ஸ்டாலின் முதல்வராக வேண்டுதல்: குலதெய்வ கோயிலை புனரமைத்து வரும் துர்கா

Updated : செப் 02, 2020 | Added : செப் 02, 2020 | கருத்துகள் (179)
Advertisement
நாகை : முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்க வேண்டி தன் குல தெய்வமான அங்காளம்மன் கோயிலை புதுப்பித்து கட்டி வருகிறார் அவரது மனைவி துர்கா.இதுகுறித்து தி.மு.க., வட் டாரங்கள் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற வேண்டுதல் நிறைவேற கோரி முக்கிய கோயில்களில் வழிபாடு நடத்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா
DMk, Durga Stalin, MK Stalin, Stalin, துர்கா ஸ்டாலின், துர்கா, திமுக

நாகை : முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்க வேண்டி தன் குல தெய்வமான அங்காளம்மன் கோயிலை புதுப்பித்து கட்டி வருகிறார் அவரது மனைவி துர்கா.

இதுகுறித்து தி.மு.க., வட் டாரங்கள் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற வேண்டுதல் நிறைவேற கோரி முக்கிய கோயில்களில் வழிபாடு நடத்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா திட்டமிட்டுள்ளார்.அதற்காக நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் தன் குல தெய்வமான அங்காளம்மன் கோயிலை துர்கா புதுப்பித்து கட்டி வருகிறார்.

இந்த கோயிலின் பரிவார மூர்த்திகளை புனரமைத்து பிரகார மண்டபங்கள் கட்டும் பணிகளை சமீபத்தில் தன் குடும்பத்தினருடன் சென்று துர்கா பார்வையிட்டார். கோயில் புனரமைக்கப்பட்டு வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. சமீபத்தில் கோயில் புனரமைக்கும் பணிகளை துர்கா முகக்கவசம் அணிந்தபடி பார்வையிட்ட வீடியோ பதிவு சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.


latest tamil news


இந்த வீடியோவில் துர்காவிடம் கட்சி பிரமுகர் ஒருவர் 'கோயில் பணிகளை நீங்கள் வந்து பார்வையிட்டது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். நீங்கள் சிறியதாக ஆரம்பித்த கோயில் பணி ஆலமரமாக வளர்ந்து வருகிறது. கட்டுமான வேலை துவங்கி அஸ்திவாரம் துாண்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன' என்றார்.

குடும்ப ஜோதிடரின் ஆலோசனைப்படியே குல தெய்வம் கோயிலை புனரமைக்கும் பணிகளை துர்கா துவக்கி உள்ளார். அதன் தொடர்ச்சியாக பழநி, திருச்செந்துார் முருகன் கோயில்களில் பவுர்ணமி நாளில் வழிபாடு நடத்தவும் துர்கா திட்டமிட்டுள்ளார்.ராகு கேது பெயர்ச்சி ஒட்டி ஆன்மிக பயணங்களை அவர் மேற்கொள்ள இருக்கிறார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

Advertisement
வாசகர் கருத்து (179)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Ravichandran - Chennai,இந்தியா
05-செப்-202014:55:57 IST Report Abuse
Indian  Ravichandran அடேங்கப்பா ஊரை ஏமாத்த தனியா ட்ரைனிங் எடுத்த குடும்பம்டா சாமி. ஆனா சாமியவே ஏமாத்துவாங்கனு நினைச்சிக்கூட பாக்கல, ஆயிரம் கோவிலை இடித்து விட்டு ஒத்த கோவில் கட்டி சாமிய சமாதான படுத்துறாங்களாம்,
Rate this:
Cancel
vanthiyadevan - chennai,இந்தியா
04-செப்-202010:04:07 IST Report Abuse
vanthiyadevan உள்ளே சாமி கும்பிட்டுகொண்டு வெளியே வந்து இந்துக்களை கேவலபடுத்தி பேசுவது கடவுள் இல்லை என்பதை விட மன்னிக்க முடியாதது. வெளியே கண்டபடி பேசிவிட்டு உள்ளே போய் கடவுள் காலில் விழுந்து மன்னித்துவிடும்படிகதறுவது நமக்கு வேண்டுமானால் தெரியாமல் போகலாம் கடவுளுக்குமா தெரியாது?. மனிதர்களை ஏமாற்றலாம். கடவுளை ஏமாற்றமுடியாது. பாவத்திற்கு மேல், பாவம் செய்கிறார்கள். பாவத்திற்கு சம்பளம் தண்டனை. அந்த தண்டனையிலிருந்து, கோவில் கட்டி, தப்பித்து கொள்ள பார்க்கிறார்கள். அப்பவும் திருந்தாமல் கடவுளுக்கே லஞ்சம் கொடுக்க பார்க்கிறார்கள். மேலும் ஒரு பாவம். இதன் விளைவை அனைவருமே விரைவில் கண்கூட பார்க்கலாம். கடவுள் நிந்தனை அந்த கும்பத்தை என்ன செய்யும் என்பது போக போக தேரியும். இத்தனை மக்களுடைய சாபம் அவர்களை சும்மா விடாது.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
04-செப்-202005:39:56 IST Report Abuse
meenakshisundaram அதுலே முக வுக்கு தனி 'சன்னதி' உண்டா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X