பாங்காங் சோ ஏரியை ஒட்டியுள்ள பகுதியில் தற்போதுள்ள நிலையை மாற்றுவதற்கு, சீன ராணுவம் முயன்றது. கடந்த, 29ம் தேதி இரவில் இதற்கான முயற்சிகளில் சீன ராணுவம் இறங்கியது.தொடர்ந்து விழிப்புடன் கண்காணித்து வந்த நம் ராணுவம், இதை கண்டுபிடித்தது. உடனடியாக நம் படைகள் சென்று, சீனாவின் முயற்சியை முறியடித்தது. மேலும், சீன படைகளை விரட்டியடித்தது. ஆனால், சீன ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்திய வீரர்கள் தான், உண்மையான எல்லைக்கோட்டை தாண்டி வந்ததாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குளோபல் டைம்ஸ் நாளிதழில் வெளியாகியுள்ள தலையங்கம்: சீன ராணுவத்தின் ஊடுருவல் நடவடிக்கையை முன்கூட்டியே முறியடித்ததாக இந்தியா கூறியுள்ளது. முன்கூட்டியே என்ற வார்த்தை, இந்தியா அழிவுக்கான பாதையை தேர்வு செய்துள்ளதை காட்டுகிறது. இந்த முறை இந்திய ராணுவம் மோதலை துவங்கியுள்ளது. சக்திவாய்ந்த சீனாவை சந்தித்துள்ள இந்தியா, இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் பேச்சை கேட்கக்கூடாது. சீனாவுடன் மோதலை இந்திய விரும்பினால், அதனை சந்திக்கும் திறனும், ஆயுதங்களும் சீனாவிடம் உள்ளது. இந்திய ராணுவ பலத்தை காட்ட விரும்பினால், கடந்த1962 ல் இந்தியா சந்தித்ததை விட, அதிக இழப்பை ஏற்படுத்த சீன ராணுவத்தால் முடியும். இவ்வாறு அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE