அரசியல் செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்த் காலில் விழும் தலைவர்கள்; சர்ச்சைக்குரிய கார்ட்டூனை வெளியிட்டு நீக்கிய சுதிஷ்

Updated : செப் 03, 2020 | Added : செப் 03, 2020 | கருத்துகள் (50)
Share
Advertisement
சென்னை: பேஸ்புக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலில் மற்ற கட்சியினர் விழுவது போன்ற சர்ச்சைக்குரிய புகைப்படத்தை பதிவிட்ட தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதிஷ், கடும் சர்ச்சையானதும் சிறிது நேரத்தில் பதிவை நீக்கினார்.அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக, தொடர்ந்து கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. தனித்து போட்டியிட்டு பெரிதளவில் வெற்றி
DMDK, Vijayakanth, Cartoon, தேமுதிக, விஜயகாந்த், கார்ட்டூன், சுதிஷ், நீக்கம்

சென்னை: பேஸ்புக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலில் மற்ற கட்சியினர் விழுவது போன்ற சர்ச்சைக்குரிய புகைப்படத்தை பதிவிட்ட தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதிஷ், கடும் சர்ச்சையானதும் சிறிது நேரத்தில் பதிவை நீக்கினார்.

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக, தொடர்ந்து கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. தனித்து போட்டியிட்டு பெரிதளவில் வெற்றி கிடைக்காமல், கடந்த 2011 சட்டசபை தேர்தலில் அதிமுக.,வுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சி அந்தஸ்து வரை முன்னேறியது. ஆனாலும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடனான பிரச்னை காரணமாக கூட்டணியை விட்டு வெளியேறியது. 2016ல் நடந்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் இவர் தலைமையில் அமைந்த கூட்டணி அனைத்தும் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.


latest tamil news


இதனால், மீண்டும் அதிமுக., பாஜ., இருக்கும் கூட்டணியை நாடிச் சென்றது தேமுதிக. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி குறித்து மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ‛தொண்டர்கள் தனித்து களம் காண விரும்புவதாக' பேசி வருகிறார். இந்நிலையில் அக்கட்சியின் துணைச் செயலாளர் சுதீஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு கார்டூனை வெளியிட்டுள்ளார். அதில், விஜயகாந்த் காலில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் விழுந்திருப்பது போல் அந்த கார்ட்டூன் அமைந்துள்ளது.


latest tamil news


மஞ்சள் துண்டுடன் ஒருவரும், கருப்பு சட்டையுடன் ஒருவரும், மற்றவர்கள் அனைவரும் வெள்ளை வேட்டி, சட்டையுடனும் விஜயகாந்த காலில் விழுவது போன்ற கார்டூன் படத்தை வெளியிட்டார். இந்த கார்ட்டூனைப் பார்த்த திமுக உள்ளிட்ட மற்ற கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். கடும் எதிர்ப்பு கிளம்பியதால், தற்போது சுதீஷ் இதனை நீக்கியுள்ளார்.


பதிவை நீக்கியது ஏன்: சுதிஷ் விளக்கம்


இந்த பதிவை நீக்கியது தொடர்பாக விளக்கமளித்து சுதீஷ் வெளியிட்ட விளக்கம்: கடந்த 2016 ம் ஆண்டு தினமலர் தேர்தல் களத்தில் வெளியிட்ட கார்ட்டூனை தான் தற்போது பேஸ்புக்கில் பதிவிட்டேன். அன்று அவர்கள் போட்ட கார்ட்டூனுக்கும், இன்று அவர்கள் வெளியிட்டுள்ள கார்ட்டூனுக்கும்(விஜயகாந்தை ஏலம் விடுவதை போல சித்தரித்து) உள்ள வேறுபாட்டை தமிழக மக்கள் அறியேவே பேஸ்புக்கில் பதிவிட்டேன். அது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதால், உடனடியாக நீக்கிவிட்டேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
06-செப்-202013:36:41 IST Report Abuse
Malick Raja முகவரி இல்லாமல் போவதற்கு வேறொன்றும் செய்யவேண்டியதில்லை .. ஏற்கனவே நடக்க ,பேச ,உட்கார ,எழுந்திருக்க முடியாத விஜயகாந்த் என்பதை கூட உணராமல் இருப்பதும் அறிவீனம் . சபாஷ் .தொடரட்டும் ..விரையில் முடியட்டும் ..
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் கார்ட்டூனில் இரண்டு உருவங்களை தவிர்த்திருக்கலாம் எல்லை மீறி போயுள்ளது பேச்சு சுதந்திரத்துக்கு எல்லையுண்டுன்னு சொல்கிறார்கள் அது கார்ட்டூன்களுக்கும் பொருந்துமல்லவா
Rate this:
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
05-செப்-202018:50:59 IST Report Abuse
KavikumarRam கார்ட்டூன் சரியாதான இருக்கு. பிறகு ஏத்துக்கு நீக்கினார்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X