டாக்டர் கபீல் கானுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி விடுதலை

Updated : செப் 02, 2020 | Added : செப் 02, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
Dr_KafeelKhan, Released, MathuraJail, NSA, கபீல்கான், தேசிய பாதுகாப்பு சட்டம், ரத்து, நிபந்தனை ஜாமின், விடுதலை

அலகாபாத்: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த டாக்டர் கபீல் கான் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம், நிபந்தனை ஜாமின் வழங்கி விடுதலை செய்யப்பட்டார்.

உ.பி., மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கோரக்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வந்தவர் கபீல் கான். கடந்தாண்டு, அலிகார் முஸ்லிம் பல்கலையில் நடந்த, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து, ஜனவரியில் கபீல் கான் கைது செய்யப்பட்டார். தேச விரோதமாக பேசியதாக கூறி, அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. மதுராவில் உள்ள சிறையில், அவர் அடைக்கப்பட்டார்.


latest tamil news


கபீல் கானின் தாய் நஷ்ரத் பர்வீன், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'என் மகனுக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம்' என, குறிப்பிட்டிருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி கோவிந்த் மர்துார் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டாக்டர் கபீல் கானுக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்த நீதிபதிகள், அவரை சிறையிலிருந்து உடனடியாக விடுவிக்கும் படியும் உத்தரவிட்டனர்.


latest tamil news


இது குறித்து நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: அலிகார் பல்கலையில் கபீல் கான் பேசிய அனைத்து விபரங்களையும் கவனமாக ஆய்வு செய்தோம். அதில், வன்முறையை ஏற்படுத்தும் வகையில், அவர் எதுவும் பேசவில்லை. அலிகார் நகரின் அமைதிக்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவர் எதுவும் பேசவில்லை. நாட்டு மக்களிடையே தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் தான், அவர் பேசியுள்ளார். கபீல் கான் பேசியதன் உள்ளார்ந்த அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல், குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, கபீல் கான் மீது, அலிகார் மாவட்ட கலெக்டர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். கலெக்டரின் இந்த நடவடிக்கை சட்டவிரோதம். கபீல் கானை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஒருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தால், எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யாமல், 12 மாதம் வரை, அவரை சிறையில் அடைக்க முடியும். கபீல் கான், கோரக்பூர் பி.ஆர்.டி., மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவில், 2017ல், டாக்டராக பணியாற்றியபோது, ஆக்சிஜன் சிலிண்டர் போதிய அளவில் இல்லாததால், 63 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக பலியாகின. கபீல் கானின் கவனக்குறைவு காரணமாகவே, இந்த சம்பவம் நடந்ததாக கூறி, அவர் கைது செய்யப்பட்டார். பின், இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து, கபீல் கான் விடுவிக்கப்பட்டார்.


latest tamil news
விடுதலை

டாக்டர் கபீல் கான் மீது தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்த நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. சிறையில் உள்ள டாக்டர் கபீல் கானை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரபிரதேசத்தின் மதுரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த டாக்டர் கபீல் கான் நள்ளிரவு 11 மணியளவில் விடுதலை செய்யப்பட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkat - Chennai,இந்தியா
02-செப்-202017:34:49 IST Report Abuse
Venkat நாட்ட பத்தி தப்பா பேசுனாவன தேசிய பாதுகாப்பு சட்டம் இல்லேனு சொல்லிட்டாங்க ..ஆனா தமிழ்நாட்டுல பெரியார் மீது தம்மா துண்டு சாயம் பூசினவனுக்கு தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்து ...நல்ல சட்டம் .
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
02-செப்-202014:56:25 IST Report Abuse
Anand //கபீல் கான் பேசியதன் உள்ளார்ந்த அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல், குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு// யுவர் ஹானர் நீங்கள் இவனை விடுவிக்க சொல்லி கூறிய இதே வார்த்தையை மேற்படி வழக்கு பதிவு செய்தவர்கள் திருப்பி உங்களிடம் கூறி விடுவிக்க கூடாது என கூறினால் உங்களின் பதில் என்னவோ?
Rate this:
Cancel
02-செப்-202013:32:13 IST Report Abuse
Ganesan Madurai அதாவது முல்லா என்ன கேவலமா பேசினாலும் இடதுசாரி நீதிபதிகள் இருக்கும் வரை தண்டனை கிடையாது.
Rate this:
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
02-செப்-202018:10:30 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலைதீர்ப்பு சாதகமா இல்லைன்னா எப்படித்தான் சொல்லுவிங்களா? அப்போ உங்களுக்கு சாதகமா தீர்ப்பு சொன்னவங்கள்லாம் உங்க ஆளுங்களா? தயவு செய்து நீதிபதிகளை சந்தேகிக்கதிர்கள். பாரத மக்கள் இன்னும்கூட ஒற்றுமையாக சச்சரவின்றி இருப்பதற்கு நீதிமன்றங்களே உதவுகின்றன....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X