பிஎம் கேர்ஸ் நிதிக்கு 5 நாளில் ரூ.3,076 கோடி நிதி: நன்கொடையாளர்கள் பெயரை வெளியிட சிதம்பரம் வலியுறுத்தல்

Updated : செப் 02, 2020 | Added : செப் 02, 2020 | கருத்துகள் (55)
Share
Advertisement
PM_CARES, Donors, Chidambaram, பிஎம் கேர்ஸ், நிதி, நன்கொடை, பெயர், ப.சிதம்பரம்

புதுடில்லி: பிஎம் கேர்ஸ் நிதிக்கு மார்ச் 26 முதல் 31ம் தேதி வரையிலான 5 நாட்களில் ரூ.3,076 கோடி பெறப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், நன்கொடையாளர்களின் பெயரை வெளியிட ஏன் அச்சப்படுகிறார்கள் என காங்., எம்பி சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் (PM-CARES) நிதிக்கு பலரும் நிதியளித்து வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் மத்திய தணிக்கை அறிக்கை, பிஎம் கேர்ஸ் நிதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த அறிக்கையில், நிதி வழங்கிய நன்கொடையாளர்கள், உள்நாட்டு அல்லது வெளிநாட்டு பங்களிப்பாளர்களா என்பது குறித்து எந்தவித தகவலும் அரசாங்கத்தால் வெளியிடப்படவில்லை. இதில் ரூ,3,075.85 கோடி உள்நாட்டிலிருந்தும், ரூ.39.67 லட்சம் வெளிநாட்டிலிருந்தும் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், யாரெல்லாம் இந்த 5 நாட்களில் நன்கொடை அளித்தார்கள், அந்த வெளிநாட்டு, உள்நாட்டு நன்கொடையாளர்கள் பெயர் என்ன என்பது குறித்த விவரங்கள் இல்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news


இதுதொடர்பாக காங்., எம்பி., ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டதாவது: பிஎம் கேர்ஸ் நிதி தொடங்கப்பட்டதிலிருந்து 2020, மார்ச் 26 முதல் 31ம் தேதி வரை 5 நாட்களில் ரூ.3,076 கோடி நிதி வந்துள்ளது என பிஎம் கேர்ஸ் தணிக்கையாளர்கள் உறுதி செய்துள்ளார்கள். ஆனால் இந்த தாராள நன்கொடையாளர்களின் பெயர்கள் வெளியிடப்படாதது ஏன்?. ஒவ்வொரு தொண்டு நிறுவனமும் அல்லது அறக்கட்டளையும் தாங்கள் பெற்ற குறிப்பிட்ட அளவு நன்கொடை குறித்த விவரத்தையும், நன்கொடை அளித்தவர்கள் பெயரையும் வெளியிடக் கடமை இருக்கிறது.


latest tamil news


இந்தக் கடமையிலிருந்து பிஎம் கேர்ஸ் நிதிக்குக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இந்த நன்கொடையாளர்கள் நன்கு அறியப்பட்டவர்கள்தான். அறக்கட்டளையாளர்களுக்கும் நன்கொடையாளர்களை நன்கு தெரியும். பின் எதற்காக அறக்கட்டளை நிர்வாகிகள், நன்கொடை அளித்தவர்கள் பெயரை வெளியிட அச்சப்படுகிறார்கள்?. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkata achacharri - india,இந்தியா
03-செப்-202009:20:55 IST Report Abuse
venkata achacharri உங்களைப்போல நாங்கள் பாக்கெட்டை நிரப்புவது இல்லை நீங்கள் ஐயை போல மாட்டிக்கொள்வீர்கள் அனல் கலைஞர் போல எங்களுக்கு வழி தெரியும் அத வித்யாசம் உங்களுக்கு இன்னும் புரியவில்லையெய்
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
02-செப்-202022:17:51 IST Report Abuse
adalarasan இது தனிப்பட்ட நிதி, டிரஸ்ட் இல்லைபணத்தை கையாளுபுவார்கள், அரசாங்கத்தின் உத்தரவுப்படி, அரசாங்க ஊழியர்கள்? தனிப்பட்ட முறையில், கொரநா விற்க்காக, உதவி செய்ய பயோகப்பட்டு வருகிறது. தணிக்கையும் செய்யப்பட்டு வருகிறதுஅப்படியே,டர்.நாயாக, போன்றவர்கள் கொடுத்து இருந்தாலும் மக்களுக்கு, வேண்டியேட்டர்ஸ்,மருந்துகள், மற்ற உபகரணங்கள் வாங்க செலவு செய்யப்படுகிறதுபிரதமர் என்றுதான், இருக்கிறதுஇன்று மோடி அவர்கள்,பிரதமர், நாளை வேறு யாரேனும் பிரதமராக்கலாம்.? அனால் உங்களுடையது, கட்சி தலைமை குடும்பத்தினரால், ஆட்சி செய்யப்படுகிறது?ரகசியம், பரம ரகசியம் சட்டப்படி எது சரி, தவறு என்பதை கோர்ட், முடிவு செய்யும்
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
02-செப்-202021:33:46 IST Report Abuse
mathimandhiri உங்கள் பிரதமர் நிதி கட்சி நிதி என்பதன் உரை மேல் இட்ட விலாசம். உண்மையான விலாசம் என்பது உறைக்குள் உள்ளது. இந்த விலாசத்தின் பெயரில் உள்ளே இருக்கும் விலாசத்துக்கு நிதி வருகிறது. இதுவே அதன் சிறப்பம்சம். பி.எம். கேர்ஸ் இல் இந்த தீர்க்கமான சிறப்பு அம்சமெல்லாம் கிடையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X