பொது செய்தி

தமிழ்நாடு

பென்னிகுவிக் கல்லறை சேதம்: தமிழக விவசாயிகள் அதிருப்தி

Updated : செப் 01, 2020 | Added : செப் 01, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
கூடலுார் : லண்டனில் உள்ள, பென்னிகுவிக் கல்லறை சேதப்படுத்தப்பட்டு உள்ளதற்கு, தமிழக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.முல்லை பெரியாறு அணையைக் கட்டிய, ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுவிக், 1911 மார்ச், 9ல் லண்டனில் இறந்தார். இவரது கல்லறை, அங்குள்ள புனித பீட்டர்ஸ் சர்ச்சில் உள்ளது. இந்நிலையில், கல்லறையின் மேல்பகுதியில் இருந்த கல்துாண் கீழே விழுந்து, சேதமடைந்ததை சிலர்
பென்னிகுவிக், கல்லறை, சேதம்

கூடலுார் : லண்டனில் உள்ள, பென்னிகுவிக் கல்லறை சேதப்படுத்தப்பட்டு உள்ளதற்கு, தமிழக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

முல்லை பெரியாறு அணையைக் கட்டிய, ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுவிக், 1911 மார்ச், 9ல் லண்டனில் இறந்தார். இவரது கல்லறை, அங்குள்ள புனித பீட்டர்ஸ் சர்ச்சில் உள்ளது. இந்நிலையில், கல்லறையின் மேல்பகுதியில் இருந்த கல்துாண் கீழே விழுந்து, சேதமடைந்ததை சிலர் பார்த்துள்ளனர். இது குறித்து, அங்குள்ள போலீசில் புகார் கொடுத்ததுடன், தமிழக விவசாயிகளுக்கும் தகவல் அனுப்பியுள்ளனர். இதனால், தமிழக விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


latest tamil news


ரஞ்சித், முல்லைப் பெரியாறு மீட்புக்குழு தலைவர், கம்பம் : பென்னிகுவிக் கல்லறையை சேதப்படுத்திய பிரச்னையில், தமிழக அரசு, சென்னையில் உள்ள இங்கிலாந்து துணை தூதரை அழைத்து, விபரம் கேட்டறிய வேண்டும். விவசாயிகள் சார்பில், இங்கிலாந்து துாதருக்கு மனு அனுப்ப உள்ளோம்.


latest tamil news


கே.எம்.அப்பாஸ், விவசாய சங்க தலைவர், கம்பம் : தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக உள்ள பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுவிக், நீர் இருக்கும் வரை வணங்கக்கூடியவர். லண்டனில் உள்ள அவரது கல்லறை, சேதப்படுத்தப்பட்டதா அல்லது கல்துாண் பலத்த காற்றில் விழுந்து சேதமடைந்ததா என, ஆய்வு செய்ய வேண்டும். கல்லறையை சீரமைத்து பாதுகாக்க, நடவடிக்கை எடுப்பது அவசியம்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
01-செப்-202018:51:25 IST Report Abuse
Tamilnesan கல்லறை இருப்பதோ லண்டனில் (இங்கிலாந்து). அங்கு கல்லறை சேதமுற்றதற்கு, தமிழ்நாட்டில் எதற்கு கண்டனம்.? ஒரு சொலவடை உண்டு, "குத்தாலத்தில் இடி இடித்து, கொடைக்கானலில் மழை பெய்ததாம்" அது போல உள்ளது தமிழ்நாட்டு விவாசாயிகளின் மதியற்ற நடவடிக்கைகள். இதற்கு, குருமா, சைக்கோ, ஓசிச்சோறு போன்ற வெட்டி ஆபீசர்கள் எது சாக்கு கிடைக்கும் என்று கொடியுடன் கிளம்புவார்கள். ஒரு திரைப்படத்தில், விவேக் காமடி காட்சி தான் நினைவுக்கு வருகிறது. பொழுது போகவில்லை, கையில், அரிவாள், கடப்பாறைகளுடன் சண்டைக்கு சில கிராமத்தை சென்றவர்கள் கிளம்புவார்கள். அது போன்று உள்ளது. இங்குள்ள அரசியல்வியாதிகள் பொது மக்கள் வரிப்பணத்தை திருடி பல தலைமுறைகள் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு வசதியாக உள்ளனர். இவர்களுக்கு எந்த தண்டனையும் கிடையாது. உலகில், தண்டனைகள் இல்லாத நாடு முன்னேறியதாக சரித்திரம் இல்லை.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-செப்-202018:33:43 IST Report Abuse
தமிழவேல் இங்கு சிலர் சொல்வது போல நாமோ, அரசாங்கமோ இஷ்டத்திற்கு அதை சரி செய்துவிடமுடியாது. அது பொது மக்களுக்கு சொந்தமானதாக இருந்தால் அரசாங்கம் செய்யலாம். மற்றபடி அவரது குடும்பத்தினரின் அனுமதி தேவை.
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
01-செப்-202019:26:27 IST Report Abuse
RaajaRaja Cholanசம்பந்தப்பட்டவர்களின் அனுமதியுடன் தான் , அவர்கள் அனுமதித்தால் மட்டுமே , சிலர் தங்கள் நன்றியை இவ்வாறு காட்ட விரும்புகிறார்கள் , தவறில்லை , இதை எந்த ஆதாயத்துக்காகவோ செய்வது போல் தெரியவில்லை...
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-செப்-202022:38:05 IST Report Abuse
தமிழவேல் இதை அவ்வளவு சுலபமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இந்த நிலை அவர்களை கையாளாதவர்களாக்கும்....
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
01-செப்-202018:23:18 IST Report Abuse
Endrum Indian லண்டனில் 100 வருடத்திற்கும் மேலானதால் கொஞ்சம் பழுதடையும் இதையெல்லாம் பெரிதாக????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X