6 மாதத்தில் மக்கள் அதிக வலியை அனுபவிப்பார்கள் என முன்பே கணித்தாராம் ராகுல்

Updated : செப் 02, 2020 | Added : செப் 01, 2020 | கருத்துகள் (44) | |
Advertisement
புதுடில்லி: அடுத்த 6 மாதத்தில் நாட்டு மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத வலியை அனுபவிக்கப் போகிறார்கள் என கடந்த மார்ச் மாதமே தெரிவித்ததாக, காங்., எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.இதுகுறித்து, காங்., எம்.பி., ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில், கடந்த மார்ச் 20ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் சிறு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: சுனாமி போல பொருளாதார
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: அடுத்த 6 மாதத்தில் நாட்டு மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத வலியை அனுபவிக்கப் போகிறார்கள் என கடந்த மார்ச் மாதமே தெரிவித்ததாக, காங்., எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

இதுகுறித்து, காங்., எம்.பி., ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில், கடந்த மார்ச் 20ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் சிறு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: சுனாமி போல பொருளாதார பிரச்னை பெரிதாக வரப்போகிறது. அரசை நான் தொடர்ந்து எச்சரித்து வருகிறேன். ஆனால் அவர்கள் என் பேச்சை மதிப்பதில்லை. அடுத்த மாதத்தில், நாட்டு மக்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வலியை அனுபவிக்கப் போகிறார்கள். இவ்வாறு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.


latest tamil news



நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், ஜி.டி.பி., எனும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், இதுவரை இல்லாத வகையில், மைனஸ் 23.9 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இந்நிலையில், தான் முன்னதாகவே கணித்திருப்பதாக பொருள்படும் வகையில், ராகுல் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா
02-செப்-202014:58:54 IST Report Abuse
Dr. Suriya அப்படியே இந்த தோஷத்திற்கு என்னா பரிகாரம்முன்னு சொல்லுங்க சாமியோ...
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
02-செப்-202012:47:24 IST Report Abuse
sridhar ஆகஸ்டுக்கு பிறகு September வரும் என்றும் துல்லியமாக சொல்லி இருப்பாரே .
Rate this:
Cancel
santha kumar - ruwi,ஓமன்
02-செப்-202012:00:50 IST Report Abuse
santha kumar நடுநிலைமை மாறும் பொழுது மிக வருத்தமாக உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X