புதுடில்லி: மத்திய அரசு தொடர்ந்து தவறான பொருளாதார கொள்கைகளையே அறிமுகப்படுத்தியதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், ஜி.டி.பி., எனும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், இதுவரை இல்லாத வகையில், மைனஸ் 23.9 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்ட உற்பத்தி -23.9 சதவீதம்.
தேசத்தின் பொருளாதாரத்தை அழிப்பது ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தில் இருந்து துவங்கியது.
அப்போதிலிருந்து மத்திய அரசு தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக தவறான கொள்கைகளையே அறிமுகப்படுத்தியது.

GDP -23.9
देश की अर्थव्यवस्था की बर्बादी नोटबंदी से शुरू हुई थी।
तब से सरकार ने एक के बाद एक ग़लत नीतियों की लाइन लगा दी।https://t.co/rNewLiHfB2
— Rahul Gandhi (@RahulGandhi) September 1, 2020
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
ராகுல் சகோதரி பிரியங்கா வெளியிட்ட டுவிட்டர் பதிவு

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, பொருளாதார சுனாமி வரப்போகிறது என ராகுல் எச்சரித்தார். ஆனால், மத்திய அரசு வெற்றுத் தோற்றத்திற்காக மட்டும் நிதியுதவி திட்டங்களை அறிவித்தது. இப்போது, பொருளாதார நிலையை பாருங்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தி-23.9 % பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு தான் காரணம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
आज से 6 महीने पहले राहुल गांधी जी ने आर्थिक सुनामी आने की बात बोली थी।
कोरोना संकट के दौरान हाथी के दांत दिखाने जैसा एक पैकेज घोषित हुआ।
लेकिन आज हालत देखिए।
जीडीपी @ -23.9% जीडीपी।
भाजपा सरकार ने अर्थव्यवस्था को डुबा दिया। pic.twitter.com/nbeg5j0pdK
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) September 1, 2020
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE