பொது செய்தி

தமிழ்நாடு

கோவையின் தேவை உணர்த்திய 22 விமானங்கள்: 'ஏர் பபுள்ஸ்' ஒப்பந்தத்தில் புறக்கணிப்பால் அதிர்ச்சி

Updated : செப் 01, 2020 | Added : செப் 01, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
கோவைக்கு, 'வந்தே பாரத்' திட்டத்தில், 22 விமானங்கள் இயக்கப்பட்டிருப்பது, கொங்கு மண்டல மக்களுக்கு வெளிநாட்டு விமான சேவை எவ்வளவு தேவை என்பதை உணர்த்தியுள்ளது.கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பின், பல்வேறு நாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக 'வந்தே பாரத் திட்டம்' துவக்கப்பட்டது. மே 7ல் துவங்கிய இந்த திட்டத்தில், 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்தியா
கோவையின் தேவை உணர்த்திய 22 விமானங்கள்: 'ஏர் பபுள்ஸ்' ஒப்பந்தத்தில் புறக்கணிப்பால் அதிர்ச்சி

கோவைக்கு, 'வந்தே பாரத்' திட்டத்தில், 22 விமானங்கள் இயக்கப்பட்டிருப்பது, கொங்கு மண்டல மக்களுக்கு வெளிநாட்டு விமான சேவை எவ்வளவு தேவை என்பதை உணர்த்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பின், பல்வேறு நாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக 'வந்தே பாரத் திட்டம்' துவக்கப்பட்டது. மே 7ல் துவங்கிய இந்த திட்டத்தில், 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.கடந்த ஜூனிலிருந்து கோவைக்கு, 'வந்தே பாரத்' திட்ட விமான சேவை துவங்கியது. இதுவரை 22 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. ஷார்ஜாவிலிருந்து ஏழு, சிங்கப்பூரிலிருந்து ஆறு, துபாயிலிருந்து ஐந்து விமானங்களும், அபுதாபி, மஸ்கட், தோஹா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து தலா ஒரு விமானமும், ஆயிரக்கணக்கான பயணிகளை கோவைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளன.
எந்த மாநிலத்தில் எந்த நகரத்திலுள்ள விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டுமென்ற விபரங்கள் கேட்கப்பட்டு, அதிலுள்ள எண்ணிக்கையின்படியே, விமானங்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் இடம் கிடைக்காதவர்கள், பக்கத்திலுள்ள வேறு ஏதாவது விமான நிலையங்களுக்குச் சென்று, அங்கிருந்து இ-பாஸ் மூலமாக விண்ணப்பித்து தங்கள் ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர்.


latest tamil news
நேரடி சேவை அவசியம்டில்லி, பெங்களூரு, சென்னை போன்ற விமான நிலையங்களுக்கு வந்து, அங்கிருந்து உள்நாட்டு விமான சேவை மூலமாகவும் கோவைக்கு பலர் வந்துள்ளனர். இதன்படி பார்த்தால், மேற்கு மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு இத்தனை நாடுகளுக்கு நேரடி விமான சேவை தேவைப்படுகிறது. மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு நாடுகளிலிருந்தே இந்த விமானங்கள் அதிகளவில் இயக்கப்பட்டுள்ளன.
இவற்றைத் தவிர்த்து, ஷார்ஜாவிலிருந்து ஏராளமான, 'சாட்டர் பிளைட் சர்வீஸ்' மூலமாக நேரடியாக பல ஆயிரம் பேர், கோவைக்கு வந்துள்ளனர். துபாய், அபுதாபி, சிங்கப்பூர், (தோஹா) கத்தார் போன்ற நாடுகளுக்கு கோவையிலிருந்து நேரடி விமான சேவையைத் துவக்கினால் நிச்சயமாக நல்ல வரவேற்பும் வருவாயும் கிடைக்குமென்பது உறுதியாகியுள்ளது.
இந்த கோரிக்கையை இனியாவது நிறைவேற்ற வேண்டுமென்று, 'கொங்கு குளோபல் போரம்' உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் மத்திய அரசிடம் எதிர்பார்க்கின்றனர்.ஆனால், சமீபத்தில் பல்வேறு நாடுகளுடன் விமான சேவையைத் துவக்குவதற்காக போடப்பட்ட, 'ஏர் பபுள்ஸ்' ஒப்பந்தத்திலும் கோவை விமான நிலையம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டியது அவசர அவசியம்.


6ம் கட்டத்தில் விடுபட்ட கோவை!வந்தே பாரத் திட்டத்தின் ஆறாம் கட்ட சேவைக்கான புக்கிங்கை நேரடியாகத் துவக்குவதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது. துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து இந்தியாவிலுள்ள, 18 விமான நிலையங்களுக்கு இந்த விமானங்கள் இயக்கப்படவுள்ளன. தமிழகத்திலுள்ள சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கேரளாவிலுள்ள கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு மற்றும் கண்ணனுார், கர்நாடகாவிலுள்ள பெங்களூரு, மங்களூரு ஆகிய விமான நிலையங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஆனால், கோவை சர்வதேச விமான நிலையத்தின் பெயர் இல்லை. -நமது நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
01-செப்-202017:28:51 IST Report Abuse
Malick Raja சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சி இருக்கிறது .. கோவையின் பொருளாதாரத்திற்கு வேறு வகையான அளவீடு .. மதுரையின் முன்னேற்றத்திற்கு வேறுவகையான கணிப்புக்கள் இருக்கையில் விமான சேவையில் சென்னைக்கு அடுத்து திருச்சி இருக்கவே வாய்ப்புக்கள் மேலதிகமாக இருக்கிறது
Rate this:
Cancel
Chidam - 325,இந்தியா
01-செப்-202014:01:08 IST Report Abuse
Chidam தின்னுங்கடா தின்னுங்க முடிஞ்ச வரை தின்னுங்க… கோடி கோடியா கொள்ளை அடிச்சவங்க கதை கடைசியில் என்னாச்சு அனாதை போல செத்ததும் .... சிறைத்தண்டனையும் தான் .... கடவுள் இருக்கிறார் மறக்க வேண்டாம்
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
01-செப்-202012:57:34 IST Report Abuse
தஞ்சை மன்னர் தவறான தகவல் சென்னை கரோண பதிப்பில் முன்னணியில் இருந்ததால் அங்கே சென்று வேறு இடங்களுக்கு செல்ல சரிப்பட்டு வரது என்று பலரும் தேர்ந்து எடுத்து கோவை மற்றும் மதுரை எனவே கோவை விட மதுரை திருச்சி சிறப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X