பொது செய்தி

இந்தியா

எப்படியாவது கட்சிக்கு கூட்டத்தை கூட்ட முயற்சிக்கிறீர்கள்?

Updated : செப் 03, 2020 | Added : செப் 03, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
பா.ஜ.,வில் யார் வேண்டுமானாலும் சேரலாம். சேர்ந்த பிறகு அவர்கள் ஏதாவது தவறுகள், குற்றங்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.'நல்லவர்கள், வல்லவர்கள், நியாயமானவர்கள் நிறைந்த கட்சி, பா.ஜ., என்ற பெயர் வெளியே உள்ளது. ஆனால் நீங்கள், யார் வேண்டுமானாலும் வரலாம் என்கிறீர்கள்; எப்படியாவது, கட்சியில் கூட்டத்தைக் கூட்ட முயற்சிக்கிறீர்களோ என்ற சந்தேகம்
முருகன், அன்பழகன்

பா.ஜ.,வில் யார் வேண்டுமானாலும் சேரலாம். சேர்ந்த பிறகு அவர்கள் ஏதாவது தவறுகள், குற்றங்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


'நல்லவர்கள், வல்லவர்கள், நியாயமானவர்கள் நிறைந்த கட்சி, பா.ஜ., என்ற பெயர் வெளியே உள்ளது. ஆனால் நீங்கள், யார் வேண்டுமானாலும் வரலாம் என்கிறீர்கள்; எப்படியாவது, கட்சியில் கூட்டத்தைக் கூட்ட முயற்சிக்கிறீர்களோ என்ற சந்தேகம் எழுகிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில தலைவர் முருகன் பேட்டி.மானியம், கடன் தள்ளுபடி போன்ற தற்காலிக சலுகைகளுக்காகத் தான், பெரும்பாலான விவசாயிகள் போராடுகின்றனரே தவிர, அவர்களின் கோரிக்கைகளை தீர்க்கும் நிரந்தர அமைப்பான, விவசாயிகள் கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என, அவர்கள் போராடுவதே இல்லை.


'இப்படித் தானுங்க, நிறைய பேர், எதற்காக போராட வேண்டும்; எதற்கு போராடக் கூடாது என தெரியாமல், எதற்கெடுத்தாலும் போராட்டம் என போராடி, தமிழகத்தை, கேரளா போல மாற்றி வருகின்றனர்...' என, வேதனை தெரிவிக்கத் தோன்றும் வகையில், தமிழக விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் செயலர் நல்லசாமி அறிக்கை.ஜெயலலிதாவின் பல கொள்கைகளை பின்பற்றி தான், முதல்வர் இ.பி.எஸ்., 'தேர்வுக்கு பணம் செலுத்திய அனைத்து உயர்கல்வி மாணவர்களுக்கும், 'ஆல் பாஸ்' வழங்கியுள்ளார். இதன் மூலம், அவர்கள் தேர்வு எழுத வந்து, கொரோனா நோய் தொற்று ஏற்படுவதில் இருந்து காத்துள்ளார்.


latest tamil news

'ஏதாவது, சிக்கலான திட்டங்களை அறிவித்து, அதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு காணப்பட்டால், 'அம்மா வழியை பின்பற்றும் அரசு நாங்கள்' என்கிறீர்கள். அவர் வந்து தட்டிக் கேட்க மாட்டார் என்ற தைரியம் தானே...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் பேச்சு.பொதுமக்களிடம் நெஞ்சை நிமிர்த்தி, ஓட்டு கேட்கும் தகுதி, அ.தி.மு.க.,வுக்கு மட்டுமே உண்டு. ஏனென்றால், அவ்வளவு மக்கள் நலப் பணிகளை நம் அரசு செய்துள்ளது.


'இப்படியே சொல்லிக் கொண்டு, ஓட்டு கேட்கச் சென்று விடாதீர்கள்; கொரோனாவுக்கு பின், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், சட்டசபை துணைத் தலைவர் ஜெயராமன் பேச்சு.மாநிலம் முழுதும், பல தளர்வுகளை அறிவித்துள்ள மாநில அரசு, 144 தடை உத்தரவை வாபஸ் பெறாமல் உள்ளது. அதுபோல, மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளதும், கேலிக் கூத்தாக உள்ளது.


'எதற்கெடுத்தாலும், மாநில அரசை கண்டிக்கும் உங்கள் செயல் தான், கேலிக்கூத்தாக உள்ளது...' என, கண்டிக்கத் தோன்றும் வகையில், இந்திய கம்யூ., மாநில தலைவர் முத்தரசன் அறிக்கை.


Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BJRaman - Chennai,இந்தியா
03-செப்-202017:28:41 IST Report Abuse
BJRaman அறுபத்தி சொச்சம் என்று சொன்னார்கள். கூட்டத்தை சொல்லி இருப்பாரோ?
Rate this:
03-செப்-202018:53:54 IST Report Abuse
234 லட்சியம்   180 நிச்சயம்  வெற்றி இல்லை மொத வோட்டு 60 என்று சொல்லி இருப்பாரோ...
Rate this:
Cancel
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
03-செப்-202016:19:48 IST Report Abuse
த.இராஜகுமார் பொய் புழுகினாலும் ஒரு அளவு வேண்டாமா நல்லவர்கள், வல்லவர்கள், நியாயமானவர்கள் நிறைந்த கட்சி, பா.ஜ., என்ற பெயர் வெளியே உள்ளது. 
Rate this:
அப்பாவி - coimbatore,இந்தியா
03-செப்-202018:14:11 IST Report Abuse
அப்பாவிஇவனுக்கு எப்போதும் புளுகுவாங்க. அது அவனுக இயல்பு....
Rate this:
Cancel
03-செப்-202013:12:25 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) கழகங்களில் முன்னாள் ரவுடிகள் தற்போது அரசியல்வாதியாக இருக்கின்றனர், அந்த மோசமான கலாசாரத்தை பாஜக கையில் எடுக்க கூடாது. நல்லவர்களை சேருங்கள் நல்லவர்களுடன் கூட்டணி அமையுங்கள். .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X