பொது செய்தி

இந்தியா

நம்பிக்கைதானே வாழ்க்கை: வேற என்ன பண்றது

Updated : செப் 02, 2020 | Added : செப் 02, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
கட்சி தொடங்கி, 13 ஆண்டுகள் கடந்து, 14ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். கடந்து வந்த பாதையை எண்ணிப் பார்க்கிறேன். என்னை அறியாமல் ஒரு மகிழ்ச்சி, பூரிப்பு, பிரமிப்பு, புத்துணர்ச்சி. கொரோனா தொற்று, இதுவும் கடந்துபோகும் என்ற நம்பிக்கையுடன், மன உறுதியுடன், உடல் உறுதியுடன், புதிய உத்வேகத்துடன் பாடுபடுவோம்.'நம்பிக்கை தான் வாழ்க்கை; நம்புவோம், வாழ்வோம்...' என, கூறத் தோன்றும்
நம்பிக்கைதானே வாழ்க்கை: வேற என்ன பண்றது

கட்சி தொடங்கி, 13 ஆண்டுகள் கடந்து, 14ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். கடந்து வந்த பாதையை எண்ணிப் பார்க்கிறேன். என்னை அறியாமல் ஒரு மகிழ்ச்சி, பூரிப்பு, பிரமிப்பு, புத்துணர்ச்சி. கொரோனா தொற்று, இதுவும் கடந்துபோகும் என்ற நம்பிக்கையுடன், மன உறுதியுடன், உடல் உறுதியுடன், புதிய உத்வேகத்துடன் பாடுபடுவோம்.


'நம்பிக்கை தான் வாழ்க்கை; நம்புவோம், வாழ்வோம்...' என, கூறத் தோன்றும் வகையில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் அறிக்கை.



கொரோனா காலம் முடியும் வரை, வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் வழங்கிய அனைத்து வகை கடன்களுக்கான தவணைகளையும் ஒத்திவைக்க வேண்டும். இதற்கான வட்டியையும் ரத்து செய்ய வேண்டும்.


'எத்தனை முறை தான், இதை வலியுறுத்தி இருப்பீர்கள்; எனினும், ரிசர்வ் வங்கி மனம் இறங்க மாட்டேன் என்கிறதே; அதனால், மும்பையில், ரிசர்வ் வங்கி முன் போராட்டத்தை அறிவித்து விடுங்களேன்...' என, 'அட்வைஸ்' கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை.



'இ-பாஸ்' முறை ரத்து என்பது உட்பட, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்திய விஷயங்களை அச்சு பிசகாமல் அறிவித்துள்ளார், தமிழக முதல்வர், இ.பி.எஸ்., 10ம் வகுப்பு, -கல்லுாரித் தேர்வு ரத்து என, அனைத்திலும் தமிழகத்தின் அறிவிக்கப்படாத முதல்வராக, ஸ்டாலின் சொல்கிறார்; இ.பிஎஸ்., செய்கிறார்.


latest tamil news





'இதன் மூலம், 'செய்வதைத் தான் சொல்வோம்; சொல்வதைத் தான் செய்வோம்' என்கிறீர்களா...' என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர், உதயநிதி ஸ்டாலின் அறிக்கை.



வரும், 2021 தேர்தலுக்கு பிறகு, தமிழகத்தில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக, பா.ஜ., உருவெடுக்கும். இரட்டை இலக்கத்தில் எங்கள் கட்சியினர், தேர்தலில் வெல்வர். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவின்றி ஆட்சி அமைக்க முடியாது.


'பத்தும் இரட்டை இலக்கம் தான்; 99ம் இரட்டை இலக்கம் தான். ஒற்றை இலக்கம் கூட கிடைக்காது என்கின்றனர், பிற கட்சித் தலைவர்கள்...' என, போட்டுக் கொடுக்கத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., தலைவர் முருகன் பேட்டி.



கொரோனா வைரஸ், ஆண்டவன் கொடுத்த தண்டனை என, தமிழக அமைச்சர்களில் ஒருவர் கூறியுள்ளார். உங்கள் ஆட்சி, நாங்களே எங்களுக்கு தந்து கொண்ட தண்டனை. இவர்களைப் போன்றவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு, ஜெ., ஆட்சி நடத்தியதே ஒரு சாதனை தான்.


'கொரோனாவை அவர்கள் சாபம் என்கின்றனர். அது, எப்படி வந்தது என்றாவது, உங்களால் சொல்ல முடியுமா...' என, மடக்கத் தோன்றும் வகையில், தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
02-செப்-202018:33:46 IST Report Abuse
S. Narayanan இம்முறை சரத்குமார் தேர்தலில் ஓரளவு மக்கள் மனதில் இடம் பிடிப்பார்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
02-செப்-202009:29:59 IST Report Abuse
vbs manian தமிழ் துறையில் குறைவாக இருக்கும் ஜெண்டில் மேன்களில் இவரும் ஒருவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X