பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.பி.பி., உடல்நிலை சீராக உள்ளது: மகளை பார்த்து மகிழ்ச்சி

Updated : செப் 02, 2020 | Added : செப் 02, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: ''எஸ்.பி.பி., உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதுடன், முன்னேற்றத்துக்கான அறிகுறிகளும் தென்படுகின்றன,'' என, அவரது மகன் சரண் நேற்று தெரிவித்தார்.கொரோனா பாதிப்புக்கு ஆளான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்,75, சென்னை, எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அவருக்கு, 'எக்மோ' உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ
SPB, GetWellSoonSPBSirm SP Balasubrahmanyam

சென்னை: ''எஸ்.பி.பி., உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதுடன், முன்னேற்றத்துக்கான அறிகுறிகளும் தென்படுகின்றன,'' என, அவரது மகன் சரண் நேற்று தெரிவித்தார்.

கொரோனா பாதிப்புக்கு ஆளான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்,75, சென்னை, எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அவருக்கு, 'எக்மோ' உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்திய மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையுடன், எம்.ஜி.எம்., மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். எஸ்.பி.பி., உடல் உறுப்புகள் சீராக இயங்கிவரும் நிலையில், நுரையீரல் செயல்பாட்டை இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்கான சிகிச்சைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது, அவருக்கு 'பிசியோதெரபி' சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக, அவரது மகன் சரண் தெரிவித்துள்ளது, அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.


latest tamil news


எஸ்.பி.பி., மகன் சரண் நேற்று சமூக வலைதளத்தில்,'அப்பாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதுடன், முன்னேற்றத்துக்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. இன்று(நேற்று) நானும், எனது சகோதரியும் மருத்துவமனைக்கு சென்றிருந்தோம். சகோதரியை பார்த்து அப்பா மகிழ்ச்சி அடைந்தார்' என, தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BJRaman - Chennai,இந்தியா
02-செப்-202013:55:43 IST Report Abuse
BJRaman இந்த உலகில், எல்லா தந்தைக்கும் பிடித்த உறவு மகள் மட்டுமே. பெருபாலான தந்தைகள், மகளின் மூலம் தனது தாயை காண்கின்றனர்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
02-செப்-202008:36:46 IST Report Abuse
Lion Drsekar இவர் மக்களின் பிரதிநிதி இல்லை ஆனால் உலகம் முழுவதும் ஜாதி, மத உணர்வு இல்லாமல் அனைவருமே தினம் தினம் வேண்டுகின்றனர், இதுதான் நாம், வந்தே மாதரம்
Rate this:
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
02-செப்-202010:22:57 IST Report Abuse
Yaro Oruvanதிரு எஸ் பி பி சார் ஒரு நல்ல மனிதர்.. மக்களை மகிழ்வித்து கொண்டிருப்பவர்.. அவர் நலம் பெற வேண்டும்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X