்மியா போனப்பறம்தான், தலைவரும், துணை தலைவரும் ஆய்வு பண்ணப்ப, இது தெரிஞ்சுது. அதுக்குள்ள, தாமரை கட்சிக்காரங்க பஞ்சாயத்து பேசிட்டதாக ஒரு பேச்சு,''''ஓ... அவங்களும் ஆரம்பிச்சுட்டாங்களா?'' சிரித்த, மித்ரா, ''லிங்கேஸ்வரர் ஊர் பக்கத்தில இருக்கற, அம்மன் கோவிலில், பில் கட்டாததால், இ.பி., லைனை 'கட்' பண்ணிட்டாங்களாம்,'' அடுத்த மேட்டரை சொன்னாள்.''இதென்னடி கொடுமையா இருக்கு?''''ஆனா, இந்த விஷயம் இ.ஓ., கவனத்துக்கு போகலையாம். இதே மாதிரி, கோவில் மண்டபத்தை வாடகைக்கு விடுவது போன்ற பல விஷயங்களில் பல குளறுபடி நடக்குதாம்,''''அட... விடுடி. எல்லாத்தையும், அந்த சிவளாபுரி அம்மன் பாத்துப்பா,'' சொன்ன சித்ரா, குருவாயூரப்பன் கோவில் முன் வண்டியை நிறுத்தினாள்.சமூக இடைவெளியுடன், பக்தர்கள் நின்று கொண்டிருக்க, கைகளை 'சானிடைஸிங்' செய்து, இருவரும் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து, பிரகாரத்தில் அமர்ந்தனர்.''வெளிநாட்டுக்காரரை ஏமாத்துன விவகாரத்தில், சி.சி.பி.,தான் விசாரிக்கணும்னு, கமிஷனர் சொல்லிட்டார்,'' பிரசாதம் சாப்பிட்டவாறு சொன்னாள்.''ஓ... அந்த இலங்கைக்காரர் பிரச்னையா?''''யெஸ். இந்த விவகாரத்தில் கண்ணாம்பூச்சி ஆடிய, வடக்கால போலீஸ்காரங்க, சில லகரங்களை 'லபக்'கிட பிளான் போட்டது, கமிஷனருக்கு தெரிஞ்சு, இப்படி ஆர்டர் போட்டுட்டார்,''''சரிதானே,'' சொன்ன மித்ரா, ''சிட்டியில் ஆபீஸ் பிரிவில் உள்ள 'குளுகுளு' ஆபீசர், திருப்பூருக்கு வந்ததில் இருந்து, எந்த வேலையும் இல்லாம, ஜாலியா, 'மின்னல்' போல, எப்ப வர்றாரு, போறாருன்னு தெரியலையாம். இவருக்கு டியூட்டி போட யோசிக்கறது ஏன்னு தெரியலையாம்,'' என்றாள்.''ஒருவேளை, ஆளுங்கட்சி புள்ளிக்கு நெருக்கமோ என்னவோ,'' சொன்ன சித்ரா, ''குண்டடத்துக்கு பக்கத்துல, மீண்டும், முண்டுவேலம்பட்டி, ருத்ராவதியில, சேவல் கட்டு சக்கைபோடு போடுதாம். ஒற்றர் படை, துாங்கும் படையாயிடுச்சு போல,'' என்றாள்.''அவங்க துாங்கி ரொம்ப நாளாச்சுங்க. லிங்கேஸ்வரர் ஊரில், ஆதாருக்காக மக்களை அலைக்கழிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.''தாலுகா ஆபீசில் உள்ள, இ-சேவை மையத்தில், பொதுமக்கள் தக்க ஆவணத்துடன் சென்றாலும், அங்குள்ள நபர், ஏதாவது ஒரு காரணத்தை கூறி, மாதக்கணக்கில் அலைய விடறாராம். ஆதார் வாங்குறதுக்குள்ள, மக்களை நோக அடிக்கிறாரு. ஆனா, 'கவனிச்சா' வேல சட்டுனு முடியுதாம்,'' என்றாள் மித்ரா.அப்போது, அருகில் வந்தவரை பார்த்து, ''ஹாய், 'தினேஷ்' எப்படி இருக்க...'' என்று சித்ரா கேட்க, அவரும் பதில் சொல்லி நகர்ந்தார்.''மித்து, அதே ஊரில் தாலிக்கு தங்கம் பெற அப்ளிகேஷன் போடறவங்க கிட்ட, 'கட் அண்ட் ரைட்'டா, வசூல் பண்றாங்களாம்,''''சம்பந்தப்பட்ட செக் ஷனில் உள்ள ஒருவர், 'இத பாருங்க. பணம் குடுத்தாதான் பைல் மூவ் ஆகும். இல்லாட்டி பணம் வராது'னு, ஓப்பனா சொல்லியே வாங்குறாராம். மேலதிகாரிக்கு தெரிஞ்சுங்கூட, கண்டுக்காம இருக்காராம். பணம் குடுக்காட்டி, அப்ளிகேஷன் கேன்சல் ஆகுதாம்,'' என்றாள் சித்ரா.''அக்கா... அங்க மட்டுமல்ல. எல்லா கவர்மென்ட் ஆபீசிலும், 'கப்பம் கட்டுனாத்தான் காரியம் நடக்குது,'' சொன்ன மித்ரா, ''அக்கா, கெளம்பலாமா?'' என எழுந்தாள்.''மித்து போற வழியில, 'சத்யவாணி' ஸ்டோரில், 'கிப்ட்' வாங்கிட்டு போலாம்'' என்றவாறே, வண்டியை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X