நியூயார்க்: 'ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், சீர்திருத்தம் தொடர்பான பேச்சு வார்த்தையை, சில நாடுகள் தடுத்து வருகின்றன' என, இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர், திஜ்ஜானி முகமது பண்டேவுக்கு, ஐ.நா.,வுக்கான இந்தியாவின் துணை நிரந்தர துாதர், நாகராஜ் நாயுடு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்; அதில், சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என, இந்தியா பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இந்தியா, பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இடம் பெற, பல நாடுகள் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளன.

பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக, பேச்சும் துவங்கியது. கொரோனா பரவல் காரணமாக, இந்த பேச்சு தொடர்வதில், தடை ஏற்பட்டது. இதை வைத்து, பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் தொடர்பான பேச்சு வார்த்தையை தொடர்ந்து நடத்த விடாமல், சில நாடுகள் முயற்சித்து வருகின்றன. இது, பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதை தடுக்கும் முயற்சி. செப்டம்பரில் நடக்க உள்ள, ஐ.நா., பொது சபை கூட்டத்தில், பாதுகாப்பு கவுன்சிலில் மேற்கொள்ளப்படும் சீர்த்திருத்தம் தான், முக்கியமான விஷயமாக இடம் பெற வேண்டும். இவ்வாறு, அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE