-பொருளாதார சீரழிவு

Added : செப் 02, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்து, நாட்டின் பொருளாதாரம் சீரழிய துவங்கியது. அதன் பின், ஒன்றன் பின் ஒன்றாக, அடுத்தடுத்து தவறான திட்டங்களை, பா.ஜ., அரசு அறிவித்து வருகிறது. இதன் பலனாக தான், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையில், 23.9 சதவீதம் குறைந்துள்ளது. ராகுல் , எம்.பி., -- காங்கிரஸ் அநீதி இழைக்கப்படுகிறது உத்தர பிரதேசத்தில், பா.ஜ., அரசின்
-பொருளாதார சீரழிவு


பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்து, நாட்டின் பொருளாதாரம் சீரழிய துவங்கியது. அதன் பின், ஒன்றன் பின் ஒன்றாக, அடுத்தடுத்து தவறான திட்டங்களை, பா.ஜ., அரசு அறிவித்து வருகிறது. இதன் பலனாக தான், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையில், 23.9 சதவீதம் குறைந்துள்ளது.
ராகுல் , எம்.பி., -- காங்கிரஸ்
அநீதி இழைக்கப்படுகிறது
உத்தர பிரதேசத்தில், பா.ஜ., அரசின் அட்டூழியங்களால், அனைத்து சமுதாய மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தலித் சமுதாய மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து இருப்பதும், அநீதி இழைக்கப்படுவதும், மிகுந்த கவலை அளிக்கிறது. இங்கு, 'காட்டு ராஜ்ஜியம்' நடப்பதை, வன்முறை சம்பவங்கள் உறுதி செய்கின்றன.
மாயாவதி , தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி
பத்திரிகையாளர்களுக்கு காப்பீடு
உத்தர பிரதேசத்தில், இளம் பத்திரிகையாளர், நீலன்ஷு சுக்லா, கொரோனாவுக்கு பலியாகி இருப்பது கவலை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு, மாநில அரசு நிதி உதவி அளிக்க வேண்டும். தங்கள் உயிரை பணயம் வைத்து, செய்தி சேகரிப்பில் ஈடுபடும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும், காப்பீடு திட்டத்தை, அரசு வழங்க வேண்டும்.
- பிரியங்கா, பொது செயலர், காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
02-செப்-202014:14:22 IST Report Abuse
தஞ்சை மன்னர் உத்திரபிரதேச மாநிலம் மக்கள் தொகை நிலம் மற்றும் நிர்வாக வசதிக்காக அது 6 மாநிலமாக அல்லது யூனியன் ஆகா பிரிக்கப்பட வேண்டும்
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
02-செப்-202009:38:46 IST Report Abuse
SAPERE AUDE எந்த பொருப்பும் ஏற்காமல் ட்விட்டரில் அறிக்கை விடுக்கொண்டிருந்தால் எந்த வித பயனுமில்லை.இதை நிறுத்திவிட்டு கட்சியை பலப்படுத்த உருப்படியாக ஏதாவது செய்தால் உதவியாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X